என் மலர்
சினிமா

சாமி-2 படத்தில் காலா கனெக்ஷன்
ரஜினி நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் கதைக்கும், காலா படத்தின் கதைக்கும் கனெக்ஷன் இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram
நேற்று முன் தினம் வெளியான காலா திரைப்படத்தில் ராமருக்கும் ராவணனுக்குமான போர் ஒரு குறியீடாக சேர்க்கப்பட்டிருந்தது. ராமனை ராவணன் வெல்வது போல காட்டப்பட்டது.
விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகும் சாமி2 படமும் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டுதான் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. முந்தைய பாகத்து ஆறுசாமியின் மகன் ராமசாமியாக விக்ரம் வருகிறார்.
அவருக்கு எதிரிகளாக முந்தைய பாகத்துக்கு பெருமாள் பிச்சையின் மகன்களான ராவண பிச்சை, தேவேந்திர பிச்சை, மகேந்திர பிச்சை ஆகியோர் வருகின்றனர். தனது தந்தை ஆறுசாமியை கொன்ற இந்த மூவரையும் மகன் ராமசாமி பழிவாங்குவதே படத்தின் கதை.

அம்மா வேடம் என்பதாலும் சில நிமிடங்களே வரும் தோற்றம் என்பதாலும் தான் திரிஷா, சாமி-2 படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். திரிஷா கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். எனவே அம்மா வேடத்தில் நடித்தால், தனது மார்க்கெட் இறங்குமே என்று யோசித்திருக்கிறாராம்.
சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தின் டீசருக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கிறது. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SaamySquare #Vikram
Next Story






