என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    ரஜினிகாந்த்துடன் சிவகுமார் இணைந்து நடித்த "புவனா ஒரு கேள்விக்குறி'', மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.
    ரஜினிகாந்த்துடன் சிவகுமார் இணைந்து நடித்த "புவனா ஒரு கேள்விக்குறி'', மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.

    "பத்ரகாளி'' படத்தின் கதாசிரியரான "மகரிஷி''தான், இந்தப் படத்திற்கும் கதை ஆசிரியர். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

    இந்தப் படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமார், பெண்களை ஏமாற்றிக் கெடுக்கும் "ஆன்டி ஹீரோ''வாக இதில் நடித்தார். வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த ரஜினிகாந்த், தோற்றத்தால் முரடராகவும், உள்ளத்தால் நல்லவராகவும் நடித்தார். சுமித்ரா, கதாநாயகி. சிவகுமாரால் ஏமாற்றப்படும் அவரை, ரஜினி காப்பாற்றி ஆதரிப்பார். 1977 செப்டம்பர் 2-ந்தேதி இப்படம் வெளிவந்தது.

    ஆழமான கதை. நடிகர்களின் மாறுபட்ட நடிப்பு. இனிய பாடல்கள். எல்லாமாகச் சேர்ந்து, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, ரஜினியின் திரை உலக வாழ்க்கையில், முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய படம், "புவனா ஒரு கேள்விக்குறி.'' இந்தப் படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம், சிவகுமாரும், ரஜினிகாந்த்தும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    ரஜினியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கேட்டதற்கு, சிவகுமார் கூறியதாவது:-

    "நாவலாசிரியர் மகரிஷி எழுதிய `புவனா ஒரு கேள்விக்குறி' நாவலில், நல்லவன் போல் தோற்றமுள்ள பெண் பித்தன், வில்லன் போல் தோற்றமுடைய நல்லவன் என இரண்டும் வலுவான பாத்திரங்கள்.

    இப்படத்துக்கு திரைக்கதை- வசனம் எழுதிக் கொண்டிருந்த நண்பர் பஞ்சு அருணாசலத்தைச் சந்தித்து, "எப்பப் பார்த்தாலும் யோக்கியனா, சாதுவா வேஷம் போடறதைவிட, ஒரு மாற்றத்துக்கு இதுல வர்ற பெண் பித்தன் நாகராஜன் வேஷத்தை நான் ஏற்று நடிக்கிறேன்'' என்றேன். மற்றொரு பாத்திரமான சம்பத் வேடம் ரஜினிக்குத் தரப்பட்டது.

    எங்கள் இரண்டு பேருடைய தோற்றம், நாவலாசிரியரின் கற்பனைக்கேற்ப இயல்பாய் அமைந்ததுதான் அப்படத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். சம்பத் வேடமேற்ற ரஜினிக்கு நல்ல பெயர் கிடைத்தது. புகழ் ஏணியில் மளமளவென்று நாலு படி ஏறிவிட்டார்.

    "சார்! அநியாயமா ரஜினிகாந்த்துக்கு அந்த வேஷத்தை விட்டுக்கொடுத்து, அவரைத் தூக்கி விட்டுட்டீங்களே'' என்று சில சினிமா உலக நண்பர்களும், ரசிகர்களும் என்னிடம் அங்கலாய்த்தனர்.

    அவர்களின் அறியாமையை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். "ஒரு மனிதன் எவ்வளவு உயர வேண்டும்; எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பது இறைவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. என்னதான் கடுமையாக உழைத்தாலும், நமக்கு என்ன விதிக்கப்பட்டதோ அதுதான் நடக்கும். ரஜினிகாந்த்துக்குப் புகழ் கூடியே ஆகவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறபோது, யார் தடுத்தாலும், எவர் பொறாமைப்பட்டாலும் அவர் உயர்வைத் தடுக்க முடியாது'' என்றேன்.

    அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்ற காலகட்டம் அது!

    ரஜினியின் மனக்கு 1982-ல் `அக்னி சாட்சி' படத்துக்காக ரஜினி வீட்டில் ஒரு காட்சியைப் படமாக்கினார் இயக்குனர் கே.பாலசந்தர். அமைதியான சூழலில், பெரும் புள்ளிகள் குடியிருக்கும் பகுதியில் அழகாக, விசாலமாக இருந்தது அவர் வீடு.

    படப்பிடிப்பு முடிந்ததும், என்னை ரஜினி தனியே அவர் ரூமுக்கு அழைத்துச் சென்றார். ரஜினியின் வளர்ச்சி, வாழ்வு பார்த்துப் பூரித்துப் போயிருந்தேன்.

    "ரஜினி! இப்படி உங்களைப் பார்க்கறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்க வளர்ச்சியைப் பார்த்துப் பெத்தவங்க பூரிச்சுப் போயிருப்பாங்க இல்லையா?'' என்று கேட்டேன்.

    "என்ன வளர்ச்சியடைஞ்சு, எவ்வளவு பெயர் வாங்கி என்ன சார் பிரயோஜனம்?'' என்றார், ரஜினி.

    "ஏன்! இப்ப உங்களுக்கு என்ன குறை?''

    "சின்ன வயசில நான் எவ்வளவு முரடனா இருந்தாலும், எவ்வளவு குறும்பு பண்ணினாலும் என்னைத் தட்டிக் கொடுத்துப் பெருமைப்பட்டவர் எங்க அப்பாதான். நான் அப்பாவோட செல்லம். ஆடம்பரமான இந்த வீட்டை வாங்கினதும், எங்கப்பா ஞாபகம் வந்திடுச்சு. `உங்க புள்ளே இப்போ எவ்வளவு பாப்புலர் ஆயிட்டான். எவ்வளவு அழகா வீடு வாங்கியிருக்கான் பாருங்கப்பா'ன்னு அவரைக் கூட்டி வந்து காட்டறத்துக்காகப் பெங்களூர் பறந்தேன்'' என்று கூறிய ரஜினி, சில நிமிடங்கள் மவுனமாக இருந்தார்.

    "ஏன் ரஜினி! அப்பாவுக்கு என்ன ஆச்சு?'' என்று நான் கேட்டேன்.

    "நான் அவரைப் போய்ப்பார்க்கறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடிதான் அவர் தன்னோட கண் பார்வையை இழந்திட்டார்...''

    கண்கலங்க, துக்கம் தொண்டையை அடைக்க அவர் இதைச் சொன்னபோது, சில நொடிகள் அதிர்ந்து விட்டேன்.

    நினைப்பதெல்லாம் நடந்து, நிறைவாக வாழ்ந்து விட்டவர் எவருமே இல்லையோ?

    இன்று இமயம்போல் வளர்ந்து பல கோடிகளைப்பார்த்து, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் குடியிருந்த போதிலும் ரஜினியின் எளிமையும், மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் குணமும் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.''

    இவ்வாறு கூறினார், சிவகுமார்.
    சிவகுமார் - சுஜாதா இணைந்து நடித்த இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி.'' இதில் சிவகுமாரும், சுஜாதாவும் இணைந்து நடித்தனர்.
    சிவகுமார் - சுஜாதா இணைந்து நடித்த இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி.'' இதில் சிவகுமாரும், சுஜாதாவும் இணைந்து நடித்தனர்.

    திருமணத்துக்குப்பிறகு, 1975-ல் "எங்க பாட்டன் சொத்து'', "புதுவெள்ளம்'', "மேல்நாட்டு மருமகள்'', "தங்கத்திலே வைரம்'' உள்பட 10 படங்களில் சிவகுமார் நடித்தார்.

    இவற்றில், "மேல்நாட்டு மருமகள்'' படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கினார். சிவகுமாருக்கு ஜோடியாக மேல்நாட்டுப் பெண்ணே நடித்தார். படத்தில் அவர் தமிழ்ப்பெண் போல உடையணிந்து, பரதநாட்டியம் ஆடி அசத்தினார்.

    இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர், குன்னக்குடி வைத்தியநாதன். ஏற்கனவே, காரைக்கால் அம்மையார் படத்தில் "தகதகதக தகதக என ஆடவா'' பாடலுக்கு இசை அமைத்து மிக புகழ் பெற்று விளங்கிய அவர், இந்தப் படத்தில் பிரபல "பாப்'' இசைப் பாடகி உஷா உதூப்பை பாட வைத்தது குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் ஆடிய நடனம் ஒன்றும் இடம் பெற்று இருந்தது.

    சிவகுமார் நடித்த மிக முக்கியமான படங்களில் ஒன்று "அன்னக்கிளி.'' இளையராஜா முதன் முதலாக இசை அமைத்த படம் இதுதான். பாடல்கள் எல்லாம் மிகப் பிரமாதமாக அமைந்ததால், இளையராஜா சீசன் தொடங்கியது.

    சிவகுமாரும், சுஜாதாவும் இணைந்து நடித்த இந்தப் படம் பஞ்சு அருணாசலம் தயாரித்ததாகும். டைரக்ஷனை தேவராஜ் - மோகன் கவனித்தனர்.

    மலையடிவாரம், வயல்வெளி, ஆற்றுப்படுகை என, படம் முழுவதும் வெளிப்புறத்திலேயே படமாக்கப்பட்டது.

    1976 மே 14-ந்தேதி படம் வெளியாயிற்று. முதல் இரண்டு நாட்கள், "ஹவுஸ்புல்'' ஆகவில்லை. படம் நன்றாக இருப்பதாக, பார்த்தவர்கள் செய்த வாய்மொழி விமர்சனங்கள் பரவப் பரவ கூட்டம் அதிகரித்தது. பிறகு தினமும் ஹவுஸ்புல்தான்!

    பல ஊர்களில் இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. கோவை இருதயா தியேட்டரில் 205 நாட்கள் ஓடியது.

    படத்தின் இடைவேளைக்குப்பிறகு, "சொந்தமில்லை, பந்தமில்லை வாடுது ஒரு பறவை'' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. பி.சுசீலா பாடிய இப்பாடல், 2-ம் நாள் நீக்கப்பட்டது.

    இசைத்தட்டில் இப்பாடலைக் கேட்ட ரசிகர்கள், படத்தில் பாடல் இடம் பெறாததைக் கண்டு கலாட்டா செய்தனர். அதனால், அந்தப்பாடல் காட்சி மீண்டும் சேர்க்கப்பட்டது.

    சிவகுமார் நடித்து இதே ஆண்டு வெளியான "பத்ரகாளி'' மற்றொரு "சூப்பர் ஹிட்'' படம்.

    ஆனால், படம் வெளி வருவதில் எதிர்பாராத சோதனை ஏற்பட்டது. படம் 5 ஆயிரம் அடி வளர்ந்திருந்த சமயத்தில், கதாநாயகி ராணி சந்திரா, மும்பை விமான நிலையத்தில் நடந்த விபத்தில் பலியாகி விட்டார். இதனால் படத்தை எப்படி முடிப்பது என்று பட அதிபரும், டைரக்டருமான ஏ.சி.திருலோகசந்தர் கலங்கிப்போனார்.

    இதுபற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "துபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு மும்பை திரும்பிய ராணி சந்திரா, மறுநாள் அமெரிக்கா புறப்பட வேண்டும். ஆகவே அன்றிரவே சென்னை சென்றுவிட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு பயணமாக விரும்பிய அவர், விமானத்தில் ஏறினார்.

    200 அடி கூட பறந்திராத விமானம் தீப்பற்றி எரிந்து, ராணி சந்திரா உள்பட பயணிகள் பலியாயினர்.

    "தமிழ்நாட்டு ரசிகர்கள் தங்கமானவர்கள். கலையை உயிராக நேசிப்பவர்கள். நான்கு படங்கள் நடித்த பின், சென்னையிலேயே வீடு வாங்கி, குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்று பலமுறை என்னிடம் கூறிய ராணி சந்திராவின் கனவுகள் கானல் நீராகிவிட்டன.

    இந்தப் படத்தை பெரிதாக நம்பியிருந்தார், டைரக்டர். கறுப்பு வெள்ளை படமாக இருந்தாலும், ரசித்து ரசித்துப் படமாக்கினார். விபத்து பற்றி அறிந்ததும் கலங்கிப் போனார். வீட்டுக்குச் சென்று, அவரை சமாதானப்படுத்தினேன். "எப்படியும் படத்தை முடித்து விடலாம், சார்'' என்றேன்.

    "எப்படி சிவகுமார் முடியும்? படத்தில் மூன்றில் ஒரு பங்கு பாக்கியிருக்கிறது. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி இருக்கிறது. அவர் இல்லாமல் இக்காட்சிகளை எப்படி எடுப்பது? கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை'' என்று வேதனையோடு கூறினார், டைரக்டர் திருலோகசந்தர்.

    மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, வீடு திரும்பினேன். இரவெல்லாம், தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். ராணி சந்திரா முகச்சாயலில் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். விடியற்காலையில் ஒரு பொறி தட்டியது.

    "பட்டிக்காட்டுராஜா'' படத்தில், நடனக்காட்சி ஒன்றில் என்னோடு ஆடிய பெண் புஷ்பா. "தங்கத்திலே வைரம்'' படத்திலும் சில காட்சிகள் என்னோடு நடித்திருந்தார்.

    மறுநாள் காலை டைரக்டர் வீட்டுக்கு ஓடினேன். புஷ்பா பற்றி கூறினேன். படக் கம்பெனிகள் மூலமாக, அந்தப் பெண்ணின் விலாசத்தைக் கண்டுபிடித்து, அவரை அழைத்து வரச் செய்தோம்.

    ஒளிப்பதிவாளர் விஸ்வநாத்ராயை வரவழைத்து, புஷ்பாவை படம் பிடித்துப் பார்த்தோம்.

    ராணி சந்திராவுக்கும், புஷ்பாவுக்கும் கண்ணிலும், மூக்கிலும் மட்டும் சிறிது வித்தியாசம். மற்றபடி உயரம், உருவம், நெற்றி, முகத்தோற்றம் எல்லாம் ஒரே மாதிரி இருந்தன.

    டைரக்டர் திருலோகசந்தர் சார், மிக சாமர்த்தியமாக ராணி சந்திராவுக்கும், புஷ்பாவுக்கும் வித்தியாசம் தெரியாதபடி காட்சிகளை படமாக்கி, படத்தை முடித்தார்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    திரையிட்ட இடங்களில் எல்லாம் வெள்ளி விழா கொண்டாடியது "பத்ரகாளி.''

    இறந்து போன கதாநாயகிக்கு பதிலாக இன்னொரு பெண்ணை வைத்து, வித்தியாசம் தெரியாமல் பல காட்சிகளைப் படமாக்கி வெற்றி பெற்றது சரித்திரச் சாதனை.

    இதே ஆண்டு வெளியான மற்றொரு படம் "மதன மாளிகை.''

    பட அதிபர் என்.வி.ராமசாமி, மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 36 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, இந்தப் படத்தை எடுத்தார். சிவகுமார் இப்படத்தில் பல தோற்றங்களில் தோன்றினார்.
    நடிகர் சிவகுமார் திருமணம் நடந்தது கொண்டிருந்த போது நேரில் வந்து சிவாஜி கணேசன் வாழ்த்து தெரிவித்தார்.
    நடிகர் சிவகுமார் திருமணம் 1974 ஜுலை 1-ந்தேதி நடைபெற்றது. தான் ஹீரோவாக நடித்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்பிக்கை ஏற்படும் வரை, திருமணத்துக்கு சிவகுமார் சம்மதிக்காமல் இருந்தார்.

    ஒருமுறை சிவாஜி கணேசன், "டேய் சிவா! காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கோ.

    30 வயது தாண்டினா, அப்புறம் பெண்டாட்டி மீது பெரிய பிடிப்பு இருக்காது. "பாதி வயது தனியா வாழ்ந்திட்டோம். இவ இல்லாட்டி, மீதி வயசும் இப்படியே வாழ்ந்திட முடியும் என்று தோன்றும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால், ஒருவர் இல்லாமல், இன்னொருவர் வாழ முடியாதுங்கற எண்ணம் வலுவாக இருக்கணும். சிறு வயதில் கல்யாணம் பண்ணினாத்தான் அப்படிப்பட்ட எண்ணம் தோணும்'' என்றார்.

    ஜெமினிகணேசன், சிவகுமாரின் கைரேகையைப் பார்த்துவிட்டு, "மாப்ளே! பொண்ணுங்க கிட்டே ஜாக்கிரதையா இரு!'' என்றார்.

    "நீங்க மட்டும் பிருந்தாவனத்து நந்தகுமாரனா ஏகப்பட்ட கோபிகாஸ்திரீகளோடு ஜாலியா இருப்பீங்க. நான் உஷாரா இருக்கணுமா? என்ன நியாயம் இது!'' என்று சிரித்துக்கொண்டே தமாஷாகக் கூறினார், சிவகுமார்.

    "அப்படி இல்லேடா! உனக்கு ஒண்ணு தெரியுமா? இப்போ தமிழ் சினிமாவிலே இருக்கிற அத்தனை ஹீரோக்களையும் விட நான்தான் அதிகம் படித்தவன். டிகிரி வாங்கினது மட்டுமில்லாமே நிறைய புத்தகங்கள் வாங்கி படித்துக்கொண்டே இருக்கிறேன். எனக்குத் தெரியாத விஷயமே இல்லை. ஆனால், பெண்கள் விஷயத்தில் பகவான் எனக்கு வீக்னஸ் வச்சுட்டான். நீ அப்படியெல்லாம் மாட்டிக்காதே. புத்திசாலித்தனமா நடந்துக்கோ. காலா காலத்திலே நல்லப் பெண்ணா பார்த்துக் கல்யாணம் செய்துக்கோ!'' என்றார், ஜெமினி.

    ஒரு மாணவனுக்கு அனுபவபூர்வமாக எல்லாம் அறிந்த ஆசிரியர் சொன்ன அறிவுரையாக அதை ஏற்றுக்கொண்டார், சிவகுமார்.

    "வெள்ளிக்கிழமை விரதம்'', "பொண்ணுக்கு தங்க மனசு'', "சொல்லத்தான் நினைக்கிறேன்'' ஆகிய படங்களில் நடித்தபின், தான் கதாநாயகனாக நìலைத்து நிற்க முடியும் என்ற நம்பிக்கை சிவகுமாருக்கு ஏற்பட்டது. திருமணத்துக்கு சம்மதித்தார்.

    ஆனால், தகுந்த பெண் கிடைப்பது சிரமமாக இருந்தது. சிலர், "சினிமாக்காரருக்கு பெண் கொடுக்கமாட்டோம்'' என்று மறுத்துவிட்டார்கள்.

    எனினும் உறவினர்கள் சிரமப்பட்டு, சிவகுமாருக்கு தகுந்த மணமகளை தேடிக் கண்டுபிடித்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர்.

    மணமகள் பெயர் லட்சுமி. கோவை மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த கவுண்டன்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி கவுண்டரின் மகள். கோவை அவிநாசி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்றவர்.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் சிவகுமார் நடித்த சினிமா எதையும் பார்த்தது இல்லை!

    தாயார் கீறிய கோட்டை தாண்டாத சிவகுமார், "பெண்ணை நீங்களே பார்த்து முடிவு செய்து விடுங்கள். திருமணத்துக்கு முன் நான் பெண்ணைப் பார்க்கமாட்டேன்'' என்று ஏற்கனவே திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்.

    அதன்படி, அவர் பெண்ணைப் போய்ப் பார்க்கவில்லை. பெண்ணின் போட்டோவை மட்டும் பார்த்தார்.

    சிவகுமார் - லட்சுமி திருமணம், தண்டுக்காரன்பாளையம் சீத்தம்மா கோவில் கல்யாண மண்டபத்தில் 1974 ஜுலை 1-ந்தேதி காலை நடந்தது.

    சிவாஜி கணேசன், மனைவி கமலா அம்மாளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

    பட அதிபர்கள் சின்னப்பா தேவர், என்.வி.ராமசாமி, டைரக்டர்கள் ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், நடிகர் மேஜர் சுந்தரராஜன் மற்றும் பல பிரமுகர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

    திருமணத்துக்கு 6 நாட்கள் கழித்து, சென்னையில் ராஜேசுவரி திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தியது.

    எம்.ஜி.ஆர். தன் மனைவி ஜானகி அம்மாளுடன் வந்து வாழ்த்தினார். சிவாஜிகணேசனும் மனைவி கமலா அம்மாளுடன் வந்திருந்தார்.

    அன்றிரவு மணமக்கள் தனிமையில் சந்தித்தபோது, அறை முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும் கண்டு மணமகள் லட்சுமி பிரமித்துப் போய்விட்டார்.

    "நீங்கள் பெரிய ஆள். சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் இருக்கிறீர்கள். வரவேற்புக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்தபோதே இதைத் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு நான் ஏற்றவளா என்று சந்தேகப்படுகிறேன்'' என்றார்.

    "நான் திரைப்படத் துறையில் இருந்தாலும், குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணை மணந்து கொள்ளவே விரும்பினேன். அதன்படியே நீ அமைந்திருக்கிறாய்'' என்று கூறினார், சிவகுமார்.

    திருமணம் முடிந்தபின், மனைவியை சிவகுமார் எங்கும் தனியே கூட்டிப்போக முடியவில்லை. ஓயாமல் படப்பிடிப்பு இருந்தது.

    சிவகுமார் வெளிïர் செல்லும்போது மனைவியை அழைத்துச் செல்வார். ஆயினும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு கூட்டிப்போவதில்லை.

    சிவகுமார் - லட்சுமி இல்லற வாழ்க்கையில், மூன்று குழந்தைகள் பிறந்தன.

    23-7-1975-ல் சூர்யாவும், 25-5-1977-ல் கார்த்தியும், 3-3-1980-ல் பிருந்தாவும் பிறந்தனர்.
    சிவகுமாருக்கு உறவினர்கள் பெண் பார்க்கப்போனபோது எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்தன.
    திரைப்பட உலகில் `பிசி'யாக இருந்ததால், சிவகுமார் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. உடன் நடிக்கும் யாராவது தன்னை விரும்புவது போல் உணர்ந்தால், "காதலுக்கு என் மனதில் இடம் இல்லை. என் தாயார் சொல்லும் பெண்ணைத்தான் மணப்பேன்'' என்று தெளிவாகக் கூறிவிடுவார்.

    1973-ல் சிவகுமார் ஹீரோவாக நடித்த "பொண்ணுக்குத் தங்க மனசு'' என்ற படம் வெற்றி பெற்றது. `இனி தனியாக நாம் ஹீரோவாக நடித்து வெற்றி பெறமுடியும்' என்ற நம்பிக்கை சிவகுமாருக்கு உண்டாயிற்று. எனவே, பெண் பார்க்கும்படி தன் தாயாரிடம் சொன்னார். சிவகுமாரின் ஒன்றுவிட்ட சகோதரர் குமரேசன், ஆசிரியர் குமாரசாமி ஆகியோர், சிவகுமாருக்கு தகுந்த பெண்ணைப் பார்க்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

    திருமணத்துக்கு முன்னதாக பெண்ணைப் போய்ப் பார்ப்பதில்லை என்று சிவகுமார் தீர்மானித்திருந்தார். பெண்ணைப் பார்த்து, இருவருக்கும் பிடித்துப் போய், பிறகு ஜாதகப் பொருத்தம் இல்லை என்றோ, சினிமா நடிகருக்கு பெண் தர விருப்பம் இல்லை என்றோ பெண் வீட்டார் முடிவு செய்தால், பெண் மனதில் வீணாக ஏமாற்றம் ஏற்படுமே என்பதால் சிவகுமார் இவ்வாறு முடிவு எடுத்திருந்தார்.

    கோவையில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டு, குமாரசாமியும், குமரேசனும் சென்றார்கள். பெண்ணின் போட்டோக்களை எல்லாம் பார்த்தார்கள். திருப்தியாக இருந்தது. காபி வந்து கொண்டிருந்தது.

    அந்த சமயத்தில் பெண்ணின் அண்ணன் வந்தான். ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டினான். ஒரு பக்கத்தில் வெளியாகியிருந்த படத்தைக்காட்டி, "இவர்தானே மாப்பிள்ளை?'' என்று அதட்டலாகக் கேட்டான்.

    அந்தப்பக்கத்தில், "பெண்ணை நம்புங்கள்'' படத்தில் சிவகுமாரும், ஜெயசித்ராவும் காதல் காட்சியில் நடிக்கும் படம் பிரசுரமாகி இருந்தது!

    பெண் வீட்டாரின் மன நிலையைப் புரிந்து கொண்ட குமாரசாமியும், குமரேசனும் காபியைக் கூட குடிக்காமல் கீழே வைத்து விட்டு, அங்கிருந்து வெளியேறினார்கள்.

    திருப்பூரில் பெண் பார்க்க அவர்கள் சென்றபோது, வேறு மாதிரியான அனுபவத்தைப் பெற்றார்கள்.

    மாப்பிள்ளை சினிமா நடிகர் என்பதை அறிந்த பெண்ணின் தந்தை கூறினார்:

    "மாப்பிள்ளை சினிமாவிலே இருப்பதால், உடன் நடித்த நடிகைகளுடன் `அப்படியும் இப்படியுமாக' இருந்திருக்கலாம். அது போகட்டும். ஆனால் இனிமேல் அவர் நடிக்கக்கூடாது. எங்களுக்கு கொஞ்சம் வயக்காடு இருக்கு. மாப்பிள்ளை அதைப் பார்த்துக்கட்டும். அப்படி சினிமாவிலே ஆசை இருந்தா, நம்மளுக்கு ஒரு தியேட்டர் இருக்கு. அதன் நிர்வாகத்தை வேண்டுமானாலும் கவனித்துக் கொள்ளட்டும். ஆனால், நடிக்கிற பேச்செல்லாம் உதவாது.''

    இப்படி ஒரு வெடிகுண்டை தூக்கிப்போடுவார் என்று எதிர்பார்க்காத குமாரசாமியும், குமரேசனும் பெண் வீட்டாருக்கு "வணக்கம்'' போட்டுவிட்டு, ஊரைப் பார்க்க கிளம்பினார்கள்.

    இதற்கிடையே, சிவாஜிகணேசனும் சிவகுமாருக்குப் பெண் பார்த்தார்.

    சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மையாரின் படத்தை சிவகுமார் வரைந்து, சிவாஜியிடம் கொண்டுபோய் கொடுத்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த சிவாஜி, "கவுண்டரே! உன் கையில் வித்தை இருக்கு. சினிமா இல்லாவிட்டாலும் இதை வைத்துப் பிழைத்துக் கொள்வாய்'' என்றார். அதைத்தொடர்ந்து, ஒரு சமஸ்தான மன்னரின் பெயரைக் குறிப்பிட்டு, "அவர் என் நண்பர். அவர் வகையில் ஒரு பெண் இருக்கு. கட்டிக்கிறீயா?'' என்று சிவகுமாரிடம் கேட்டார்.

    பதில் சொல்லாமல் சிவகுமார் மவுனமாக இருந்தார். "ஏலே! நான் கேட்பதற்கு பதில் சொல்லு. அந்த ராஜா என் நண்பர். நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லச் சொன்னார். உடனே உன் நினைவுதான் வந்தது. ஒண்ணு `சரி'ன்னு சொல்லு. இல்லை, வேண்டாம்னு சொல்லு!'' என்று வற்புறுத்தினார், சிவாஜி.

    "அண்ணே! அந்த அரண்மனையில் இருக்கிற டவாலிகள் போதாதா? இன்னொரு டவாலி வேணுமா!'' என்ற சிவகுமார், "நமக்கு பெரிய இடத்துப் பெண்ணுங்க எல்லாம் சரிப்படாது. அம்மா பார்த்து சரி என்று சொல்கிற பெண்ணுக்குத்தான் தாலி கட்டுவேன்'' என்று திட்டவட்டமாகக் கூறினார்.

    "சரி. உன் விருப்பப்படியே செய்'' என்று கூறிவிட்டார், சிவாஜி.

    இந்த சமயத்தில் நடிகை பானுமதி, "இப்படியும் ஒரு பெண்'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் சிவகுமார்தான் `ஹீரோ'.

    கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், பாடும் ஆற்றல்... இப்படி பல திறமைகள் கொண்ட பானுமதி, ஜாதகம் பார்ப்பதிலும் வல்லவர்.

    அவர் சிவகுமாரின் ஜாதகத்தைப் பார்த்தார். "உனக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் திருமணம் நடக்கும். அப்படி நடக்காமல் போனால், பிறகு எப்போதுமே நடக்காது. நீ நித்திய பிரம்மச்சாரிதான்!'' என்று `பளிச்'சென்று கூறினார்.

    சிவகுமார் அசந்து போனார்.

    இந்த சமயத்தில் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்து வந்த "வெள்ளிக்கிழமை விரதம்'' படத்தில் சிவகுமார் நடித்து வந்தார்.

    படம் முடியும்வரை, தேவரிடம் அட்வான்ஸ் பணத்தைக்கூட சிவகுமார் வாங்கவில்லை. "யாராவது எனக்கு பெண் கொடுக்க முன்வந்தால், தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து நீங்கள் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும்'' என்று தேவரிடம் கேட்டுக்கொண்டார்.

    அதுமுதல், படப்பிடிப்பு சமயத்தில் சிவகுமாரைப் பார்க்கும்போதெல்லாம், "என்ன சிவா! பொண்ணு ஏதாவது தட்டுப்பட்டதா?'' என்று தேவர் கேட்டு வந்தார்.

    "சிவகுமாருக்கு எப்போது திருமணம்?'' என்று எல்லோரும் ஆவலோடு காத்திருந்தனர். அந்த நாளும் வந்தது.

    "பெண் பார்த்து முடிவாகிவிட்டது'' என்று சிவகுமாருக்கு குமாரசாமியும், குமரேசனும் தகவல் அனுப்பினார்கள்.

    சிவகுமாரின் திறமைக்கு சவாலாக அமைந்த படம் காரைக்கால் அம்மையார்.
    இதில் அவர் சிவனாகவும், ஸ்ரீவித்யா பார்வதியாகவும் நடித்தனர்.

    காரைக்கால் அம்மையாராக வேடம் ஏற்றவர், கே.பி.சுந்தராம்பாள்,

    `தகதகதக தகதக என ஆடவா...
    சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா...?

    என்று உணர்ச்சியோடும், வேகத்தோடும் பாட, சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் துரிதகதியில் வேகமாகச் சுழன்று சுழன்று ஆடவேண்டும்.

    64 வயதான கே.பி.சுந்தராம்பாள் 6 நிமிடப் பாடலை தமது வெண்கலக் குரலில் ஒரே மூச்சில் பாடி முடித்தார்.

    ஸ்ரீவித்யா குழந்தைப் பருவத்தில் இருந்தே நடனத்தை முறையாக கற்றவர். பார்வதியாக நடனம் ஆட அவர் தயார் நிலையில் இருந்தார். ஆனால் சிவகுமாரால் அவருக்கு ஈடு கொடுத்து ஆடமுடியுமா?

    கே.பி.சுந்தராம்பாளுக்கே இந்த சந்தேகம் ஏற்பட்டது.

    "ஏ.பி.என்! இந்தப் பையன் டான்சரா? நன்றாக ஆடுவானா? பாட்டு ரொம்ப வேகமாக இருக்கிறதே. புதுப்பையனை நம்பி இருக்கிறாயே!'' என்று ஏ.பி.நாகராஜனிடம் கூறினார், கே.பி.சுந்தராம்பாள்.

    "கவலைப்படாதீங்க! அவங்க ஆடும்போது, நீங்களும் நடிக்கத்தானே போறீங்க அப்ப பாருங்க!'' என்று தன்னம்பிக்கையோடு ஏ.பி.என். பதிலளித்தார்.

    பிறகு சிவகுமாரை அழைத்தார். "நடனத்துக்கே அரசனான நடராஜன் வேடத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். ஐந்து வயதில் இருந்து 15 வருடமாக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரீவித்யாவை நீங்க பீட் பண்ணணும். ஒரு வாரம் டைம் தருகிறேன். நல்லா ஒத்திகை பாருங்க'' என்று கூறினார்.

    நடனமேதை "பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், நடனத்தை அமைத்துக்கொடுக்க, அவரது உதவியாளர் விமலா, சிவகுமாருக்கு பயிற்சி அளித்தார்.

    ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சி பெற்றார், சிவகுமார்.

    ஆறு நிமிடப் பாடல் காட்சியை 7 நாட்கள் படமாக்கினார்கள். தினமும் 12 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது.

    சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் போட்டி போட்டு ஆடினார்கள். சிவகுமார் தலையில் அணிந்துள்ள ஜடாமுடிக்குள் இருந்து, வியர்வை அருவிபோல் கொட்டும். கைகளில் இறுக்கிக் கட்டப்பட்ட நகைகள் ரத்த ஓட்டத்தை தடை செய்யும். காலில் சலங்கைகள் மோதி மோதி ரத்தம் வடியும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆடினார்.

    சிவகுமாரின் சிவதாண்டவத்தை பார்த்த படப்பிடிப்புக் குழுவினர் அசந்து போனார்கள். குறிப்பாக கே.பி.சுந்தராம்பாள், "நீ எப்படி ஆடுவாயோ என்று பயந்து போயிருந்தேன். என் வயிற்றில் பால் வார்த்து விட்டாய்!'' என்று வாழ்த்தினார்.

    சிவகுமார் நடித்த "திருமலைத் தெய்வம்'' என்ற படம் 1973-ல் வெளிவந்தது.

    இதில் சிவகுமார் திருமாலாகவும், ஸ்ரீவித்யா மகாலட்சுமியாகவும், ஏவி.எம்.ராஜன் நாரதராகவும் நடித்தனர்.

    சிவகுமார் கடைசியாக நடித்த புராணப்படம் "கிருஷ்ணலீலா.'' 1977-ல் இப்படம் வெளிவந்தது.

    இதில் சிவகுமாரும், ஜெயலலிதாவும் நடித்தனர். ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்திருந்தார்.

    இந்தப்படம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "புராணப்படங்களில் கடைசியாக நான் பங்கு கொண்ட படம், `கிருஷ்ணலீலா.' படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் படம் முடிக்கப்படவில்லை. தயாரிப்பாளர்கள் மாறினார்கள். அதனால் படம் வெளிவர நீண்ட காலம் ஆயிற்று. கால இடைவெளியில் ரசனையும் மாறிவிட்டது.

    ஏபி.என்., இறப்பதற்கு முன் எவ்வித குறையும் வைக்காமல் படத்தை முடித்துக் கொடுத்திருந்தார். பத்திரிகையாளர் காட்சிக்கு நான் ஏற்பாடு செய்து, படம் பற்றி முறையான விமர்சனம் வெளிவர வழி செய்தேன்.

    என்ன செய்தும், சென்னையிலும், வெளியூர்களிலும் மூன்றாவது வாரம் ஓடவே படம் திணறியது. புராணப் படங்களின் சீசன் முடிந்து, அடுத்த சீசன் தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொண்டேன்.

    இதன் பிறகும் புராணப் படங்களில் நடிக்க எனக்கு அழைப்புகள் வந்தன. அவை அனைத்தையும் நிராகரித்து விட்டேன். இனி புராணப் படங்களில் நடிப்பதில்லை என்று தீர்மானித்தேன். "கிருஷ்ணலீலா'' வியாபார ரீதியில் அடைந்த தோல்விதான், நான் இந்த முடிவை எடுத்ததற்கு காரணம்.''

    இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

    சத்யா மூவிஸ் தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
    1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.

    இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

    சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

    இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

    "என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.

    ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.

    இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

    இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.

    எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.

    எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

    அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.

    குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.

    அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

    எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.

    எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.

    7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

    1968-ல் ஏவி.எம். தயாரிப்பான "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிவாஜியின் மகன் வேடம். உயிரே போனாலும் பொய் சொல்லாத ஒரு அப்பாவி இளைஞனாக நடித்தேன்.

    ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்திருக்கும். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, "பூலரங்குடு'' என்ற தெலுங்குப்படத்தைப் போட்டுக் காட்டினார். அப்படத்தில் நாகேஸ்வரராவ் கதாநாயகனாகவும், சோபன்பாபு இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.

    சோபன்பாபு வேடத்தை எனக்குத் தருவதாக எம்.ஜி.ஆர். சொன்னார்.

    "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

    உயர்ந்த மனிதன் படத்தின் உச்சகட்ட காட்சி-பொய்யே பேசாத - தவறே செய்யாத சிவகுமாரை, சிவாஜி சந்தேகத்தின் பேரில் அடி அடி என்று அடித்து விரட்டி விடுவார். இறந்து போன தாயாரை (வாணிஸ்ரீ) நினைத்து அழுதுகொண்டே ரோட்டில் நடந்து வருவார், சிவகுமார்.

    அப்போது, தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும். தீப்பிழம்புக்குள் தாயாரின் உருவம் சிவகுமாருக்குத் தெரியும். "ஊரே உன்னை வெறுத்தாலும், உனக்காக நான் இருக்கிறேன். வாப்பா, வா!'' என்று அழைப்பார்.

    "அம்மா... அம்மா...!'' என்றபடி, தீக்குள் நுழைந்து விடுவார், சிவகுமார்.

    இதற்கிடையே, சிவகுமார் தன் மகன் என்பது சிவாஜிக்கு தெரிந்து விடும். மகனைத் தேடி ஓடி வருவார். தீக்குள் புகுந்து விட்ட சிவகுமாரை காப்பாற்ற அவரும் தீக்குள் நுழைந்து விடுவார்.

    இந்த "கிளைமாக்ஸ்'' காட்சியை படமாக்க 6 நாட்கள் ஆயிற்று.

    "உயர்ந்த மனிதன்'' தரத்தில் சிறந்த படமாகவும், வசூலில் வெற்றிப்படமாகவும் விளங்கியது.

    உயர்ந்த மனிதனில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் பாரதி.

    இதே ஆண்டில், மல்லியம் ராஜகோபால் எழுதி, இயக்கி, தயாரித்த "ஜீவனாம்சம்'' படத்தில் சிவகுமார் நடித்தார். இந்தப் படத்தில்தான் நடிகை லட்சுமி அறிமுகமானார். ஜெய்சங்கரின் தங்கையாக லட்சுமி நடித்தார். சிவகுமார்தான் அவருக்கு ஜோடி.

    ஜீவனாம்சம் வரை சிவகுமார் 12 படங்களில் நடித்திருந்தார். இதற்கு முன் நடித்த படங்களில், பெரும்பாலும் சிவகுமாரை விட மூத்த நடிகைகளான தேவிகா, காஞ்சனா, புஷ்பலதா போன்றோர்தான் அவருக்கு ஜோடியாக நடித்தனர். அவர் வயதுக்கும், தோற்றத்துக்கும் ஏற்ற இளம் பெண்ணாக முதன் முதலில் நடித்தவர் லட்சுமிதான். இந்த ஜோடிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

    இதன்பின் ஜெயகாந்தன் எழுதிய கதையான "காவல் தெய்வ''த்திலும் சிவகுமாரும், லட்சுமியும் இணைந்து நடித்தனர்.

    இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற மாறுபட்ட குணச்சித்ர வேடத்தில் சிவாஜி நடித்திருந்தார்.

    பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் இயக்கிய "கந்தன் கருணை''யில் முருகனாக சிவகுமார் நடித்தார்.
    "மோட்டார் சுந்தரம் பிள்ளை''யை அடுத்து, "தாயே உனக்காக'' என்ற படத்தில் சிவகுமார் நடித்தார்.

    இது ரஷியக் கதை ஒன்றைத் தழுவி கவிஞர் கண்ணதாசன் எடுத்த படம். பி.புல்லையா டைரக்ட் செய்தார்.

    கதாநாயகனாக சிவகுமார் நடித்தபோதிலும், சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, முத்துராமன், தேவிகா, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி முதலான நட்சத்திரங்கள் கவுரவ வேடத்தில் நடித்தனர். அதாவது, எம்.ஜி.ஆர். நீங்கலாக மற்ற நடிகர்-நடிகைகள் எல்லாம் தலையைக் காட்டினார்கள்.

    விளம்பரங்களில் இவர்களுடைய படங்களை பெரிதாகப் போட்டுவிட்டு, சிவகுமார் படத்தை ஒரு மூலையில் சிறிதாக போட்டனர்.

    சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பிரதான வேடத்தில் நடித்துள்ள படம் என்று நினைத்து படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள், ஏமாற்றம் அடைந்தனர். படம் முடிந்ததும் திட்டிக்கொண்டே வெளியே வந்தனர்.

    இதனால் "தாயே உனக்காக'' வெற்றிபெறவில்லை.

    1967-ல் "கந்தன் கருணை'' புராணப் படத்தை ஏ.எல்.எஸ். தயாரித்தார். "திருவிளையாடல்'' படத்தின் மூலம் இமாலய வெற்றி பெற்ற ஏ.பி.நாகராஜன், இப்படத்தை டைரக்ட் செய்தார்.

    முருகன் வேடத்தில் நடிக்க, முக அழகு கொண்ட ஒரு இளைஞரைத் தேடினார், ஏ.பி.என்.

    சுமார் 30 இளைஞர்களை வரச்சொல்லி, "மேக்கப்'' டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

    ஏவி.மெய்யப்ப செட்டியாருடன் ஏ.பி.நாகராஜன் பேசிக்கொண்டிருந்தபோது, இதுபற்றி குறிப்பிட்டார். "முருகன் வேடத்துக்கு, தகுந்த நடிகர் கிடைக்கவில்லை'' என்றார்.

    உடனே ஏவி.எம்., "எங்களுடைய `காக்கும் கரங்கள்' படத்தில் சிவகுமார் என்ற பையனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். லட்சணமான முகம். முருகன் வேடத்துக்கு பொருத்தமாக இருப்பான். மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பாருங்கள்'' என்றார்.

    அதன்படி, மேக்கப் டெஸ்டுக்கு சிவகுமாரை அழைத்தார், ஏ.பி.நாகராஜன்.

    சிவகுமார் சென்ற அதே சமயம், முருகன் வேடத்துக்கான இன்னொரு வேட்பாளராக விஜயகுமாரும் வந்திருந்தார்!

    இருவருக்கும் முருகன் மேக்கப் போடப்பட்டது. இதில் சிவகுமார் தேர்வு பெற்றார்.

    "கந்தன் கருணை''யில் சிவாஜிகணேசன் வீரபாகுவாக நடித்தார். வள்ளியாக ஜெயலலிதாவும், தெய்வானையாக கே.ஆர்.விஜயாவும் நடித்தார்கள்.

    "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...'' என்ற பாடல் பிரமாதமாக அமைந்தது. இந்தப் பாடல் காட்சியில் சிவகுமார், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா தோன்றுவார்கள். பாடலும், பாடல் காட்சியும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இப்படத்தில் சிவகுமாரின் தோற்றமும், நடிப்பும் மிகச் சிறப்பாக அமையவே, "புராணப் படங்களில் கடவுள் வேடம் போடுவதற்கு ஏற்ற நடிகர் சிவகுமார்தான்'' என்று பட உலகத்தினர் ஏகோபித்து முடிவு செய்தார்கள்.

    `கந்தன் கருணை'யில் நடித்த அனுபவம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "முருகன் வேடத்துக்கு என்னை தேர்ந்தெடுத்த ஏ.பி.நாகராஜன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்தை சொன்னார். "முதன் முதலில் என்.டி.ராமராவை ராமர் வேடத்தில் நடிக்க வைத்து, சம்பூர்ண ராமாயணம் படத்தை எடுத்தோம். கடவுள் வேடத்திற்கேற்ற முகம் அவருக்கு இருந்தது. `உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும்' என்று ராமராவிடம் சொன்னேன். அதன்படி, 25 வருடங்களுக்கு மேலாக ராமர், கிருஷ்ணன், மகாவிஷ்ணு என்று கடவுள் வேடங்களில் நடித்தார். இப்போது அவருக்கு வயதாகி விட்டது. உங்களுக்கு இளமையும், அழகும் இருப்பதால் இன்னும் 25 ஆண்டுகள் கடவுளாக நடிக்கலாம்'' என்று கூறினார்.

    கடவுள் வேடம் ஏற்று நடிக்கும்போது, உடல் ரீதியிலும், மனதளவிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். படப்பிடிப்பு நாட்களில் அசைவம் சாப்பிடக்கூடாது. அதிகாலை 3 மணிக்கு மேக்கப் போட்டு, 6 மணிக்கு தெளிந்த முகத்துடனும், ஒளிமிக்க கண்களுடனும் தோன்றும்போது, `குளோசப்' காட்சிகளை ஏ.பி.என். படம் எடுப்பார்.

    `உடம்பையும், மனதையும் கெடுக்கும் அத்தனை சுக போகங்களும் எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கும் இடம் சினிமாத்துறை. புகை பிடிக்காமல், மது பழக்கத்துக்கு அடிமை ஆகாமல், பிற பெண்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ளாமல், துறவி போல் மனக்கட்டுப்பாட்டுடன் உங்களால் இருக்க முடியுமானால், சாதாரணமாக உங்களுக்கு இருக்கக்கூடிய மார்க்கெட் 10 ஆண்டுகள் என்றால், இந்த சிறப்புகளுக்காக மேலும் 10 ஆண்டுகள் திரைப்படத்துறையில் புகழோடு இருக்க முடியும்' என்று ஏ.பி.நாகராஜன் அறிவுரை கூறுவார்.

    இளமையில் இருந்தே நான் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்ததால், ஏ.பி.என். கூறிய அறிவுரைகளை கடைப்பிடிப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை.

    "கந்தன் கருணை'' படப்பிடிப்பில் கடைசியாக, பழமுதிர்ச்சோலையில் வள்ளி-தெய்வானையுடன் முருகன் காட்சி தருவதை ஏ.பி.என். படமாக்கினார்.

    சுமார் 10 மயில்களின் இறகுகளை இணைத்து, 3 பேர் அமரும் அளவுக்கு பெரிய மயில் செய்து அதில் என்னையும், வள்ளியாக நடித்த ஜெயலலிதா அவர்களையும், தெய்வானையாக நடித்த கே.ஆர்.விஜயா அவர்களையும் அமரச் செய்தனர்.

    "வள்ளி - தெய்வானையுடன் அமர் சோலை - தங்கமயில் விளையாடும் பழமுதிர்ச்சோலை'' என்று சீர்காழி கோவிந்தராஜன் பாட, மயில் வாகனத்தின் மீது எங்கள் மூவரையும் பார்த்த கே.ஆர்.விஜயாவின் தாயாருக்கு அருள் வந்துவிட்டது. பழனியில் நீண்ட காலம் வாழ்ந்தவர். பாடலின் உத்வேகம், காட்சியின் அழகு இரண்டும் சேர்ந்ததால், பக்தி மேலீட்டால் அவர் சாமி ஆட ஆரம்பித்து விட்டார்!

    கற்பூரம் கொளுத்தி நெற்றியில் விபூதி பூசி அவரை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சிவகுமார் நடித்த முதல் படம் ஏவி.எம். தயாரித்த "காக்கும் கரங்கள்.'' இது 1965-ல் வெளிவந்தது.
    "காதலிக்க நேரமில்லை'' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சோர்வோடு இருந்த சிவகுமாருக்கு, அவருடைய மாமன் ரத்தினம் ஒரு மகிழ்ச்சி செய்தியை சொன்னார்.

    "எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரை நடிக்க வைத்து, `சித்ரா பவுர்ணமி' என்ற படத்தை தயாரிக்க இருக்கிறேன். இதை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்கிறார்கள். இதில், விஜயகுமாரியின் தம்பி வேடத்தில் நீ நடிக்க வேண்டும் என்றார்.

    மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார், சிவகுமார்.

    ஆனால், "சித்ரா பவுர்ணமி'' எதிர்பார்த்த வேகத்தில் வளரவில்லை.

    இந்த சமயத்தில் "காக்கும் கரங்கள்'' என்ற படத்தை திருலோகசந்தர் டைரக்ஷனில் தயாரிக்க, ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்தது. எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் ஜோடியாக நடித்த இப்படத்திற்கு ஒரு புதுமுக நடிகர் தேவைப்படவே, `சித்ரா பவுர்ணமி'யில் நடிக்க வந்த சிவகுமாரை கிருஷ்ணன் - பஞ்சு சிபாரிசு செய்தனர்.

    டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரும், ஏவி.எம்.சரவணன் சகோதரர்களும், சிவகுமாரை வரச்சொல்லி பார்த்தனர். அவர்களுக்கு பிடித்து விட்டது. காக்கும் கரங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, சிவகுமார் ஒப்பந்தம் ஆனார்.

    இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

    சிவகுமாரின் இயற்பெயர் பழனிச்சாமி.

    அதை "சிவகுமார்'' என்று திருலோகசந்தரும், ஏவி.எம்.சரவணன் சகோதரர்களும் மாற்றி வைத்தனர்.

    "காக்கும் கரங்கள்'' 1965 ஜுன் 19-ந்தேதி ரிலீஸ் ஆயிற்று.

    படம் வெளியாவதற்கு முந்தின நாள், சிவகுமாருக்கு ஒரு அதிர்ச்சியான தகவல். சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த பெண் அவரைவிட மூத்தவர் போல தோன்றியதால், 500 அடி நீளம் கொண்ட காதல் காட்சியை வெட்டி விட்டார்கள் என்பதே அந்த தகவல். இதனால் சோகம் அடைந்த சிவகுமாரை சரவணன் தேற்றினார். "கவலைப்படாதீர்கள். மிக நல்ல வேடம் ஏற்று நீங்கள் நடிக்கும் காலம் விரைவில் வரும்'' என்று கூறினார்.

    (சிவகுமார் முதன் முதலாக ஒப்பந்தமான `சித்ரா பவுர்ணமி' பிறகு வளரவே இல்லை. சில ஆண்டுகளுக்குப்பின், இதே பெயரைக் கொண்ட வேறொரு படத்தில் சிவாஜிகணேசன் நடித்தார்.)

    "காக்கும் கரங்கள்'' வெளியாகி ஒரு வாரத்தில், ஜெமினி நிறுவனத்தில் இருந்து சிவகுமாருக்கு ஒரு தந்தி வந்தது. ஜெமினி தயாரிக்கும் "மோட்டார் சுந்தரம் பிள்ளை'' படத்தில், சிவாஜிகணேசனின் மூத்த மருமகனாக (காஞ்சனாவுக்கு ஜோடியாக) நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு அளிக்கப்படுவதாக அந்த தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஜெமினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னைத்தேடி வந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தார், சிவகுமார்.

    முதல் நாள் படப்பிடிப்பின்போது ஒரு வேடிக்கை நடந்தது. கதைப்படி, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காஞ்சனாவை சிவகுமார் திருமணம் செய்து கொள்கிறார். கல்லூரிப் படிப்பு முடியும் வரை காஞ்சனாவை சந்திக்கக்கூடாது என்று சிவகுமாருக்கு அவர் தந்தை தடை போட்டு விடுகிறார். தந்தைக்குத் தெரியாமல் மனைவியை வந்து சந்திப்பார், சிவகுமார்.

    சிவாஜியும், சிவகுமாரும் சாப்பிடும் காட்சி படமாக்கப்பட்டது. சவுகார் ஜானகி உணவு பரிமாறிக் கொண்டே, "என்னங்க! மாப்பிள்ளையை இன்னிக்கு தங்கிட்டு நாளைக்குப் போகச் சொல்லுங்க'' என்பார். உடனே சிவாஜி, "எனக்கும் ஆசைதான்! ஆனால் மாப்பிள்ளை அவர் அப்பாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக வந்திருக்காரே! என்ன மாப்பிள்ளை?'' என்று கேட்க, சிவகுமார் சிரித்து மழுப்புவார். இதுதான் அன்று எடுக்கப்படும் காட்சி.

    "நான் என்ன செய்யவேண்டும்'' என்று, டைரக்டர் எஸ்.எஸ்.வாசனிடம் கேட்டார், சிவகுமார். "உங்களுக்கு இன்று வசனம் ஏதும் இல்லை. நீங்க சும்மா சாப்பிட்டுக்கொண்டு இருங்க, போதும்'' என்றார், டைரக்டர்.

    ஒருமுறை ஒத்திகை பார்க்கப்பட்டது. "டேக்!'' என்று குரல் எழுப்பியபடி, சிவகுமாரின் இலையைப் பார்த்தார், வாசன். அதில் அப்பளத்தைக் காணோம்!

    "எங்கே அப்பளம்?'' என்று கேட்டபடி தேடினார். சிவகுமாரின் இலை அருகே வந்து குனிந்து பார்த்தார். அப்பளத் துண்டுகள் பொடி பொடியாகக் கிடப்பதைப் பார்த்தார். அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது.

    "என்ன! அப்பளத்தை சாப்பிட்டேளா?'' என்று கேட்டுவிட்டு, ஹ... ஹா... ஹா என்று சிரித்தார். பிறகு, "ஒத்திகையின் போதெல்லாம் சாப்பிட வேண்டியதில்லை. சாப்பிடுவது மாதிரி நடித்தால் போதும்!'' என்றார்.

    சிவாஜி, சிவகுமாரை நோக்கினார். அவர் பார்வையில் தீப்பொறி பறந்தது.

    அந்தப் படப்பிடிப்பு நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்ந்த சிவகுமார், "சிவாஜி பார்த்த பார்வையில் நான் பொசுங்கிப் போய்விட்டேன். சாப்பிடாமல், சாப்பிடுகிற மாதிரி நடிப்பது எப்படி என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு கற்றுக்குட்டி!'' என்றார்.

    "மோட்டார் சுந்தரம் பிள்ளை''யில் நடித்த சிவகுமாருக்கு 1,500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. பணத்தை அனுப்பியதுடன், "படத்தை நல்லபடியாக முடிக்க நீங்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி'' என்று கடிதமும் எழுதியிருந்தது, ஜெமினி நிறுவனம்.

    (முருகன் வேடத்தில் சிவகுமார் - நாளை)
    சிவகுமாரின் முதல் படம் "காக்கும் கரங்கள்'' திருலோகசந்தர் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரிப்பு

    சிவகுமார் நடித்த முதல் படம் ஏவி.எம். தயாரித்த "காக்கும் கரங்கள்.'' இது 1965-ல் வெளிவந்தது.

    "காதலிக்க நேரமில்லை'' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சோர்வோடு இருந்த சிவகுமாருக்கு, அவருடைய மாமன் ரத்தினம் ஒரு மகிழ்ச்சி செய்தியை சொன்னார்.

    "எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரை நடிக்க வைத்து, `சித்ரா பவுர்ணமி' என்ற படத்தை தயாரிக்க இருக்கிறேன். இதை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்கிறார்கள். இதில், விஜயகுமாரியின் தம்பி வேடத்தில் நீ நடிக்க வேண்டும் என்றார்.

    மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார், சிவகுமார்.

    ஆனால், "சித்ரா பவுர்ணமி'' எதிர்பார்த்த வேகத்தில் வளரவில்லை.

    இந்த சமயத்தில் "காக்கும் கரங்கள்'' என்ற படத்தை திருலோகசந்தர் டைரக்ஷனில் தயாரிக்க, ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்தது. எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் ஜோடியாக நடித்த இப்படத்திற்கு ஒரு புதுமுக நடிகர் தேவைப்படவே, `சித்ரா பவுர்ணமி'யில் நடிக்க வந்த சிவகுமாரை கிருஷ்ணன் - பஞ்சு சிபாரிசு செய்தனர்.

    டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரும், ஏவி.எம்.சரவணன் சகோதரர்களும், சிவகுமாரை வரச்சொல்லி பார்த்தனர். அவர்களுக்கு பிடித்து விட்டது. காக்கும் கரங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, சிவகுமார் ஒப்பந்தம் ஆனார்.

    இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

    சிவகுமாரின் இயற்பெயர் பழனிச்சாமி.

    அதை "சிவகுமார்'' என்று திருலோகசந்தரும், ஏவி.எம்.சரவணன் சகோதரர்களும் மாற்றி வைத்தனர்.

    "காக்கும் கரங்கள்'' 1965 ஜுன் 19-ந்தேதி ரிலீஸ் ஆயிற்று.

    படம் வெளியாவதற்கு முந்தின நாள், சிவகுமாருக்கு ஒரு அதிர்ச்சியான தகவல். சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த பெண் அவரைவிட மூத்தவர் போல தோன்றியதால், 500 அடி நீளம் கொண்ட காதல் காட்சியை வெட்டி விட்டார்கள் என்பதே அந்த தகவல். இதனால் சோகம் அடைந்த சிவகுமாரை சரவணன் தேற்றினார். "கவலைப்படாதீர்கள். மிக நல்ல வேடம் ஏற்று நீங்கள் நடிக்கும் காலம் விரைவில் வரும்'' என்று கூறினார்.

    (சிவகுமார் முதன் முதலாக ஒப்பந்தமான `சித்ரா பவுர்ணமி' பிறகு வளரவே இல்லை. சில ஆண்டுகளுக்குப்பின், இதே பெயரைக் கொண்ட வேறொரு படத்தில் சிவாஜிகணேசன் நடித்தார்.)

    "காக்கும் கரங்கள்'' வெளியாகி ஒரு வாரத்தில், ஜெமினி நிறுவனத்தில் இருந்து சிவகுமாருக்கு ஒரு தந்தி வந்தது. ஜெமினி தயாரிக்கும் "மோட்டார் சுந்தரம் பிள்ளை'' படத்தில், சிவாஜிகணேசனின் மூத்த மருமகனாக (காஞ்சனாவுக்கு ஜோடியாக) நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு அளிக்கப்படுவதாக அந்த தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஜெமினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னைத்தேடி வந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தார், சிவகுமார்.

    முதல் நாள் படப்பிடிப்பின்போது ஒரு வேடிக்கை நடந்தது. கதைப்படி, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காஞ்சனாவை சிவகுமார் திருமணம் செய்து கொள்கிறார். கல்லூரிப் படிப்பு முடியும் வரை காஞ்சனாவை சந்திக்கக்கூடாது என்று சிவகுமாருக்கு அவர் தந்தை தடை போட்டு விடுகிறார். தந்தைக்குத் தெரியாமல் மனைவியை வந்து சந்திப்பார், சிவகுமார்.

    சிவாஜியும், சிவகுமாரும் சாப்பிடும் காட்சி படமாக்கப்பட்டது. சவுகார் ஜானகி உணவு பரிமாறிக் கொண்டே, "என்னங்க! மாப்பிள்ளையை இன்னிக்கு தங்கிட்டு நாளைக்குப் போகச் சொல்லுங்க'' என்பார். உடனே சிவாஜி, "எனக்கும் ஆசைதான்! ஆனால் மாப்பிள்ளை அவர் அப்பாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக வந்திருக்காரே! என்ன மாப்பிள்ளை?'' என்று கேட்க, சிவகுமார் சிரித்து மழுப்புவார். இதுதான் அன்று எடுக்கப்படும் காட்சி.

    "நான் என்ன செய்யவேண்டும்'' என்று, டைரக்டர் எஸ்.எஸ்.வாசனிடம் கேட்டார், சிவகுமார். "உங்களுக்கு இன்று வசனம் ஏதும் இல்லை. நீங்க சும்மா சாப்பிட்டுக்கொண்டு இருங்க, போதும்'' என்றார், டைரக்டர்.

    ஒருமுறை ஒத்திகை பார்க்கப்பட்டது. "டேக்!'' என்று குரல் எழுப்பியபடி, சிவகுமாரின் இலையைப் பார்த்தார், வாசன். அதில் அப்பளத்தைக் காணோம்!

    "எங்கே அப்பளம்?'' என்று கேட்டபடி தேடினார். சிவகுமாரின் இலை அருகே வந்து குனிந்து பார்த்தார். அப்பளத் துண்டுகள் பொடி பொடியாகக் கிடப்பதைப் பார்த்தார். அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது.

    "என்ன! அப்பளத்தை சாப்பிட்டேளா?'' என்று கேட்டுவிட்டு, ஹ... ஹா... ஹா என்று சிரித்தார். பிறகு, "ஒத்திகையின் போதெல்லாம் சாப்பிட வேண்டியதில்லை. சாப்பிடுவது மாதிரி நடித்தால் போதும்!'' என்றார்.

    சிவாஜி, சிவகுமாரை நோக்கினார். அவர் பார்வையில் தீப்பொறி பறந்தது.

    அந்தப் படப்பிடிப்பு நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்ந்த சிவகுமார், "சிவாஜி பார்த்த பார்வையில் நான் பொசுங்கிப் போய்விட்டேன். சாப்பிடாமல், சாப்பிடுகிற மாதிரி நடிப்பது எப்படி என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு கற்றுக்குட்டி!'' என்றார்.

    "மோட்டார் சுந்தரம் பிள்ளை''யில் நடித்த சிவகுமாருக்கு 1,500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. பணத்தை அனுப்பியதுடன், "படத்தை நல்லபடியாக முடிக்க நீங்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி'' என்று கடிதமும் எழுதியிருந்தது, ஜெமினி நிறுவனம்.
    சிவகுமார் நடிகர் ஆவதற்கு முன், ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஓவியராக மொத்தம் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

    வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பர். அவருடைய தம்பியின் திருமணத்துக்காக, சிவாஜி 1958-ல் வேட்டைக்காரன் புதூருக்கு வந்து தங்கியிருந்தார். அவரைச் சந்திக்க சிவகுமார் விரும்பினார். சிவாஜியின் படங்கள் சிலவற்றை வரைந்து எடுத்துச் சென்றார். ஆனால், அதற்குள் சிவாஜி சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

    இதை அறிந்த ஓடையகுளம் ஜமீன்தாரின் மகன் சண்முகம், "நான் உன்னை சென்னைக்கு அழைத்துச்சென்று, சிவாஜியிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்'' என்றார். அதன்படியே, சிவகுமாரை அழைத்துக்கொண்டு 1958 ஜுன் 8-ந்தேதி சென்னைக்குப் புறப்பட்டார். சிவகுமாரின் மாமா ஆறுமுகக் கவுண்டர், அவர் மகன் ரத்தினம் ஆகியோரும் உடன் சென்றார்கள்.

    ராயப்பேட்டையில் உள்ள சிவாஜிகணேசன் வீட்டில், அவரை நேரில் பார்த்த சிவகுமார், மெய்சிலிர்த்துப் போனார். ஏற்கனவே பராசக்தி, மனோகரா, ராஜாராணி, வணங்காமுடி, உத்தமபுத்திரன் முதலிய படங்களைப் பார்த்து சிவாஜியின் நடிப்பில் மனதைப் பறிகொடுத்தவர், சிவகுமார். நிழலில் கண்டவரை நிஜமாகக் கண்டதும், மகிழ்ச்சி தாங்கவில்லை.

    தான் வரைந்திருந்த படங்களை சிவாஜியிடம் அவர் காண்பித்தார். சிவகுமாரின் ஓவியத் திறமையைப் பாராட்டிய சிவாஜி, ஓவியப் பயிற்சி பெறுவதற்காக, அவரை "மோகன் ஆர்ட்ஸ்'' என்ற திரைப்பட விளம்பரக்கம்பெனியில் சேர்த்துவிட்டார்.

    சினிமா தியேட்டர்கள் முன் பெரிய பெரிய பேனர்களையும், "கட்-அவுட்''களையும் வைக்கும் பழக்கம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. "வணங்காமுடி'' படத்திற்காக, விலங்கு மாட்டப்பட்ட சிவாஜியின் 60 அடி உயர "கட்-அவுட்''டை, சித்ரா தியேட்டரில் அமைத்து, பரபரப்பை உண்டாக்கியிருந்தது, மோகன் ஆர்ட்ஸ்.

    "மோகன் ஆர்ட்ஸ்'' அதிபர் மோகனும், நடிகர் எம்.ஆர்.சந்தானமும் கூட்டாக "பாசமலர்'' தயாரித்தார்கள். அந்தப்படம் வெளிவருவதற்கு முன், சிவகுமார் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார்.

    ஓவிய அனுபவம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "ஓவியம் பயில சென்னைக்கு புறப்பட்டபோது, "குடும்பத்தை எதிர்காலத்தில் தூக்கி நிறுத்துவேன். புகை, மது, மாது, சூது பக்கம் நெருங்கமாட்டேன்'' என்று அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தேன். இன்றுவரை அதைக் காப்பாற்றுகிறேன்.

    சென்னை வந்து யோகாசனம் பயில ஆரம்பித்தபின், காபி, டீ குடிப்பதைக்கூட நிறுத்திவிட்டேன். அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். ஒரு மணி நேரம், 38 வகையான ஆசனங்கள் செய்வேன். அம்மா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். பாக்கெட்டில் எப்போதும் 4 அணா இருக்கும். சைக்கிள் "பஞ்சர்'' ஆகிவிட்டால் ஒட்டுவதற்கு! 56 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகாபலிபுரம் சென்று, 2 நாள் தங்கி ஓவியம் தீட்டுவேன். பிறகு அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் சென்று 2 நாள் தங்கி ஓவியம் வரைவேன்.

    அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல்பட்டுக்கு சென்றுவிட்டு, 45 கிலோ மீட்டர் பயணம் செய்து, சென்னையை அடைவேன். நான் 10-ம் வகுப்பு படிக்கும்போதே, ஒருநாளில் 180 கிலோ மீட்டர் சர்வ சாதாரணமாக சைக்கிளில் பயணம் செய்வேன். திரைப்படம் பார்ப்பதற்கு என்னுடைய மாத பட்ஜெட் 3 ரூபாய். 84 பைசா டிக்கெட்டுதான் எடுப்பேன். 84 பைசா டிக்கெட் கவுண்டரை மூடிவிட்டால், அதிக கட்டணத்தில் போகமாட்டேன். பேசாமல் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன். மறுநாள் அரை மணி நேரம் முன்னதாகச் சென்று, 84 பைசா டிக்கெட் எடுத்து படம் பார்ப்பேன்.

    ஓவியனாக நான் வாழ்ந்த 7 ஆண்டுகளும், வசந்த காலமாகும். கன்னியாகுமரியில் இருந்து சண்டிகார் வரை, பிறகு அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா, மும்பை, டெல்லி, ஆக்ரா, ஐதராபாத், மைசூர், பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் முதலான இடங்களுக்கெல்லாம் சென்று ஓவியம் வரைந்து படிப்பை முடிக்க எனக்கு ஆன மொத்த செலவு 7 ஆயிரத்து 140 ரூபாய்தான். இது, இன்றைக்கு இரண்டு நண்பர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு ஆகக்கூடிய செலவு. இளம் துறவி போல், கிடைத்ததை உண்டு, அகப்பட்ட திண்ணையில் படுத்து, அற்புதமாக ஓவியங்கள் தீட்டிய அந்தக்காலம் இனி வரவே வராது.

    ஓவியக் கல்லூரி ஆண்டு விழாவில், அனார்கலி நாடக வசனமும், சேரன் செங்குட்டுவன் வசனமும் பேசி நடித்தேன். ஓவிய ஆசிரியர் சந்தானராஜ், என்னை அலாக்காக தூக்கி, இரண்டு சுற்று சுற்றி இறக்கிவிட்டார்.

    "சிறந்த ஓவியனாக விளங்கும் நீ, அதைவிடப் பெரிய நடிகனாகி புகழ் பெறுவாய்'' என்று பாராட்டினார். என் அறை நண்பராக இருந்த பாலாபழனூர் (பிற்காலத்தில் சரண்சிங் மந்திரிசபையில் அ.தி.மு.க. சார்பில் மந்திரி பதவி வகித்தவர்) என்னை வித்தியாசமாக பாராட்டினார். "நடன மேதை உதயசங்கர், ஆரம்பத்தில் ஓவியராகத்தான் இருந்தார். பிறகு நடனத்தில் உலகப்புகழ் பெற்றார். நீ இப்போது ஓவியனாக இருந்தாலும், எதிர்காலத்தில் நடிப்புத் துறையில் புகழ் பெறுவாய்'' என்றார். இதனால் உற்சாகம் அடைந்தேன்.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சமயத்தில் டைரக்டர் ஸ்ரீதர் "காதலிக்க நேரமில்லை'' என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு புதுமுகங்கள் தேவை என்று அறிவித்திருந்தார். ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன. சிவகுமாரும் புகைப்படங்களுடன் விண்ணப்பித்தார். ஆனால் அதிர்ஷ்டம் அடித்தது, ரவிச்சந்திரனுக்கு! சிவகுமாருக்கு `சான்ஸ்' கிடைக்கவில்லை. ஆனாலும் பட வாய்ப்பு விரைவிலேயே அவரைத் தேடி வந்தது.
    193 படங்களில் நடித்த சிவகுமார் மாறுபட்ட வேடங்களில் சாதனை படைத்தவர்

    "விதம் விதமான கதாபாத்திரங்களில் 193 படங்களில் நடித்தவர். ஓவியம் வரைவதில் அபார ஆற்றல் படைத்தவர். தன்னுடைய கலை உலக வாரிசாக சூர்யாவை உருவாக்கி இருப்பவர். அவர்தான் சிவகுமார்.

    சிவகுமார் பிறந்தது கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காசி கவுண்டன் புதூர் என்ற சிற்றூர். தந்தை ராக்கியா கவுண்டர். தாயார் பழனியம்மாள். சிவகுமார் பிறந்த தேதி 27-10-1941.

    சிவகுமாரின் தந்தை முருக பக்தர்; திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்; ஜாதகம் பார்ப்பதில் வல்லவர். சிவகுமார் பிறந்ததும், குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தார். "இந்தக் குழந்தைக்கு ஓராண்டு நிரம்புவதற்குள், தந்தை இறந்து விடுவார்'' என்று கூறினார்.

    அவர் சொன்ன வாக்கு பலித்தது. சிவகுமாருக்கு 10 மாதம் கூட நிறையாதபோது, தந்தை காலமானார். அப்போது அவருக்கு வயது 33 தான்.சிவகுமாருக்கு ஒரு அக்கா; ஒரு அண்ணன். 32 வயதிலேயே விதவையாகிவிட்ட பழனியம்மாள் மீது மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கும் பெரும் பொறுப்பு விழுந்தது.

    சிவகுமாரின் அண்ணன் சண்முகம் 10-ம் வகுப்பு படித்து முடித்தான். மூத்த மகன் குடும்பச் சுமையில் ஒரு பகுதியை தாங்குவான் என்று பழனியம்மாள் எண்ணியிருந்த வேளையில், `பிளேக்' நோயால் தாக்கப்பட்டு, அந்த 16 வயது இளைஞன் மரணம் அடைந்தான்.

    அப்போது சிவகுமாருக்கு வயது 4.கோவில் பூஜை செய்யும் பழனி பண்டாரத்திடம் "அ'', "ஆ'' கற்றுக்கொண்ட சிவகுமார், சொந்த கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலங்கல் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில், முதல் வகுப்பில் சேர்ந்தார்.

    இது, தொழில் மேதை ஜி.டி.நாயுடு பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பில் கெட்டிக்காரராக இருந்த சிவகுமார், `இரட்டை பிரமோஷன்' பெற்று, சூலூர் உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேரச் சென்றார். அவருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

    சிவகுமாரை 6-ம் வகுப்பில் சேர்த்தால், அவர் 14-ம் வயதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வேண்டி இருக்கும். ஆனால், 15 வயது பூர்த்தியாகியிருந்தால்தான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பது விதி. எனவே, அவரை 5-ம் வகுப்பில்தான் சேர்த்தார்கள்.

    சிவகுமாரின் தந்தை 14 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருந்தார். அது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் மஞ்சள் சோளம், பருத்தி, தினை, கேழ்வரகு போன்ற தானியங்களும், பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, கொள்ளு போன்ற பயிறு வகைகளும் விளையும். படிப்பு நேரம் போக, அம்மாவுக்கு துணையாக விவசாயத்தில் ஈடுபடுவார், சிவகுமார். அம்மா விவசாய வேலைகளை கவனித்ததால், அக்கா சுப்புலட்சுமிதான் சிவகுமாருக்கு சாதம் வடித்து பள்ளிக்குக் கொண்டு போக தூக்குப் பாத்திரத்தில் போட்டுக்கொடுப்பார்.

    அம்மாவுக்கு உதவியபடி படிப்பையும் ஒழுங்காக கவனித்து எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினார். ஆறாம் வகுப்பில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி. வரை ஒன்றாக படித்த 25 மாணவர்களும், 10 மாணவிகளும் ஆசிரியர்களுடன் `குரூப்' போட்டோ எடுக்க விரும்பினார்கள். போட்டோவுக்கும், சுவீட், காரம், காபி சாப்பிடவும் ஒவ்வொரு மாணவனும் ஐந்து ரூபாய் கட்டுவது என்று முடிவாயிற்று.இது பற்றி அம்மாவிடம் சொல்லி, 5 ரூபாய் கேட்டார், சிவகுமார். குடும்ப நிலை காரணமாக அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது.

    "இப்ப அந்த போட்டோ எடுக்கலைன்னா ஒன்றும் குடிமுழுகிப் போகாது. காசு இல்லே, போ!'' என்று கூறிவிட்டார். பள்ளிக்கூடத்தில் குரூப் போட்டோ எடுக்கப்பட்டபோது, சிவகுமாரும் அவருடைய நிலையில் இருந்த வேறு சில மாணவர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள். "பணம் இல்லாவிட்டால் என்ன? குரூப் போட்டோவுக்கு மட்டுமாவது நில்லுங்கடா!'' என்று மற்ற மாணவர்கள் கெஞ்சிக் கேட்டும், சிவகுமாரும், அவர் நண்பர்களும் சம்மதிக்கவில்லை.

    பிற்காலத்தில் சிவகுமார் பெரிய நடிகராகி, ஊர் பக்கம் போகும்போது, சில நண்பர்களின் வீடுகளில் அந்த குரூப் போட்டோ மாட்டப்பட்டிருப்பதை பார்ப்பார். அவர் தொண்டை அடைக்கும். "என்னுடைய 40 வருட சினிமா - சின்னத்திரை வாழ்க்கையில், கோடிக்கணக்கான பிலிம் பிரேம்களில் என் உருவம் பதிவாகியிருக்கும்.

    ஆனால் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், அந்த குரூப் போட்டோவுக்கு ஈடில்லை. அந்தப் படத்தில் நான் இடம் பெறாமல் போனதால், இப்போது எந்தப் பள்ளி விழாவுக்கு நான் சென்றாலும், குரூப் போட்டோ எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறேன். புகைப்படக்காரருக்கு உரிய பணத்தை நானே கொடுத்து விடுகிறேன்'' என்று கூறுகிறார், சிவகுமார். சிவகுமாருக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமும், ஆற்றலும் இருந்தன.

    எட்டாம் வகுப்பு படிக்கும்போது, விஞ்ஞான பாடத்தில் முதுகு எலும்பின் படத்தை வரையவேண்டியிருந்தது. வரைவதற்கு மிகவும் சிரமமான படம். எல்லா மாணவர்களும் திணறினார்கள். ஆனால் சிவகுமாரோ, மூன்றே நிமிடங்களில் 33 எலும்புகளையும் வில்போல் அழகாக வரைந்து விட்டார்.

    பள்ளியில் ஓவியம் வரைய வேண்டிய நாட்களில் எல்லாம், மற்ற மாணவர்கள் சிவகுமாருக்கு ஒரு `சாக்லேட்' வாங்கிக் கொடுத்துவிட்டு, படத்தை அவரிடம் வரைந்து வாங்கிக்கொண்டு போவார்கள்! எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பது சிவகுமாரின் திட்டம்.

    ஆனால் அவருடைய ஓவியத் திறனைக் கண்ட நண்பர்கள், "ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படி. பேரும், புகழும் பெறலாம்'' என்றார்கள். எனவே, சென்னையில் உள்ள அரசு ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பம் அனுப்பினார், சிவகுமார்.  
    அகிலன் திரைக்கதை - வசனத்தில் டி.எம்.சவுந்தரராஜன் நடித்த பட்டினத்தார்

    பிரபல இசை அமைப்பாளராகத் திகழ்ந்த ஜி.ராமநாதன், 1962-ல் பட்டினத்தார் வரலாற்றை திரைப்படமாகத் தயாரித்தார்.

    பட்டினத்தாராக பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நடித்தார். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் இடைவிடாமல் பின்னணி பாடிக்கொண்டிருந்த சவுந்தரராஜன், பட்டினத்தார் மீது கொண்ட பற்றின் காரணமாக படத்தில் நடிக்க முன்வந்தார். முக்கிய வேடத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார்.

    இந்தப் படத்திற்கான திரைக்கதை, வசனத்தை தஞ்சை ராமையாதாசும், அகிலனும் இணைந்து எழுதினார்கள். படத்தை கே.சோமு டைரக்ட் செய்தார். டி.எம்.சவுந்தரராஜன், தன்னால் சிறப்பாக நடிக்கவும் முடியும் என்பதை, இப்படத்தின் மூலம் நிரூபித்தார். ஜி.ராமநாதன் இசை அமைப்பில். டி.எம்.எஸ். குரலில் பாடல்கள் சிறப்பாக அமைந்தன. அகிலன், தஞ்சை ராமையாதாஸ் வசனங்கள், ஆழமாக அமைந்திருந்தன. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், பிரமாதமாக ஓடியது.

    அகிலன் புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்தும்-எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் படங்களின் கதாசிரியராக இருந்தும் வசதியுடன் வாழவில்லை. வரவை விட செலவு அதிகமாக இருந்தது. நிரந்தரமான வேலை ஒன்றில் இருந்து கொண்டு, எழுத்துப்பணியிலும், கலைப்பணியிலும் ஈடுபடுவது நல்லது என்று, அவர் மீது அன்பு கொண்ட நண்பர்கள் எடுத்துக் கூறினார்கள்.

    அதிர்ஷ்டவசமாக, சென்னை வானொலி நிலையத்தில் சொற்பொழிவுத்துறை அமைப்பாளர் வேலை காலியாக இருந்தது. அதில் அகிலன் சேர்ந்தார். அந்தப்பணி அவருடைய இலக்கிய ஆர்வத்துக்கு இசைந்ததாக இருந்தது. அதே சமயம், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

    1966-ல் இப்பணியில் சேர்ந்த அகிலன், பிறகு தென்னிந்திய முதன்மை அமைப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1982-ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இலக்கியத்துக்காக இந்தியாவில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதான "ஞானபீட விருது'' பெற்றவர், அகிலன். அவர் எழுதிய "சித்திரப்பாவை'' என்ற நாவலுக்காக இந்த விருது கிடைத்தது.

    1977 செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் அகிலனிடம் ஞானபீட விருதை (தங்கப்பதக்கத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கம்) அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் வழங்கினார். ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் என்பது குறிப்பிடத்தக்கது. (அகிலனை அடுத்து, ஜெயகாந்தன் சமீபத்தில் இந்த விருதைப் பெற்றார்.)

    அகிலனுக்கு "நற்கதை நம்பி'' என்ற பட்டத்தை குன்றக்குடி ஆதீனத்தின் சார்பாக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, ஏற்கனவே முதல்-அமைச்சராக இருந்தபோது வழங்கினார். அகிலனின் நாவல்களும், சிறுகதைத் தொகுதிகளும், தமிழக அரசின் பரிசுகளைப் பெற்றுள்ளன. பல கதைகள் இந்தி, வங்காளம், கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பல கதைகள், பாட புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன.

    ரஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் அகிலன் சுற்றுப்பயணம் செய்துள்ளார். திருமண விழாக்களில் நடத்துவதற்கென்றே இவர் எழுதிய "வாழ்வில் இன்பம்'' என்ற நாடகத்தையும், "உயிர்ப்பலி'' என்ற நாடகத்தையும் (தாகூரின் கதை) டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகமாக நடத்தினர்.

    அகிலனின் "சித்திரப்பாவை'', "வானமா பூமியா'', "நெஞ்சின் அலைகள்'' ஆகிய கதைகள், டெலிவிஷன் தொடர்களாக ஒளிபரப்பாயின. "நெஞ்சின் அலைகள்'' தொடருக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் அகிலனின் மகனான அகிலன் கண்ணன். இலக்கியத்தில் அரும்பெரும் சாதனைகள் புரிந்த அகிலன் 1988 ஜனவரி 31-ந்தேதி காலமானார்.
    தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய "பாவை விளக்கு" நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

    தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய "பாவை விளக்கு" நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார். கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனங்கள் எழுதின.

    புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களூர், அகிலனின் சொந்த ஊர். அங்கு 1922 ஜுன் 27-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் வைத்தியலிங்கம் பிள்ளை. தாயார் அமிர்தம்மாள்.

    பள்ளிப்படிப்பை முடித்ததும், ரெயில்வே தபால் இலாகாவில் (ஆர்.எம்.எஸ்.) வேலை பார்த்தார். ஓடும் ரெயில் தபால்களைப் பிரிப்பதுதான் அவர் பணி.

    பள்ளியில் படிக்கும்போதே கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் பக்குவமும், வேகமும், விறுவிறுப்பும் இருந்த காரணத்தினால், அவருடைய கதைகள், யாருடைய சிபாரிசும் இன்றி "கலைமகள்" முதலான பத்திரிகைகளில் பிரசுரமாயின.

    "கலைமகள்" முதன் முதலாக நடத்திய நாவல் போட்டியில், அகிலனின் "பெண்" என்ற நாவல் முதல் பரிசு பெற்றது. அதைத் தொடர்ந்து, இலக்கிய உலகில் அகிலன் புகழ் பெற்றார்.

    அகிலன் தன் குடும்பத்தாருடன் திருச்சியில் வசித்து வந்தார். அகிலனின் எழுத்துக்களுக்கு வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்ததால், எல்லா பத்திரிகைகளும் அகிலனிடம் கதைகளைப் பெற்று பிரசுரித்தன.

    1957 மத்தியில் "கல்கி"யில் "பாவை விளக்கு" தொடர் கதையை அகிலன் எழுதினார். உணர்ச்சிமயமாக அமைந்த அந்தக் கதை வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பட அதிபர் எம்.ஏ.வேணுவும், அப்போது கதை - வசன ஆசிரியராக விளங்கிய ஏ.பி.நாகராஜனும், சேலத்தில் "சம்பூர்ண ராமாயணம்" படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது. "பாவை விளக்கு" கதை முடியாமல் இருந்தபோதே, அந்தக் கதையை சினிமா படமாகத் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் விருப்பம் தெரிவித்தார். கணிசமான தொகையை முன் பணமாகக் கொடுத்தார்.

    படம் தயாராகும்போது, உடன் இருக்குமாறு அகிலனை ஏ.பி.நாகராஜன் கேட்டுக்கொண்டார்.

    ஆர்.எம்.எஸ். வேலையை விட்டு விலகி, முழு நேர எழுத்துப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் அகிலனுக்கு ஏற்கனவே இருந்தது. சினிமாத் துறையிலும் தனக்கு வரவேற்பு இருந்ததால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்தோடு சென்னையில் குடியேற முடிவு செய்தார்.

    அகிலன் அரசு வேலையை விட்டு விட்டு, திருச்சியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது, அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். ஏ.பி.நாகராஜன்யூனிட்டில் எடிட்டராக இருந்த விஜயரங்கமும், ஒளிப்பதிவாளராக இருந்த கோபண்ணாவும் இணைந்து "விஜயகோபால் பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியை தொடங்கினர். அந்த பேனரில் "பாவை விளக்கு" படமாகியது. கதாநாயகனாக (எழுத்தாளன் தணிகாசலமாக) சிவாஜிகணேசன் நடித்தார். கதாநாயகனை 4 பெண்கள் காதலிப்பது போல் அமைந்ததுதான் கதை.

    1) தேவகி இளம் விதவை. இவளுடைய ஒருதலைக் காதல் ஆரம்பத்திலேயே கருகி விடுகிறது. இந்த வேடத்தில் பண்டரிபாய் நடித்தார்.
    2) செங்கமலம். தாசி குலத்தில் பிறந்தவள். செங்கமலமும், தணிகாசலமும் நேசித்தும், அவர்கள் காதல் நிறைவேறவில்லை. செங்கமலம் வேடத்தில் குமாரி கமலா.
    3) முறைப்பெண் கவுரி, இவள்தான் தணிகாசலத்தை மணக்கிறாள். இந்த வேடத்துக்கு சவுகார்ஜானகி.
    4) உமா. படித்தவள்; பண்புள்ளவள். முதலில் தணிகாசலத்தின் எழுத்தில் உள்ளத்தை பறிகொடுப்பவள், பின்னர் அவனிடமே தன் இதயத்தை இழக்கிறாள். ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழும் தணிகாசலத்தை, மனப்போராட்டத்தில் சிக்கித்தவிக்க வைக்கும் உமாவாக எம்.என்.ராஜம் நடித்தார்.

    கே.வி.மகாதேவன் இசை அமைக்க, திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுதினார். சோமு டைரக்ட் செய்தார். அகிலனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில், படத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்கினார். குற்றாலம், மும்பை, டெல்லி, ஆக்ரா முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

    குறிப்பாக, சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜ் வேடங்களில் தோன்றி, "காவியமா, நெஞ்சில் ஓவியமா?" என்று பாடும் காட்சி, தாஜ்மகாலின் பல்வேறு பகுதிகளிலும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. "வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்", "சிதறிய சலங்கைகள்போல" முதலான பாட்டுகளும் நன்றாக இருந்தன.

    குறிப்பாக, "வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி..." பாடலின் தொடக்கத்தை சிவாஜி பாட, தொடர்ந்து சிதம்பரம் ஜெயராமன் பாடியது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1960 தீபாவளிக்கு "பாவை விளக்கு" வெளியாகியது.

    படம், பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆயினும், "ஒருவனை 4 பெண்கள் காதலிப்பதா?" என்று பத்திரிகைகள் இரண்டு பிரிவாக பிரிந்து விவாதம் செய்தன. படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டிய பத்திரிகைகள் கூட, மூன்று குறைகளைச் சுட்டிக்காட்டின. சிதம்பரம் ஜெயராமனின் குரல், சிவாஜிக்குப் பொருத்தமாக இல்லை.

    பெரும்பாலான படங்களில் வில்லியாகவே நடித்து வந்த எம்.என்.ராஜம், உமா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை. சிவாஜிகணேசனை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில இடங்களில் அவரை "படிக்காத மேதை" ரங்கன் பாணியில் நடிக்கச் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

    இவ்வாறு பலரும் கூறினர்.    
    ×