என் மலர்
சினிமா

சாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த மோஷன் வீடியோவின் முடிவில் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.
தூத்துக்குடி கலவரத்தால் அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்தது. டிரைலர் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram
Next Story






