என் மலர்

  சினிமா

  சென்னையின் 2 பிரபல திரையரங்குகளில் காலா ரிலீசாகாது - படக்குழு அறிவிப்பு
  X

  சென்னையின் 2 பிரபல திரையரங்குகளில் காலா ரிலீசாகாது - படக்குழு அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில், சென்னையின் இரண்டு பிரபல திரையரங்குகளில் காலா ரிலீசாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Kaala #Rajinikanth
  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

  காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படம் சென்னையின் பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த 2 திரையரங்குகளில் படம் வெளியாகாதது குறித்து சில வதந்திகள் வெளியான நிலையில், வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். #Kaala #Rajinikanth

  Next Story
  ×