என் மலர்
சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #SK13 #Sivakarthikeyan
ரவிக்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் `இன்று நேற்று நாளை'. காலத்தை கடந்து செல்வதை மையப்படுத்தி அறிவியல் படமாக உருவான இந்த படம் ரிலீசாகி இன்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு தனது அடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருப்பதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“இன்று நேற்று நாளை” வெளியாகி இன்றோடு மூன்றாண்டு நிறைவுற்றது! கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை. நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!
என்று தெரிவித்துள்ளார்.
ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க இருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர். #SK13 #Sivakarthikeyan
Next Story