என் மலர்
சினிமா

கார்த்தியின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?
கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த சில தகவல் வெளியாகி இருக்கிறது. #Karthi17 #RakulPreetSingh
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் ஜூலையில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார்த்தி அடுத்ததாக அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் ஒரு கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல்பிரீத்தி சிங் நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இணைந்து நடித்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

கார்த்தி, ரஜத் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு `தேவ்' என்னும் பெயரை சூட்டலாம் என்று ஆலோசனை நடக்கிறது. கார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். #Karthi17 #RakulPreetSingh
Next Story






