என் மலர்
சினி வரலாறு
நடிகை அம்பிகா "மாவீரன்'' படத்தில் குதிரை சவாரி செய்தபோது விபத்தில் சிக்கி, அதிசயமாக உயிர் தப்பினார்.
சிவாஜிகணேசனுடன், "வாழ்க்கை'' (1984) படத்தில் வயதான தோற்றத்தில் நடித்ததால், "இனி அம்மா வேடத்தில் தான் நடிக்க வேண்டி இருக்கும்'' என்று சிலர் அம்பிகாவை பயமுறுத்தியது, தவறாக முடிந்தது. ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகுமார், மோகன் என்று இளம் நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார். அதுமட்டுமல்ல; தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்தார்.
தென்னிந்திய மொழிகளில் அம்பிகா புகழ் பெற்று விளங்கிய அதே காலக்கட்டத்தில், அவர் தங்கை ராதாவும் கொடிகட்டிப் பறந்தார்.
லலிதா - பத்மினி சகோதரிகளுக்குப் பின்னர், தென்னிந்தியாவின் புகழ் பெற்ற நட்சத்திர சகோதரிகளாக அம்பிகாவும், ராதாவும் விளங்கினர். "எங்கேயோ கேட்ட குரல்'', "வெள்ளை ரோஜா'', "இதயக்கோவில்'', "மனக்கணக்கு'', "காதல் பரிசு'', "தாம்பத்யம்'', "அண்ணாநகர் முதல்தெரு'' முதலான படங்களில், இந்த சகோதரிகள் சேர்ந்து நடித்தனர்.
ரஜினிகாந்துடன் அம்பிகா நடித்த படங்களில் "படிக்காதவன்'' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் சிவாஜிகணேசனும் நடித்தார். அவர், ரஜினிக்கு அண்ணனாக நடித்தார்.
அம்பிகாதான் ரஜினிக்கு ஜோடி. அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது. நிறை கர்ப்பிணிபோல வேடம் போட்டு, வயிற்றில் சாராய பாட்டில்களை மறைத்துக் கடத்தும் வேடத்தில் திறமையாக நடித்து, ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றார்.
ரஜினியுடன் அம்பிகா நடித்த "நான் சிகப்பு மனிதன்'', "மிஸ்டர் பாரத்'' ஆகிய படங்களும், கமலுடன் நடித்த "விக்ரம்'', "காதல் பரிசு'', "காக்கிச்சட்டை'' ஆகிய படங்களும் பெரிய வெற்றிப்படங்கள்.
சிவகுமாருடன் "கற்பூரதீபம்'', விஜயகாந்துடன் "தண்டனை'', சத்யராஜுடன் "மக்கள் என் பக்கம்'' ஆகிய படங்களில் அம்பிகா நடித்தார்.
"மாவீரன்'' படத்தில் நடிக்கும்போது, அம்பிகா பெரிய விபத்தில் சிக்கி தப்பினார்.
இந்தப் படத்தில் வரும் "நீ கொடுத்ததை தருவேன்'' என்ற பாடல் காட்சி, மைசூரில் படமாக்கப்பட்டது. ரஜினிகாந்த் வேகமாக குதிரையில் செல்லும்போது, அம்பிகாவையும் தூக்கி குதிரையில் உட்கார வைத்துக்கொண்டு போவார்.
அப்போது நடந்த விபத்து பற்றி அம்பிகா குறிப்பிடுகையில், "நைலான் துணியில் தைத்த உடையை எனக்கு கொடுத்திருந்தார்கள். குதிரையில் ஏறியபோது, துணி வழுக்கி நான் கீழே விழுந்துவிட்டேன். குதிரை சிறிது தூரம் என்னை இழுத்துச் சென்றுவிட்டது. நல்லவேளையாக, காயத்துடன் தப்பினேன்'' என்றார்.
இதேபோல, "கடல் மீன்கள்'' படப்பிடிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடந்தபோதும், குதிரையில் இருந்து விழுந்துவிட்டார்.
தன் திரை உலக அனுபவங்கள் பற்றி அம்பிகா கூறியதாவது:-
"என்னை `ஐ.ஏ.எஸ்' ஆக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். சட்டம் பயில வேண்டும் என்பது என் விருப்பம். சினிமாவுக்கு வராமல் இருந்தால், வக்கீலாகியிருப்பேன்.
சினிமா நடிகையானதில் மகிழ்ச்சி அடைகிறேன். மறுபிறவி என்று ஒன்று இருக்குமானால், இதே குடும்பத்தில், இதே பெற்றோருக்கு மகளாக, இதே சகோதரிகளுடன் பிறக்கவேண்டும்; இதே மாதிரி சினிமா நட்சத்திரமாக புகழ்பெறவேண்டும். இதுவே என் ஆசை.
நானும், என் சகோதரி ராதாவும், ஒரே சமயத்தில் சினிமாவில் நடித்தபோதிலும் எங்களுக்குள் போட்டியோ, பொறாமையோ கிடையாது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருந்தோம்.
ஒரு சமயம், சிவகுமார் சார் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "ராதா மிகச்சிறந்த நடிகை'' என்று குறிப்பிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிவகுமார் கூறியதை ராதாவிடம் சொல்லி பெருமைப்பட்டேன்.
சினிமாத்துறையில் அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். என் கலைப்பயணம் தொடர்ந்து நடைபெறும்.''
இவ்வாறு அம்பிகா கூறினார்.

சிவாஜிகணேசனும், அம்பிகாவும் வாழ்க்கை படத்தில், வயதான வேடத்தில் இணைந்து நடித்தனர்.
சிவாஜிகணேசனும், அம்பிகாவும் "வாழ்க்கை'' படத்தில், வயதான வேடத்தில் இணைந்து நடித்தனர்.
இளம் கதாநாயகர்களுடன் நடித்து வந்த அம்பிகா, முதன் முதலாக சிவாஜிகணேசனுடன் "கருடா சவுக்கியமா'' படத்தில் நடித்தார். ஜோடியாக அல்ல; மகளாக!
பிறகு சிவாஜியுடன் "வெள்ளை ரோஜா'' படத்தில் நடித்தாலும், பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.
1984-ல் சித்ரா லட்சுமணனும், சித்ரா ராமுவும் தயாரித்த "வாழ்க்கை'' என்ற படத்தில், சிவாஜியும், அம்பிகாவும் ஜோடியாக நடித்தனர். இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற "அவதார்'' என்ற படத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. சி.வி.ராஜேந்திரன் டைரக்ட் செய்தார். வசனம்: பஞ்சு அருணாசலம். இசை: இளையராஜா.
"வாழ்க்கை'' என்ற பெயரில், 1949-ல் ஏவி.எம். தயாரித்த படம் மகத்தான வெற்றி பெற்றது. இப்படத்தில்தான், வைஜயந்திமாலா அறிமுகம் ஆனார். பொதுவாக, பழைய படங்களின் பெயர்களில் மீண்டும் எடுக்கப்படும் படங்கள் சரியாக ஓடுவதில்லை. ஸ்ரீவள்ளி, நல்லதம்பி, கட்டபொம்மன், சந்திரலேகா முதலிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், சிவாஜி - அம்பிகா நடித்த "வாழ்க்கை'', வெற்றிப்படமாக அமைந்தது.
வயதான தோற்றத்தில் சிறப்பாக நடித்தார், அம்பிகா. இந்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது:-
"சிவாஜி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்க முடியுமா என்று பயந்தேன். இதை அறிந்து கொண்ட சிவாஜி, "எதற்கும் பயப்படாதே. தன்னம்பிக்கையுடன் இயல்பாக நடி'' என்றார்.
"நமக்கு திருமணம் ஆகி இன்றோடு 25 ஆண்டு ஆகிவிட்டது'' என்பதுதான் நான் பேசவேண்டிய முதல் வசனம். அதற்கு சிவாஜி, "நீ அன்றைக்கு எப்படி இருந்தாயோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறாய்!'' என்பார். இந்த முதல் காட்சி ஒரே `டேக்'கில் `ஓகே' ஆயிற்று. நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
இந்தப் படத்தின்போது, நடிப்பின் பல்வேறு நுணுக்கங்களை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன். என்னை அருகில் உட்காரச் சொல்வார். `பெரிய சீனாக இருக்கிறதே என்று பயப்படாதே. ரிகர்சல் பண்ணு' என்று கூறுவார். "கஷ்டமாக இருந்தால் எழுதி வைத்து மனப்பாடம் செய்துகொள்'' என்பார். ஒரே வரியை எப்படி எப்படி எல்லாம் பேசலாம் என்று நடித்துக் காட்டுவார். அதன்பிறகு, `எப்படி பேசினால் சீனுக்கு சரியாக இருக்கும் என்பது உனக்குத் தெரியும். அதை செய்' என்பார். ஒருவர் டயலாக் பேசும்போது அருகில் நிற்பவரும் நடிக்க வேண்டும் என்று கூறுவார்.
`15 நிமிடத்திற்குள் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருங்கள். 30 நிமிடத்திற்கு மேல் ஆகும் என்றால் மேக்-அப் ரூமுக்கு போங்கள்' என்பார். அதை நான் இன்றும் கடைபிடிக்கிறேன். "வாழ்க்கை'' படத்தில், மகனுக்காக சிவாஜி சாரிடம் நான் மடிப்பிச்சை கேட்கும் காட்சி வரும். அதில் சிறப்பாக நடித்ததாக சிவாஜி பாராட்டினார். அதைப் பெருமையாக நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் ஒரு வேடிக்கை. முன்பு எனக்கு ஜோடியாக நடித்த ரவீந்திரன், இதில் மகனாக நடித்தார்! பல படங்களில், தீபாவும், நானும் சிறுமிகளாக நடித்திருக்கிறோம். அந்த தீபா, எனக்கு மருமகளாக நடித்தார்! "வாழ்க்கை'' படத்துக்குப் பிறகு, சிவாஜியுடன் "திருப்பம்'', "தாம்பத்யம்'' ஆகிய படங்களில் நடித்தேன். 1984-ல், "நான் பாடும் பாடல்'' படத்தில், சிவகுமார் சாருடன் சேர்ந்து நடித்தேன். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாதது.
"நான் பாடும் பாடல் படத்திற்கு 2 கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு காட்சியில், சிவகுமார் சார் எனக்கு நெற்றியில் பொட்டு வைப்பார். அப்போது நான் அவரை கன்னத்தில் அடிக்க வேண்டும். அதற்கு எனது மாமனார், "ஏன் அவரை அடித்தாய்?'' என்று கேட்பார். "எனக்கு பொட்டு வைத்தார். அதனால் அடித்தேன்'' என்று கூறுவேன். அதற்கு மாமனார், "அவனை நீ அடித்ததால் அவனைத் தொட்டுவிட்டாய்'' என்று கூறுவார்.
நான், "சிவகுமார் சார் கன்னத்தில் அடிக்கமாட்டேன்'' என்று கூறிவிட்டேன். ஆனால் சிவகுமார் பயப்படாமல் அடிக்கச் சொன்னார். "முடியாது'' என்றதால், என் கையை எடுத்து தனது கன்னத்தில் அடித்துக் காட்டினார். அதன் பின்னர் வேகமாக அடிப்பது போல கையை கொண்டு சென்று, கன்னத்தில் மெதுவாக அடித்து நடித்தேன்.
அடிப்பதற்கு பயந்ததில் காரணம் இருந்தது. "அக்னிபர்வதம்'' என்ற படத்தில், சத்தார் என்பவர் நடித்தார். ஒரு காட்சியில் அவர் என்னை அடிக்க வேண்டும். அந்த காட்சியில் நிஜமாகவே பளார் என்று என் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். அவர் அடித்த அடியில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அடியை என்னால் மறக்கவே முடியாது. எனவேதான், அந்த வலி பிறருக்கு வரக்கூடாது என்று, நான் அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிக்காமலே கையை ஓங்கி பட்டும் படாமலும் நடித்து விடுவேன்.''
இவ்வாறு அம்பிகா கூறினார்.
அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், லதா மங்கேஷ்கரும் இசை நிகழ்ச்சி நடத்தினர். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன், தனது "வெள்ளை மாளிகை''க்கு அவர்களை அழைத்து, விருந்தளித்துப் பாராட்டினார்.

1995-ல் "ஆசிய டாக்டர்கள் சங்கம்'', இந்தியாவில் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தது. அதற்காக நிதி திரட்ட, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவர் தங்கை எஸ்.பி.சைலஜாவும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதற்கு 10 லட்சம் டாலர் வசூலாயிற்று. இதுபோல், வடநாட்டில், லதா மங்கேஷ்கர் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இப்படி நிதி வசூல் செய்து கொடுத்ததற்காக, அமெரிக்காவில் நடந்த ஒரு மாநாட்டில், லதா மங்கேஷ்கரும், பாலசுப்பிரமணியமும் பாராட்டப்பட்டனர். இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் லதாவும், பாலுவும் பாடினார்கள். அவர்களுடைய இசைத் திறமையையும், குரல் இனிமையையும் கிளிண்டன் பாராட்டினார்.
அத்துடன், அவர்கள் இருவரையும் ஜனாதிபதி மாளிகைக்கு ("வெள்ளை மாளிகை'') வரச்செய்து, கிளிண்டனும், அவர் மனைவியும் விருந்தளித்து கவுரவித்தனர். `39 ஆண்டுகளில் 36 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கிறார்; இசை அமைக்கிறார்; படங்களில் நடிக்கவும் செய்கிறார்; வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். இதெல்லாம் எப்படி முடிகிறது?'' என்று பலரும் வியப்புடன் கேட்கிறார்கள்.
இதற்கு பாலசுப்பிரமணியம் பதில்:
"காலை 7 மணி முதல் 9 மணி வரை டப்பிங் பேசுகிறேன். அதன் பிறகு ஒரு மணி வரை படத்தில் நடிக்கிறேன். பிறகு, பிற்பகல் 3 மணி வரை மீண்டும் டப்பிங். அதன் பிறகு மாலை 6 மணி வரை படப்பிடிப்பு. மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பாடுகிறேன். தேவையானபோது இதில் மாற்றங்கள் செய்து கொள்வேன். இரவு - பகலாக வேலை செய்தாலும், வருடத்தில் 2 மாதம் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன். அப்போது, குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறேன். சில சமயம் ஒரே நாளில் அதிக பாடல்களைப் பாடி பதிவு செய்திருக்கிறேன்.
1981 பிப்ரவரி 8-ந்தேதி பெங்களூரில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்ந்து 17 பாடல்கள் பாடினேன். அவற்றை கன்னட இசை அமைப்பாளர் உபேந்திரகுமார் பதிவு செய்தார். இதற்கு முன் ஒரு சமயம், ஒரே நாளில் தமிழில் 19 பாடல்கள் பாடி இருக்கிறேன். ஒரே நாளில் 16 இந்திப் பாடல்கள் பாடி இருக்கிறேன்!'' என்றார், பாலசுப்பிரமணியம். பாலுவின் தங்கை எஸ்.பி.சைலஜா ஒரு நல்ல பாடகி. 10 வயதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். கமலஹாசன் நடித்த "சலங்கை ஒலி'' படத்தில், ஜெயப்பிரதாவின் மகளாக நடித்துள்ளார். தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் பின்னணியில் பாடியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை அமைப்பாளராக ஆனபோது, தங்கைக்கு சலுகை காட்டியது இல்லை. அவரை பாடச்சொல்லும்படி பட அதிபர் கூறினால் மட்டும் வாய்ப்பு அளிப்பார். "ஏக் துஜே கேலியே'' படத்தில் சிறப்பாக பாடியதற்காக பாலுவுக்கு தேசிய விருது கிடைத்தபோது, அவர் டெல்லிக்கு சென்று ஜனாதிபதியிடம் பரிசைப் பெற்றுக்கொண்டார். அப்போது, தன் பெற்றோரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.
அதுவரை அவர்கள் விமானத்தில் பயணம் செய்ததில்லை. "விமானம் வேண்டாம். ரெயிலில் வருகிறோம்'' என்று தந்தை கூறினார். "ரெயிலில் டெல்லிக்கு போக 2 நாட்கள் ஆகும். விமானத்தில் பயணம் செய்தால் சில மணி நேரத்தில் போய் விடலாம். களைப்பு தெரியாது'' என்று எடுத்துக்கூறி, அவர்களை சம்மதிக்க வைத்தார். டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெற்றோர் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் மிக வசதியோடு இருக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார்.
எல்லோரும் அவரவர் அறையில் படுத்துத் தூங்கினார்கள். நடு இரவில், பாலுவின் அறைக்கதவு தட்டப்பட்டது. பதறிக்கொண்டு எழுந்து கதவைத் திறந்தார். வெளியே அவர் தந்தை நின்று கொண்டிருந்தார். "என்னப்பா? என்ன வேண்டும்?'' என்று கேட்டார்,பாலு. "என் அறைக்கு வாயேன்'' என்று அழைத்துச் சென்றார். தண்ணீர் குழாயைக்காட்டி, "இந்தக் குழாயை எப்படி திறக்க வேண்டும்?'' என்று கேட்டார். நட்சத்திர ஓட்டல்களில், குழாய்கள் வெவ்வேறு வடிவமைப்பில் இருக்கும். புதிதாகத் தங்குவோர் அவற்றை இயக்க திணறிப்போவார்கள். குழாய்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை, தந்தைக்கு விளக்கினார், பாலு. "பாலு! இந்த ஓட்டலுக்கு எவ்வளவு வாடகை?'' என்று தந்தை கேட்டார்.
"6 ஆயிரம் ரூபாய்!'' என்றார், பாலு. "ஏம்பா! படுக்க ஒரு கட்டில், குளிக்க ஒரு பாத்ரூம். இதுதான் நமக்குத் தேவை. இதற்கு ஏன் 6 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும்? பணம் வரும்போது அதை கவனமாக செலவழிக்க வேண்டும்'' என்று கூறிவிட்டு, தரையில் படுத்துக்கொண்டார்! "ஏம்பா தரையில் படுக்கிறீங்க?'' என்று கேட்டார், பாலு. "எனக்கு அந்த மெத்தை ஒத்துக்கொள்ளவில்லை. தூக்கமே வரவில்லை. எனக்கு இதுதான் சவுகர்யம்'' என்று கூறிவிட்டு படுத்துத் தூங்கிவிட்டார், பாலுவின் அப்பா. சென்னையில், பாடல்கள் பதிவு செய்யும் "ரிக்கார்டிங் தியேட்டர்'' ஒன்றை அமைக்க பாலு விரும்பினார்.
விருகம்பாக்கம் அருகே, பட அதிபர் "சாண்டோ'' சின்னப்ப தேவர் தனக்குப் பிடித்தமான மிருகங்களை வளர்க்க நிலம் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அதை விற்க முடிவு செய்தார். அந்த நிலத்தை பாலு வாங்கினார். அங்கு "ரிக்கார்டிங் தியேட்டர்'' அமைத்தார். தான் சினிமா உலகில் நுழைவதற்குக் காரணமாக இருந்த கோதண்டபாணியின் பெயரை, அந்த ரிக்கார்டிங் தியேட்டருக்கு சூட்டினார்.
இந்த தியேட்டர் அமைப்பதற்காக பாடுபட்டவர் பாலுவின் நண்பர் ராதாகிருஷ்ணன். தியேட்டர் திறக்கப்படுவதற்கு முன், அவர் திடீரென்று காலமாகிவிட்டார். ரிக்கார்டிங் தியேட்டரின் மாடியில், ஒரு டப்பிங் தியேட்டரைக் கட்டி, அதற்கு ராதாகிருஷ்ணன் பெயரை சூட்டியுள்ளார், பாலசுப்பிரமணியம்.
ஏக்துஜே கேலியே'' என்ற இந்திப்படத்தில் பாடியதன் மூலம், அகில இந்திய புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான "ஏக்துஜே கேலியே'' என்ற இந்திப்படத்தில் பாடியதன் மூலம், அகில இந்திய புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இந்தப் படத்தில் சிறப்பாகப் பாடியதற்காக ஜனாதிபதியின் தேசிய விருது பெற்றார்.
பாலசந்தர் உருவாக்கிய "மரோசரித்திரா'' தெலுங்குப் படம், மகத்தான சாதனை படைத்த படமாகும். இதில் கமலஹாசனும், சரிதாவும் இணைந்து நடித்தனர். கறுப்பு வெள்ளையில் உருவான இந்தப்படம், சென்னையில் 596 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது.
"மரோசரித்திரா'' தமிழில் தயாராகவில்லை. ஆனால் அதை இந்தியில் தயாரிக்க, பட அதிபரும், டைரக்டருமான எல்.வி.பிரசாத் முடிவு செய்தார். டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடமே ஒப்படைத்தார். வண்ணத்தில் உருவான இந்தப்படத்தில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். கமலஹாசன் தமிழ் இளைஞன். ரதி, வடநாட்டுப் பெண். இவர்களிடையே மலரும் காதல் பற்றியதே கதை.
படத்தின் முடிவு, இதயத்தைப் பிழியும் சோகமாக அமைந்தது. "ஏக் துஜே கேலியே'' படத்தின் மூலம், இந்திப்பட உலகுக்கு பாலசுப்பிரமணியம் அறிமுகம் ஆனார். பாலு லண்டனில் இருந்தபோது, அவருக்கு எல்.வி.பிரசாத் டெலிபோன் செய்தார். "இந்தியாவுக்கு திரும்பியவுடன், என்னுடைய இந்திப்படமான ஏக்துஜே கேலியேவில் நீங்கள் பாடவேண்டும்'' என்று கூறினார்.
தென்னிந்திய மொழிகளில் மட்டும் அதுவரை பாடி வந்த பாலு, முதல் முறையாக இந்திப் படத்துக்கு பாடினார். இந்திப்பட உலகில் பிரபல பாடகர்களாக இருந்த முகமது ரபி, முகேஷ், கிஷோர்குமார் ஆகியோர் ஒருவர்பின் ஒருவராக மறைந்தனர். இதனால், அங்கே பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை பாலு பூர்த்தி செய்தார். "இந்தியாவின் இசைக்குயில்'' என்று புகழ் பெற்ற லதா மங்கேஷ்கருடன் பாலு இணைந்து பாடினார்.
இதுபற்றி பாலு கூறியதாவது:-
"லதாஜியுடன் முதன் முதலில் நான் 1979-ல் பாட ஆரம்பித்தேன். ஏக்துஜே கேலியே படத்துக்காக நாங்கள் டூயட் பாடியபோது, அந்த இந்திப்பாடலின் இடையே கமலுக்காக நான் சில தமிழ் வார்த்தைகளைப் பேசினேன். பாடலின் இடையே `நீ ரொம்ப நல்லாப் பாடுறே' என்று தமிழில் நான் சொல்லுவேன். `இதற்கு என்ன அர்த்தம்?' என்று லதா கேட்டார். நான் அர்த்தத்தைச் சொன்னதும், வாய் விட்டுச் சிரித்தார்.
என்னுடைய முதல் பாடலின்போதே, அவரிடம் இந்த வார்த்தையைக் கூற நேர்ந்தது என் பாக்கியம் என்றே நினைக்கிறேன். இந்த முதல் பாடல் பதிவின்போது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. ஒத்திகை நேரத்தில் எங்களுக்கு காபி கொடுக்கப்பட்டது. நான் மிகுந்த பதற்றத்தில் இருந்தேன். அதன் காரணமாக, என் கோப்பையில் இருந்து ஒரு துளி காபி, அவரது வெள்ளைப் புடவையில் பட்டு கறையாகி விட்டது. எனக்கு ஒரு பயம். `நம்முடைய இந்திப்படப் பிரவேசம் இதோடு அஸ்தமனம் ஆகிவிடப்போகிறது' என்று நினைத்தேன்.
ஆனால், லதாஜி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மிகச் சாதாரணமாக நினைத்தார். "இந்திப்பட உலகில் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது'' என்று வாழ்த்தினார். அவர் மிகுந்த பெருந்தன்மையானவர். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். லதாவுடன் எத்தனையோ படங்களில் பாடிவிட்டேன். இசை நிகழ்ச்சிகளிலும் இணைந்து பாடுகிறோம். முதன் முதலாக அவருடன் துபாய் சென்றபோது, 20 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது, `நான் மதிக்கும் சிறந்த பின்னணி பாடகர்' என்று குறிப்பிட்டார். சரஸ்வதிதேவியின் சொரூபமாக நான் நினைக்கும் லதாஜி என்னை அப்படி அறிமுகம் செய்தது என் பாக்கியம்.
தெலுங்கு பின்னணிப் பாடகர்களில் என் முன்னோடியான கண்டசாலாவுக்கு நான் 1990-ல் சிலை அமைத்து, அதை திறந்து வைக்கும்படி லதாவிடம் கேட்டுக்கொண்டேன். என் வேண்டுகோளை ஏற்று, சிலையைத் திறந்து வைத்து பெருமைப்படுத்தினார். விஜயவாடாவில், எனக்கும் லதாவுக்கும் ஒரு பெரிய பாராட்டு விழா நடந்தது. அதில், அவருக்கும் எனக்கும் ஆளுக்கு ரூ.50 ஆயிரம் பண முடிப்பு வழங்கினார்கள். லதா, அவருக்கு கிடைத்த பண முடிப்பை நான் தொடங்கியிருந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி விட்டார்.
1996 அக்டோபர் 14-ந்தேதி, கொல்கத்தாவில் ஒரு பெரிய நிகழ்ச்சியில் நானும், லதாவும் பங்கு கொள்ள ஏற்பாடாகி இருந்தது. இதற்கு மூன்று நாட்களுக்கு முன் என் தாயார் ஒரு விபத்தில் சிக்கி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுபற்றி நான் லதாவுக்கு தெரிவித்து, இசை நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலையில் இருப்பதைச் சொன்னேன். அவரும், "நீங்கள் வரவேண்டாம். தாயாரை கவனித்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
இதுபற்றி அறிந்த என் தாயார், "இசை நிகழ்ச்சிக்கு ஏராளமான பேர் வந்திருப்பார்கள். அவர்களை ஏமாறச் செய்யக்கூடாது. நீ கொல்கத்தாவுக்குப் போய் வா. என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்'' என்றார். அதன் பேரில் நான் கொல்கத்தா சென்று இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மொத்தம் 70 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தார்கள். லதா பேசும்போது, என் தாயார் உடல் நலம் இன்றி இருப்பதைக் கூறி, அதையும் மீறி நான் பாட வந்திருப்பதாகச் சொன்னார். என் தாயார் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கும்படி ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். அவருடைய அன்பு, என்னை நெகிழச் செய்துவிட்டது.''
இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
"ஏக்துஜே கேலியே'' படத்தில் பாலு பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமாக அமைந்தன. சிறந்த பின்னணி பாடகர் என்று, 1979-ல் "சங்கராபரணம்'' தெலுங்குப் படத்துக்காக தேசிய விருது பெற்ற அவர், தனது இரண்டாவது தேசிய விருதை 1981-ல் "ஏக்துஜே கேலியே'' படத்துக்காகப் பெற்றார்.
எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண்'' படத்தில் "ஆயிரம் நிலவே வா'' பாடலைப்பாடி, பெரும் புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

சென்னையில் படிக்கும்போது, தியாகராயர் கல்லூரியில் நடந்த மெல்லிசைப் போட்டியில் கலந்து கொள்ள பாலு சென்றார். அப்போது, பிரபல விளம்பர டிசைனர் பரணி அவருக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
பாலுவை, டைரக்டர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைத்தார், பரணி. ஒரு பாட்டுப் பாடும்படி ஸ்ரீதர் கூற, பிரபலமான பாடல் ஒன்றைப் பாலு பாடினார். மறுநாள், தன்னுடைய சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்படி ஸ்ரீதர் கூறினார்.
அதன்படி பாலு அங்கே சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட வாத்தியக் குழுவினருடன் இசை அமைத்துக்கொண்டிருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன். பாலு இதற்கு முன் சினிமாவுக்காக 10 தெலுங்குப் பாடல்களைப் பாடியிருந்தபோதிலும், இவ்வளவு பெரிய வாத்தியக் கோஷ்டியை பார்த்தது இல்லை. அதனால் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் ஒத்திகை முடிந்ததும், பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஸ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ஆர்மோனியப் பெட்டி முன் அமர்ந்து, "எங்கே, ஒரு பாட்டுப் பாடுங்கள்!'' என்றார். உடனே, ஒரு இந்திப் பாடலைப் பாடினார், பாலு.
"ஒரு தமிழ்ப்பாட்டு பாடமுடியுமா?'' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்க, "தமிழ்ப்பாட்டுப் புத்தகம் எதுவும் என்னிடம் இல்லையே'' என்றார், பாலசுப்பிரமணியம். உடனே, "காதலிக்க நேரமில்லை'' படத்தின் பாட்டுப் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி, அதில் இடம் பெற்ற "நாளாம் நாளாம் திருநாளாம்'' என்ற பாடலை பாடச் சொன்னார், விஸ்வநாதன்.
அந்த தமிழ்ப்பாட்டை, தெலுங்கில் எழுதிக்கொண்டு சிறப்பாக பாடினார், பாலு. அவருடைய குரல் வளம் எம்.எஸ்.வி.க்கு மிகவும் பிடித்திருந்தது. எனினும், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார். "தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு என்னை வந்து பாருங்கள்'' என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.
பாடுவதற்கு அப்போது வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், தன்னுடைய குரல் மெல்லிசை மன்னருக்கு பிடித்துவிட்டதில் பாலு திருப்தி அடைந்தார். இதன்பின் பல தெலுங்குப் படங்களுக்கு அவர் பின்னணி பாடினார்.
இதற்கு சரியாக ஒரு ஆண்டுக்குப்பிறகு, ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் பாலசுப்பிரமணியமும், எம்.எஸ்.விஸ்வநாதனும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர். தன்னை விஸ்வநாதன் மறந்திருப்பார் என்று பாலு நினைத்தார். ஆனால் அவரோ, "தம்பி! ஸ்ரீதர் ஆபீசில் என்னை சந்தித்தது நீங்கள்தானே?'' என்று கேட்டார். ஆமாம்'' என்று பதிலளித்தார், பாலு.
"மீண்டும் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே! ஏன் பார்க்கவில்லை?'' என்று எம்.எஸ்.வி. கேட்க, "தமிழை `இம்ப்ரூவ்' செய்து கொண்டு வரச்சொன்னீர்கள். அதனால்தான் வரவில்லை'' என்று பாலு சிரித்துக்கொண்டே சொன்னார். "இப்போது உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. நாளைக்கே என்னை வந்து பாருங்கள்!'' என்றார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
அதன்படி, மறுநாள் எம்.எஸ்.விஸ்வநாதனை போய் சந்தித்தார், பாலு. "ஓட்டல் ரம்பா'' என்ற படத்துக்கு பாடல் பதிவு நடந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார், பாலசுப்பிரமணியம். முதன் முதலாக அவர் பாடிய "ஓட்டல் ரம்பா'' படம் வெளிவரவே இல்லை! சில நாள் கழித்து "சாந்தி நிலையம்'' படத்தில், "இயற்கை என்னும் இளைய கன்னி'' என்ற பாடலைப்பாடும் வாய்ப்பை, பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப்பாடல் அற்புதமாக அமைந்தது. தன்னுடைய இந்த பாடல் பெரிய `ஹிட்' ஆகும், அதன் மூலம் தனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தார், பாலு. அதற்குள், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பாலுவின் குரல் வளத்தை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை தன்னுடைய "அடிமைப்பெண்'' படத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஆயிரம் நிலவே வா'' என்ற பாடலை பாலு பாடுவது என்று முடிவாகியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாடல் பதிவாகும் தினத்தில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, படுத்த படுக்கையில் இருந்தார்.
அவர் குணம் அடைய 2 மாதம் பிடித்தது. தனக்கு பதிலாக வேறு பாடகரை வைத்து, பாடலைப் பதிவு செய்திருப்பார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால், எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. பாலு குணம் அடையும்வரை, காத்திருந்து பாடலை பதிவு செய்தார்.
பாலு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று நன்றி செலுத்தினார். "தம்பி! என் படத்தில் பாடப்போவதாக எல்லோரிடமும் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களையும், உங்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அதனால்தான், வேறு யாரையும் பாட வைக்காமல், பாடல் பதிவை 2 மாதம் தள்ளிப்போட்டேன்!'' என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதைக்கேட்டு கண் கலங்கிவிட்டார், பாலு.
சாந்தி நிலையத்துக்காக, "இயற்கை என்னும் இளைய கன்னி'' என்ற பாடலைத்தான் முதலில் பாலசுப்பிரமணியம் பாடினார் என்றாலும், அந்தப்படம் வெளிவருவதற்கு 3 வாரம் முன்னதாக (1969 மே 1-ந்தேதி) "அடிமைப்பெண்'' வெளிவந்துவிட்டது! எனவே, தமிழ்த்திரையில் ஒலித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் "ஆயிரம் நிலவே வா''தான். அந்த ஒரே பாடல் மூலம், அவர் புகழின் சிகரத்தை அடைந்தார்.
39 ஆண்டுகளில் 36 ஆயிரம் பாடல்கள் பாடி, உலக சாதனை படைத்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
தமிழிலும், பிற இந்திய மொழிகளிலும் 39 ஆண்டுகளில் 36 ஆயிரம் பாடல்கள் பாடி, உலக சாதனை படைத்துள்ளார், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ்நாட்டில் பிறந்தவர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கொணோட்டாம்பேட்டை என்ற கிராமத்தில் 1946-ம் ஆண்டு ஜுன் மாதம் 4-ந்தேதி பிறந்தார். தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள இந்த சிற்றூர், முன்பு ஆந்திராவில் இருந்தது. இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறது.
பாலசுப்பிரமணியத்தின் தந்தை பெயர் எஸ்.பி.சாம்பமூர்த்தி. இவர் இசைக் கலைஞர். ஹரிகதாகாலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். தாயார் பெயர் சகுந்தலம்மா.
பாலுவின் இளமைப்பருவம் திருப்பதியை அடுத்த நகரி, நெல்லூர், காளஹஸ்தி ஆகிய ஊர்களில் கழிந்தது. காளஹஸ்தி பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேறினார். பின்னர் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் "பி.யு.சி'' படித்தார்.
பள்ளியில் படிக்கும்போதே, பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பல பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றார். தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப்போட்டிகளில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதல் பரிசு பெற்றார்.
மூன்றாவது ஆண்டும் முதலாவதாக வந்தால், அவருக்கு பெரிய வெள்ளிக்கோப்பை வழங்க வேண்டி இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக, அந்த சங்கத்தின் நிர்வாகிகள் அந்த ஆண்டு பாலுவுக்கு இரண்டாம் பரிசு என்று அறிவித்தனர். அந்த பாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கியவர் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. "இன்று இரண்டாவது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இளைஞர், முதல் பரிசு பெற்றவரை விட சிறப்பாகப் பாடினார். நியாயமாக, முதல் பரிசு அவருக்குத்தான் சேரவேண்டும்'' என்று அறிவித்தார்.
வேறு வழியின்றி, சங்க நிர்வாகிகள் முதல் பரிசையும், வெள்ளிக் கோப்பையையும் பாலுவுக்கு வழங்கினர். மகன் என்ஜினீயராக வேண்டும் என்பது, பாலுவின் தந்தை விருப்பம். அதன்படி, சென்னையில் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர பாலு முயற்சி செய்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. எனவே, "ஏ.எம்.ஐ.ஈ'' என்ற தொழில் கல்வி பயின்றார்.
பாலு ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியபோது, அதைக்கேட்ட தெலுங்கு இசை அமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி, "உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. உன்னை சினிமாவில் சேர்த்து விடுகிறேன்'' என்று கூறினார். பல பட அதிபர்களிடமும், இசை அமைப்பாளர்களிடமும் அழைத்துச் சென்றார். ஆனால் அவர் முயற்சி அப்போது வெற்றி பெறவில்லை.
1966-ல், கோதண்டபாணியின் இசை அமைப்பில், "ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரயதா ராமண்ணா'' என்ற தெலுங்குப்படம் தயாராயிற்று. அதில் பாடுவதற்கு, பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்பளித்தார். அவர் பின்னணி பாடிய முதல் படம் இதுதான். திரைப்படத்துக்குப் பின்னணியில் எப்படிப் பாடவேண்டும் என்ற நுணுக்கங்களையும் கோதண்டபாணி போதித்தார். அதுமுதல், பாலுவுக்கு கோதண்டபாணிதான் மானசீக குருவானார்.
தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்
காதல் திருமணத்துக்கு எதிரியா? நடித்ததில் பிடித்த படங்கள் எவை? சின்னத் திரைக்குப் போனது ஏன்? மனம் திறந்து பேசுகிறார், சிவகுமார்
தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
சிவகுமாரின் முதல் படம் 1965-ல் வெளிவந்தது. அவருடைய கலை உலகப்பயணம் தொடங்கி, 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் வருமாறு:-
கேள்வி:- உங்கள் மகன் சூர்யா, இப்போது முன்னணி நடிகராகத் திகழ்கிறார். அவர் நடிகர் ஆவார் என்று நீங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தீர்களா?
பதில்:- சூர்யா நடிகனான அதிர்ச்சி இன்னும் என்னுள் இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்'' படித்தவன் அவன். காலையில் கல்லூரி சென்றால் மாலை வரை அவன் வகுப்பில் நாலு வார்த்தை பேசினால் பெரிய விஷயம். மவுனமாக எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் சுபாவமுள்ளவன்.
சென்னையில் பிறந்து 22 வருடம் வளர்ந்த ஒரு நடிகனின் மகன், இங்குள்ள எந்த ஸ்டூடியோவிலும் அப்பாவின் ஷூட்டிங்கை பார்த்ததே இல்லை. விளையாட்டாகக் கூட அவனை ஒரு சினிமா ஹீரோவாக நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை.
டைரக்டர் வசந்தும், மணிரத்னமும் அவனை திரை உலகுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு இனிய விபத்து. `வீடியோ டெஸ்ட்' என்று அவனை அழைத்துப் போனார்கள். நான் மணிரத்னத்திற்குப் போன் செய்தேன். "சார்! அவனுக்குச் சினிமா சம்பந்தமாக எதுவும் தெரியாது. அப்படி அவனை நாங்கள் வளர்க்கவில்லை. பெரிதாக எதிர்பார்த்து நீங்கள் `டெஸ்ட்' செய்து ஏமாந்து விடக்கூடாது.
`கார்மென்ட் எக்ஸ்போர்ட்' (ஆடை ஏற்றுமதி) கம்பெனியில் இப்போது பயிற்சி பெறுகிறான். நாளைக்குச் சொந்தமாக அவன் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது எங்காவது வேலை பார்த்து மாதம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ சம்பாதித்து நிம்மதியாக வாழலாம்.
"நீங்கள் `டெஸ்ட்' செய்து ஒதுக்கிவிட்டால், அது அவன் எதிர்கால வாழ்க்கையை ரொம்பவும் பாதிக்கும். இப்போதுகூட `லேட்' இல்லை. அவனை அனுப்பி விடுங்கள்'' என்றேன்.
`அவர் மீது 200 சதவீதம் நமëபிக்கை இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நாங்கள் அவரைப் பார்த்துக் கொள்கிறோம்'' என்றார், மணிரத்னம்.
டைரக்டர் வசந்தும், மணிரத்னம் அவர்களும் "நேருக்கு நேர்'' படத்தில், `சூர்யா' என்று பெயரிட்டு அவனை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கலைஞர்களுக்கு நெஞ்சார நன்றி கூறுகிறேன்.
அமெரிக்காவில் 3 ஆண்டு "இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்'' படித்து எம்.எஸ். பட்டம் பெற்று இந்தியா வந்த என் இளைய மகன் கார்த்திக், ஒராண்டுக்கும் மேலாக மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றான். தற்போது `பருத்தி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறான்.
கேள்வி:- காதல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதை நீங்கள் விரும்பவில்லை. தாயாரும், குடும்பத்தினரும் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகன் சூர்யா, காதல் திருமணம் செய்து கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?
பதில்:- தூய காதலுக்கு நான் எதிரி அல்ல. தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை மணக்கமாட்டேன் என்ற கொள்கையில் சூர்யா உறுதியாக இருந்தால், அவர் விரும்பியபடி திருமணம் செய்ய அனுமதிப்பேன்.
கேள்வி:- நீங்கள் நடித்த சினிமாப்படங்களில் முதன் முதலாக உங்கள் தாயார் பார்த்த படம் எது? பார்த்து விட்டு என்ன சொன்னார்கள்?
பதில்:- கந்தன் கருணை. "முருகனையே நினைத்து வாழ்ந்து, பழனி மலைக்கு கிருத்திகை தவறாமல் போய், திருப்புகழ் - மொத்த பாட்டையும் பாடி, சாமி கும்பிட்டவரு உங்கப்பா. ஒரு கிருத்திகை அன்னிக்கு பழனிலே பாடும்போதே நாவு விழுந்து போச்சு! வந்து பத்து நாள்ளே இறந்துட்டாரு.' அவரு செஞ்ச பிரார்த்தனை, உனக்கு அந்த முருகன் வேஷம் கிடைச்சிருக்கு'' என்றார், என் தாயார்.
கேள்வி:- 193 படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்கள் எவை?
பதில்:- கந்தன் கருணை, உயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன், புதுவெள்ளம், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், சிந்துபைரவி.
கேள்வி:- நீங்கள் நடித்த படங்களில் உங்கள் மனைவிக்குப் பிடித்தமான படம் எது?
பதில்:- ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி.
இவ்வாறு பதிலளித்தார், சிவகுமார்.
193 திரைப்படங்களில் நடித்து விட்ட சிவகுமாரின் கலைப்பயணம், இப்போது சின்னத்திரையில் தொடருகிறது.
"சித்தி'', "அண்ணாமலை'', "அபிராமி'' உள்பட ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரைக்கு போனது பற்றி அவர் கூறியதாவது:-
"ஓவியக் கலைஞனாக வாழ்க்கையைத் தொடர நினைத்த என்னை `சிவகுமார்' ஆக்கி, உலகளாவிய தமிழ் மக்கள் அறிந்திடச் செய்தது, திரை உலகம்தான். இன்றைய புகழ், பொருள், வாழ்வு எல்லாம் திரை உலகம் இட்ட பிச்சை.
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நடிக்கத் துவங்கி, நூற்றி இருபது படங்களை முடிக்கும் காலங்கள் வரை கூட நான் லட்ச ரூபாய் சம்பளத்தை எட்டவில்லை. தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி அதிகம் கேட்டதில்லை. காரணம், திரை உலகம் என்னைக் கைவிடாது என்ற அசாத்திய நம்பிக்கை.
இரண்டரை மணி நேர சினிமா ஏற்படுத்துகிற தாக்கத்தை 25 வார டெலிவிஷன் தொடரில் ஏற்படுத்த முடியாது. காரணம் தொடர்ச்சி விட்டுப் போவதுதான்.
மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும், படைப்பாளி திறமைசாலியாகவும், டெலிவிஷன் மீடியத்தை திறம்படக் கையாளத் தெரிந்தவராகவும் இருந்தால் பெயர் பெறமுடியும் என்பதற்கு கே.பாலசந்தர் உருவாக்கிய `ரயில் சிநேகம்', `கையளவு மனசு', `காதல் பகடை' தொடர்கள் சாட்சி.
1990களில் "நீதிமான்'' தொலைக்காட்சித் தொடரில் நான் நடித்தபோது, "என்ன சார்! இத்தனை வருஷமா சினிமாவிலே ஹீரோவா நடிச்சிட்டு `டிவி'க்கு வந்திட்டீங்களே!'' என்று சில துணை நடிகர்கள் கேட்டனர். நான் சொல்லும் சமாதானம் அவர்களை திருப்திபடுத்தாது என்பதை உணர்ந்து, மவுனப் புன்னகை செய்தேன்.
1999-ல் `சித்தி' தொடர் உருவாக ஆரம்பித்ததும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் `சித்தி' தொடரை பார்த்ததாக புள்ளி விவரங்கள் கூறின.
"அண்ணாமலை'', உலகின் பெரிய நாடுகளில் எல்லாம் ஒளிபரப்பு ஆயிற்று.
உலகில் எல்லாத் துறைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழும். அந்த மாறுதல்கள், திரை உலகிலும் நிகழும். கதாசிரியன், சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டு, பேனா முனை மதிப்பு பெறும் காலம் விரைவில் வரும். அப்போது அர்த்தமுள்ள கதைகள், ஆழமான கருத்துக்கள் மீண்டும் திரை மூலம் உயிர் பெறும். அதுவரை சின்னத்திரையில் தற்காலிகமாக பவனி வருவேன்.''
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
சிவகுமார் - லட்சுமி தம்பதிகளுக்கு சூர்யா, கார்த்திக் தவிர, ஒரே மகள் பிருந்தா.
பிருந்தா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து "பி.ஏ'' பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயரும் சிவகுமார்தான். இவர் "பி.ஈ'',"எம்.பி.ஏ'' பட்டங்கள் பெற்றவர். சென்னையில், "கிரானைடு''களை வெட்டப் பயன்படும் "டயமண்ட் டூல்ஸ்'' கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்.

சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறுநாவல் "உச்சி வெயில்.'' அதை, "மறுபக்கம்'' என்ற பெயரில் டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் படமாகத் தயாரித்தார்.
இந்தப் படத்துக்கு, "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்'' நிதி உதவி செய்தது. மொத்தம் ரூ.14 லட்சம் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.
வேம்பு அய்யர் என்ற வேடத்தில் சிவகுமார் நடித்திருந்தார். அவருடன் ராதா நடித்தார். 1991-ல் வெளிவந்த இப்படத்துக்கு, அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.
பிரபலமான மூத்த கலஞர்களுடன் சேர்ந்து நடிப்பதை 1974 முதல் சிவகுமார் தவிர்த்து வந்தார். கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.
சிவாஜிகணேசன் நடிக்க, பாரதிராஜா இயக்கிய "பசும்பொன்'' படத்தில் நடிக்க, 1995-ல் அழைப்பு வந்தது. பாரதிராஜாவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆவல், சிவகுமாருக்கு நீண்ட காலமாக இருந்தது.
எனவே, தனது "விரத''த்தை முடித்துக்கொண்டு, 21 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிவாஜியுடன் இணைந்து நடித்தார், சிவகுமார்.
"பசும்பொன்'' படத்தைப் பற்றி சிவகுமாரின் கருத்து:
"பாரதிராஜாவுடன் நான் பணியாற்றிய ஒரே படம் இது. செதுக்கிச் செதுக்கி, இழைத்து இழைத்து காட்சிகளைப் படமாக்கினார்.
எங்கோ ஓரிடத்தில் நடந்த தவறினால், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற படம் தவறிவிட்டது. எனினும், பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் பசும்பொன்னும் ஒன்று.
ராதிகாவின் கதாபாத்திரம் `மாஸ்டர் பீஸ்.' வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் அவர்.
திரைக்கதையை உருவாக்க சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை உழைத்து, அதன்பின் அதை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, அதற்குப் பிறகுதான் படப்பிடிப்புக்கு செல்வார், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளரான நண்பர் எம்.பாஸ்கர்.
தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் நான் நடித்தவை.''
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
சினிமாவில் தந்தையும், மகனும் ஒரே படத்தில் நடிப்பது விசேஷமானது.
இந்தி நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சிவாஜிகணேசனும், அவர் மகன் பிரபுவும் சேர்ந்து நடித்துள்ளனர்.
22-9-2000-ல் வெளிவந்த "உயிரிலே கலந்தது'' என்ற படத்தில் சிவகுமாரும், சூர்யாவும் சேர்ந்து நடித்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா.
1997-ல் வெளிவந்த "காதலுக்கு மரியாதை'' படத்தில் இளம் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்தார், சிவகுமார்.
இந்தப்படத்தில், இந்து மதத்தைச்சேர்ந்த விஜய்யும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஷாலினியும் காதலிப்பார்கள். காதலுக்கு மதம் தடையாக இருந்தாலும், இருவரும் பெற்றோர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, காதல் வெற்றி பெறும்.
இந்தப் படத்தில் நடித்தது பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"காதல் இயற்கையானது. தவிர்க்க முடியாதது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்வது.
ஆனால், 25 வயது வரை பெற்று வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையைக் கொடுத்த பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு புது உறவுடன் ஓடிப்போகலாமா? அது தவறு. போராடி, பெற்றோர் சம்மதத்தைப் பெற்று வாழ்க்கையில் ஒன்று சேருங்கள் என்ற உயர்ந்த படிப்பினையைச் சொன்ன படம் "காதலுக்கு மரியாதை.''
நானும், ஸ்ரீவித்யாவும் விஜய்க்கு பெற்றோர்களாக நடித்தோம்.
பாசில் உருவாக்கிய மிகச்சிறந்த படங்களில் இந்தப்படமும் ஒன்று.''
இவ்வாறு கூறினார், சிவகுமார்.
திரை உலக அனுபவங்கள் பற்றி அவர் மேலும் கூறியதாவது:-
"நான் நடித்த மொத்த படங்கள் 193.
152 தயாரிப்பாளர்களுடனும், 98 டைரக்டர்களுடனும் பணியாற்றியுள்ளேன். என்னுடன் நடித்த கதாநாயகிகள் 87 பேர்.
எனக்குப் பிறகு திரைப்படங்களில் அறிமுகமாகி, எனக்கு ஜோடியாக அதிகப்படங்களில் நடித்தவர்கள் லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சுஜாதா, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர்.
மூன்று நான்கு படங்களில் இணையாக நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, ராதா, சுஹாசினி ஆகியோர்.
கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் "கவிக்குயில்'', "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு'', "மச்சானைப் பாத்தீங்களா'' என்ற மூன்று படங்களில் ஸ்ரீதேவி என்னுடன் இணைந்து நடித்தார். துரதிர்ஷ்டவசமாக மூன்றுமே வெற்றிபெறத் தவறிவிட்டன.
என்னுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி. மிகுந்த தைரியசாலி. சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அவற்றால் துவண்டு விடாமல், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுபவர். புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்.
"சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் அவர் ஏற்ற வேடம், அவரது அன்றைய வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய ஒன்று. ரொம்பவும் `மெச்சூர்டாக' அந்தப் பாத்திரத்தில் நடித்து, "ஊர்வசி'' விருது வாங்கினார்.
தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆகும்போதே சுஜாதாவின் தோற்றத்தில் `மெச்சூரிட்டி' இருந்தது. அதனால், குடும்பத் தலைவி, வக்கீல், டாக்டர், பழி வாங்கத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்துப்பெண்... என்று குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும் கை கொடுத்தன. உணர்ச்சிகரமான கட்டங்களில், நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.
சரிதா ரொம்பவும் திறமை சாலியான நடிகை. அவருடைய கண்களே ஆயிரம் கதைகள் பேசும்.''

சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் "இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது.
சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.
1970 முதல் 7 ஆண்டுகள் மேஜர் சுந்தர்ராஜனுடன் நாடகங்களில் நடித்து வந்தார், சிவகுமார். "அப்பாவி'' என்ற நாடகம், ஆயிரம் தடவை மேடை ஏறியது. 1000-வது நாடகத்துக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.
நாடகத்தைப் பார்த்தபின் சிவகுமாரிடம், "கவுண்டா! இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை! கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா?'' என்று தமாஷாகக் கூறினார்.
சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் "இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது. சிவகுமாரின் 154-வது படம்.
இந்தப்படம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்து முடிந்து வெளியே வந்த சிவாஜி, "படத்தைப் பார்த்தேன். பிரமாதமா பண்ணி இருக்கே. `கப்பலோட்டிய தமிழன்'லே உயிரைக் கொடுத்து நடித்தேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்குக் குழச்சிக்கிட்டு இருக்காங்க'' என்று சிவகுமாரிடம் சொன்னார்.
"சிவாஜி சொன்னது மாதிரி எனக்கும் நாமம் போடப்பட்டது'' என்று கூறுகிறார், சிவகுமார்.
சிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-
"உறுதிமொழி படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, "கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா'' என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.
"அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது'' என்றேன்.
"அப்படியா நினைக்கிறே?''
"இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்'' என்றேன்.
"எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?'' சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.
தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். "குட் மார்னிங் அங்கிள்'' என்று சொன்னாள்.
"நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்'' என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, "பெரியப்பா'' என்றுதான் அன்போடு அழைப்பாள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது'' என்றும், ஒரு கட்டத்தில் "சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது'' என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. "பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க'' என்றாள், பிருந்தா.
"மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு'' என்றேன்.
அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி - உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:
"நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்'டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா? சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் கட்டபொம்மன் காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.
"தங்கப்பதுமை... `ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா... அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்' அரங்கமே குலுங்குது!
"சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?''
இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.
நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.
1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். "கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் - மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்'' என்றார்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!
மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது!''
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"1980-களின் கடைசியில், "பாசப்பறவைகள்'', "பாடாத தேனீக்கள்'' என்று இரண்டு படங்களில் கலைஞர் அவர்களின் வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டங்களில், அடுக்கு மொழி வசனம், இரண்டு வரி வசனமாகச் சுருங்கிவிட்டது.
படத்தின் வெற்றி விழாக்களில், சிவாஜிக்கு அவர் எழுதிய நீண்ட வசனங்களை பேசிக்காட்டி மகிழ வைத்திருக்கிறேன்.
துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் கலைஞர் என் இல்லம் வந்து 90 நிமிடங்கள் என் ஓவியங்களை கண்டு களித்திருக்கிறார்.
என் புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். நான் ஓட்ட என் காரில் அவர் சவாரி செய்திருக்கிறார்.
அவரது தமிழ்ப்பற்றும், நினைவாற்றலும் எப்போதும் என்னை பிரமிக்க வைக்கும்.''
இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.

சிவகுமார் மீது அவர் மனைவிக்கு நீண்ட காலமாக ஒரு மனக்குறை இருந்தது. அதை தெரிந்து கொண்ட சிவகுமார், தக்க தருணத்தில் தீர்த்து வைத்தார்.

பொதுவாக, மணப்பெண்ணை பார்க்காமல் எந்த இளைஞனும் தாலி கட்டமாட்டான். சிவகுமாரோ, `அம்மாவுக்குப் பிடித்தால் போதும்' என்று கூறி, அதன்படியே லட்சுமிக்கு தாலி கட்டினார்.
வீட்டுக்கு ராணி போல் இருந்தாலும், லட்சுமிக்கு ஒரு மனக்குறை இருந்தது. "சதா படப்பிடிப்பு என்று இரவு - பகலாக உழைக்கிறார். குடும்பத்தையே கவனிப்பதில்லை'' என்பதுதான் அந்த மனக்குறை.
இந்த மனக்குறை, ஒரு நாள் கோபமாக வெளிப்பட்டது.
இதுபற்றி சிவகுமார் கூறியிருப்பதாவது:-
"1988 செப்டம்பர் 7-ந்தேதி. அதுதான் என் வாழ்க்கைத் துணைவியின் 37-வது பிறந்த நாள். `துணைவி என்றொருத்தி இருக்கிறாள். அவளுக்கு மனசு என்று ஒன்றிருக்கும். அதில் ஆசை என்று ஒன்றிருக்கும். அவளும் மனிதப்பிறவிதான். அவளை நாம் நேசிக்க வேண்டும், நாம் அவளை நேசிப்பது அவளுக்குத் தெரியவேண்டும்' என்று நான் உணர்ந்த நாள்.
இந்த ஞானோதயம் பிறந்ததற்கு அடையாளமாக, ஏதாவது செய்ய வேண்டாமா? பிறந்த நாளுக்கு ஒரு பட்டுப்புடவை பரிசளிக்கலாம் என்று தீர்மானித்து, பத்துப் பதினைந்து புடவைகளை வரவழைத்து, அதில் நானே ஒன்று தேர்வு செய்து, புடவைக்கு மேட்சாக ஜாக்கெட் தைக்க, முந்தைய நாளே மனைவியின் ஜாக்கெட் ஒன்றைத் திருடி, அளவு கொடுத்து, பிறந்த நாள் அன்று பிரமாதமாக பார்சல் செய்து, வாழ்த்துக் கூறி வணங்கினேன்.
ஒரு நிமிடம் அதைப் பார்த்து திகைத்தவள், "என்ன இது?'' என்று கேட்டாள்.
"பிறந்த நாள் பரிசு'' என்றேன்.
"என்ன திடீர் என்று என் மீது பாசம்? உண்மையிலேயே பாசமா? இல்லை, ஏதாவது தப்பு பண்ண ஆரம்பித்து, அதை மறைப்பதற்கு இப்படி ஐஸ் வைக்கிறீர்களா?'' என்று அவள் கேட்டாள்.
"எந்தத் தப்பும் பண்ணலை. வாங்கிக்க'' என்றேன். மவுனமாக அதே சமயம் பிடிவாதமாக மறுத்தாள். நான் வற்புறுத்தத் தொடங்கியதும், அவள் கண்களில் நீர் ததும்பியது.
`ஏங்க! 1974-ல் கல்யாணம் ஆச்சு. இந்த 14 வருஷத்தில் ஒரு நாளாவது என் முகத்தை உற்றுப் பார்த்திருக்கீங்களா? என் காதில் என்ன கம்மல் போட்டிருக்கிறேன், கழுத்திலே என்ன செயின் போட்டிருக்கிறேன், என்ன கலர் புடவை கட்டியிருக்கிறேன், நான் சந்தோஷமா இருக்கேனா என்று, என்றைக்காவது ஒரு தடவையாவது கேட்டிருக்கீங்களா?'' என்றாள். அவள் உள்மனம் உடைந்து உணர்ச்சிகள் பிரவாகம் எடுத்து ஓடின. வார்த்தைகளும், வடித்த கண்ணீரும் நெருப்பாய் என்னைச் சுட்டன.
யோசித்துப் பார்த்தேன். தீவிரமாக, தெளிவாக நினைவுபடுத்திப் பார்த்தேன். அவள் கேட்ட எதையுமே நான் ஒரு தடவைகூட செய்யவில்லை. ஒரு விநாடி, என் இதயத்துடிப்பு நின்றுவிட்டது.
என்ன மனிதன் நான்? மனைவியின் மனதை இவ்வளவு நாளும் அறிந்து கொள்ளவில்லையே.
திருமண விழாவுக்கு மொத்தம் 4 நாட்கள் மட்டுமே `லீவு' எடுக்க முடிந்தது. தாலி கட்டி வந்ததில் இருந்து, இரவு - பகலாகப் படப்பிடிப்பு. மாதத்தில் 28 நாட்கள் நாடகம். பொழுது விடிந்தால் ஒப்பனை, நாள் முழுக்க ஸ்டூடியோ - நாடகக் கொட்டகை. உடம்பையும், மனதையும் சக்கையாகப் பிழிந்து விட்டு, வீட்டுக்கு அனுப்புவார்கள். படுக்கையில் விழுந்தால், கனவிலும் படப்பிடிப்பு!
ஓரிரு நாள் மனைவியுடன் வெளியே சென்று வரவோ, தனிமையில் சந்திக்கவோ வாய்ப்பு இல்லை; அவள் ஆசாபாசங்களை அறிய வேண்டும் என்ற யோசனையும் எழவில்லை.
இதே பரபரப்பில், மூன்று குழந்தைகளும் பிறந்து அவர்கள் ஜாலியாக வளர ஆரம்பித்து விட்டார்கள். பதினான்கு ஆண்டுகள் இப்படி ஓடிவிட்டன. பிறந்த நாளன்று அவள் கேட்ட கேள்விகள் என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டன. ஆயினும், என் மனதுக்குள் என் பக்கம் நியாயம் இருப்பதாகத் தோன்றியது.
"பீரோ சாவியே உன்னிடம்தானே இருக்கிறது! வேண்டியதை வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே?'' என்று கேட்டேன்.
"பேங்க் கேஷியர், கோடிக்கணக்கான ரூபாய்களுடன் தினமும் புழங்குகிறார். அதற்காக, அந்தப் பணம் எல்லாம் தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியுமா?'' என்று அவள் பதில் சொன்னாள்.
நான் யோசித்தேன். நாம் வேண்டா வெறுப்பில் திருமணம் செய்து கொள்ளவில்லை. விரும்பித்தான் தாலி கட்டினோம். ஒரே ஒரு தவறு செய்துவிட்டோம். அதாவது, நம் அன்பை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டிருந்து விட்டோம். அதை வெளியே காட்டியிருக்க வேண்டும்.
அன்பு என்பது, பரஸ்பரம் வெளிப்படுத்த வேண்டிய ஒன்று. தாயிடம், மகளிடம், மனைவியிடம் தவறாது நம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
இதற்கு பிராயச்சித்தம் தேட, ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன்.
1992-ல் அந்த வாய்ப்பு கிடைத்தது.
உலகெங்கும் வாழும் தமிழறிஞர்கள், சான்றோர்கள், கலைஞர்கள் கலந்து கொள்ளும் 5-வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு - ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் நடக்கவிருந்தது.
கலைத்துறை சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். இரண்டு விமான டிக்கெட் அனுப்பியிருந்தார்கள். மனைவியை வரும்படி அழைத்தேன். எப்போதும்போல என் அழைப்பை ஏற்க மறுத்தாள். என்னைவிட குழந்தைகள் மீது அவளுக்கு ஒட்டுறவு அதிகம். தொப்புள் கொடி உறவு வலுவானது என்பதை உணர்ந்து, பிள்ளைகளிடம் விளக்கிக்கூறி, "உங்கம்மாவும் நானும் 18 வருஷங்கள்ல தனியா எங்கேயும் போனதில்லை'' என்று கூறியபோது அவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்.
அம்மாவை விடாப்பிடியாக மூட்டைகட்டி என்னோடு அனுப்பி வைத்தார்கள்.
மெல்பர்ன் சிட்டியில் கால் பதித்தோம். அன்றிரவு கலை அரங்கில் துவக்கவிருந்த கலை நிகழ்ச்சிக்குக் குத்து விளக்கேற்றி, விழாவை துவக்கி வைக்கும் பெருமையை என் துணைவிக்கு அளித்தது, மெல்பர்ன் தமிழ்ச்சங்கம்.
சிட்னியில், மாநாட்டு அரங்கத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்ட 2000-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சான்றோர் முன்னிலையில், கலையுலகின் வரலாறு பற்றியும் இக்கலைக்குப் பெருமை சேர்த்த மாபெரும் கலைஞர்கள் பற்றியும் 45 நிமிடங்கள் பேசினேன்.
பேச்சின் இடையே நான் கூறினேன்: "எந்த ஒரு கலைஞனும் ஒன்றை இழந்துதான் ஒரு பெருமையைப் பெறமுடிகிறது. தமிழ்நாட்டில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் ஓவியனாக, நடிகனாக 30 ஆண்டுகளைக் கடந்து மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்க, என் குடும்பமும் தியாகம் செய்திருக்கிறது. அதில் என் துணைவியின் பங்கு மகத்தானது.
கலைத்துறைக்கு என் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழிக்க, அவள் தன்னுடைய சுகங்களை, சந்தோஷங்களைத் தியாகம் செய்திருக்கிறாள். நான் இன்று உங்கள் முன்னால், ஒரு கலைஞனாக மேடையில் நிற்பதற்குக் காரணம், அவள் செய்த தியாகம்தான்.
வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். என் வெற்றிக்குப் பின்னால் என் மனைவி இருக்கிறாள்.''
- இவ்வாறு நான் பேசியபோது என் துணைவியின் கண்களில் நீர் முத்துக்கள் பிரகாசித்தன.
என் மீது அவள் கொண்டிருந்த மனக்குறை, அந்தக் கண்ணீரில் கரைந்து போயிற்று.''

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் கதை - வசனம் - டைரக்ஷனில், சிவகுமார் கதாநாயகனாக நடித்த "சிந்து பைரவி'' (1985) தரத்தில் சிறந்த படமாகவும், வசூலில் வெற்றிப்படமாகவும் அமைந்தது.

பிரபல தெலுங்கு டைரக்டர் கே.விஸ்வநாத், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக வைத்து, "சங்கராபரணம்'' என்ற படத்தை "காவியம்'' என்று சொல்லத்தக்க விதத்தில் அருமையாக எடுத்திருந்தார். அதற்கு இணையான படம் என்று சொல்லத்தக்க அளவில் "சிந்து பைரவி'' அமைந்தது.
"ஜே.கே.பி'' என்ற இசைக்கலைஞன் (சிவகுமார்) தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடுவதில் திறமைசாலி. அவனுடைய மனைவியோ, இசை அறிவு இல்லாதவள்.
ஒருநாள் "ஜே.கே.பி'' கச்சேரி நடத்தும்போது ஒரு பெண் (சுகாசினி) "நான் உங்கள் ரசிகை'' என்று கூறிக்கொண்டு, "நீங்கள் ஏன் தெலுங்குப் பாட்டுகளையே பாடுகிறீர்கள்? எல்லோருக்கும் புரியும்படி ஏன் தமிழில் பாடக்கூடாது?'' என்று கேட்கிறாள்.
"உனக்கு சங்கீதம் தெரியுமா? பாடத்தெரியுமா?'' என்று, "ஜே.கே.பி'' கேலியாகக் கேட்க, "பாடறியேன், படிப்பறியேன்'' என்று பாட ஆரம்பித்து, அற்புதமாகப் பாடி, "மரி மரி நின்னே'' என்று முடிக்கிறாள்.
"ஜே.கே.பி'' மனம் மாறுகிறது. ரசிகையை காதலிக்கிறான். குடும்பத்தில் சிக்கல் வரவே, மதுவுக்கு அடிமையாகிறான். இதைத்தொடர்ந்து, கணவன், மனைவி, காதலி ஆகிய மூவருக்கும் ஏற்படும் மனப்போராட்டத்தை சித்தரிப்பதே கதை.
சிவகுமார், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் இசைக் கலைஞனாக வாழ்ந்து காட்டினார். காதலியாக சுகாசினி பிரமாதமாக நடித்தார். மனைவியாக சுலக்சனா பொருத்தமாக நடித்தார்.
மிருதங்க வித்வானாக தோன்றிய டெல்லி கணேஷ், அந்த சிறிய வேடத்துக்கும் உயிர் கொடுத்தார்.
இளையராஜாவின் இசை அமைப்பு, சிகரத்துக்கு சென்றது.
மொத்தத்தில், கே.பாலசந்தர் என்ற சிற்பி செதுக்கிய பொற்சிலையாக "சிந்து பைரவி'' விளங்கியது.
இந்தப் படத்துக்கு முன் (1982-ல்) பாலசந்தர் இயக்கத்தில், "அக்னி சாட்சி''யில் சிவகுமார் நடித்தார். அவருக்கு ஜோடி சரிதா.
பாலசந்தர் மிகவும் சிரமப்பட்டு, ரசித்து ரசித்து உருவாக்கிய படம் இது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இந்த இரண்டு படங்களிலும் நடித்த அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"அக்னி சாட்சியில், கதாநாயகி கண்ணம்மா, புதுக்கவிதையில் நாட்டம் உள்ளவள். அவளை நேசிக்கும் அற்புத மனிதன் அரவிந்தன்.
`என் தலைவா! உன் பெயரை, ஒரு பேப்பரில் எழுதித் தடவிப்பார்! அதில் ஈரப்பசை இருக்கும்...! ஏனெனில், உன் திரு நாமம், என் உதட்டு எச்சில்களால், ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்டப்பட்டதல்லவோ...!' என்று அரவிந்தன் மீது, தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவாள்.
கண்ணம்மா கருத்தரிப்பாள்...! வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஒரு கவிதை எழுதுவாள்....!
`அன்புக் குழந்தையே! அம்மா எழுதுகிறேன்..., தாய்ப்பால் வருவதற்கு முன்பு - தபால் வருகிறதே என்று பார்க்கிறாயா...!' என்று தொடங்கும் அந்தக் கவிதை.
சரிதா பிரசவத்தில் இறந்து போவதுதான், படத்தின் கிளைமாக்ஸ்.
"சரிதா பிரசவ வேதனைப்படுவதை ஒரே பிரேமில்கூட காட்டமாட்டேன்...! உன் மூலம் ஆஸ்பத்திரியில் அவள் முடிவைச் சொல்லப்போகிறேன்'' என்று என்னிடம் கூறி பிரமாதமாக அந்தக் காட்சியை படமாக்கினார், கே.பி.
படத்தை கே.பி. அவர்களுடன் நானும் சரிதாவும் பார்த்தோம்.
படத்தின் உச்சகட்டக் காட்சியைப் பார்த்து நான் கேவிக்கேவி அழுதேன். சரிதா கிட்டத்தட்ட மூர்ச்சையடைத்து விட்டார். அவ்வளவு அழுத்தம். கே.பி.தான் எங்களைத் தேற்றினார்.
அப்படி இழைத்து இழைத்து அவர் உருவாக்கிய படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பல மாதங்கள் டைரக்டர் படுத்துவிட்டார்.
மல்யுத்த மேடைதானே திரையுலகம்! மீண்டும் சிலிர்த்து எழுந்தார்! "சிந்து பைரவி''யை உருவாக்கினார்.
கலை உலகில் அவர் ஒரு பீஷ்மர். அடையாறு ஆலமரம் போன்றவர். சாய்ந்தாலும் மீண்டும் எழுந்து வேர் விட்டு நிலைப்பார்.
அவருடைய படைப்புகளில் மிக உன்னதமானது "சிந்து பைரவி.'' 193 படங்கள் செய்துவிட்ட எனக்கு, இப்படம் அகில உலகிலும் மிகப்பெரிய கவுரவத்தைப் பெற்றுத் தந்தது.
இளையராஜா இசையும், ஜேசுதாஸ் குரலும் "ஜே.கே.பி''யை முழுமையான கலைஞனாகக் காட்ட உதவின.
ஜே.கே.பி. கதாபாத்திரத்தையும், சிந்துவையும் எவ்வளவு தீவிரமாக - ஆழமாக டைரக்டர் சிந்தித்து வைத்திருந்தாரோ, அந்த கனம் சிறிதும் குறையாமல், "பாடறியேன்... படிப்பறியேன்'' பாடல் மூலம் சிந்துவை கவிப்பேரரசு வைரமுத்து நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.
வைரமுத்து தமிழுக்கு புதிய சொற்கள் நிறைய உருவாக்கியவர். இந்த சொல் அலங்காரம், மற்றவர்களிடம் இருந்து இவரைப் பிரித்துக் காட்டுகிறது. என்னுடைய எத்தனையோ படங்களுக்கு அவர் பாடல் எழுதியுள்ளபோதிலும், என்னால் மறக்க முடியாத படம் "சிந்து பைரவி.''

நடிகர் சிவகுமாரின் 100-வது படமான "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'', அவருடைய மாறுபட்ட நடிப்பாலும், மாறுபட்ட கதை அமைப்பாலும் பெரிய வெற்றி பெற்றது.

ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த "புவனா ஒரு கேள்விக்குறி''க்குப் பின் வெளிவந்த சிவகுமாரின் வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு.'' தேவர் தயாரித்த படம். சிவகுமாரும், ஸ்ரீபிரியாவும் இணைந்து நடித்தனர். இதில் நடித்த ஒரு ஆடு, அதிசயமான சர்க்கஸ் வேலைகளையெல்லாம் செய்து காட்டியது. படத்தின் வெற்றியில் இந்த ஆட்டுக்குப் பெரும் பங்கு உண்டு.
இந்தப்படம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"ஆட்டுக்கார அலமேலு படம் தயாரிப்பில் இருந்தபோது, தேவர் அண்ணனைப் பார்க்கும்போதெல்லாம் கிண்டல் செய்வேன். `என்ன அண்ணா! இந்த ஆடு, ரேடியோ வைக்குது. சண்டை போடுது! மனிதன் செய்ய முடியாத சாகசத்தையெல்லாம் செய்யுது. இதை மக்கள் நம்புவாங்களா?' என்று கேட்பேன்.
"அட போப்பா! ஏராளமான மாயாஜாலப் படங்களை, விட்டலாச்சாரியா எடுத்து வெளியிடறார். அதில் எத்தனையோ நம்ப முடியாத காட்சிகள் வருது. அதை மக்கள் எப்படி ரசிக்கிறாங்க... இந்தப் படத்தை எப்படியோ அடிச்சு பிடிச்சு வெளியிடுவோம். பிறகு நல்ல கதையா எடுப்போம்'' என்று தேவர் அண்ணன் பதில் கூறுவார்.
1977-ல் வெளிவந்த படங்களில், இந்தப்படம்தான் வசூலில் முன்னிலை வகித்தது.
தேவர் அண்ணனின் நிறுவனம் கிட்டத்தட்ட 50 படங்களைத் தயாரித்தது. அவற்றில் வெள்ளி விழா கண்ட முதல் படம் ஆட்டுக்கார அலமேலுதான்.''
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
சிவகுமாரின் 100-வது படமë "ரோசாப்பூ ரவிக்கைக்காரி.'' சிவகுமாரின் நண்பரான திருப்பூர் மணி இதைத் தயாரித்தார். சிவகுமாரின் ஜோடியாக தீபா நடித்தார்.
இளையராஜா இசை அமைக்க, தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தனர்.
இந்தப் படத்தில், கள்ளங்கபடமற்ற கிராமத்து இளைஞனாக சிவகுமார் நடித்தார். அவரை மணக்கும் தீபா, நாகரிகத்தில் நாட்டம் கொண்ட பெண். சந்தர்ப்ப சூழ்நிலையினால், வழி தவறிச் சென்று, கணவனுக்கு துரோகம் செய்கிறாள்.
மாறுபட்ட கதை அம்சம் கொண்ட இந்தப்படம், சிவகுமாரின் 100-வது படம் என்ற சிறப்புக்கு ஏற்ப வெற்றிப்படமாக அமைந்தது.
படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"சிவாஜியின் நிழலையே பார்த்து, அதன் மூலம் நடிப்பைக் கற்றுக்கொண்ட எனக்கு, நிஜத்திடம் ஆசீர்வாதம் பெறத் தோன்றியது. 500 ரூபாய்க்கு மாலை வாங்கிக்கொண்டு, சிவாஜி வீட்டுக்கு சென்றேன்.
சாதாரணமாக நான் யார் காலிலும் விழுபவன் அல்ல. அன்று, என் நடிப்பின் குருநாதர் சிவாஜியின் காலில் விழுந்து வணங்கினேன். என்னை அப்படியே அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.
"எனக்கு எதுக்குடா மாலை? நான்தான் உனக்குப் போடணும்'' என்றார்.
"வரம் கேட்க வரும் பக்தன்தான் கடவுளுக்கு மாலை போடணும். நான் உங்களிடம் கேட்கும் வரம் ஆசீர்வாதம்'' என்றேன்.
உடனே சிவாஜி, "டேய், சிவா! உன்னை யாரும் வெறுக்கமுடியாதுடா... உனக்கு விரோதியே இருக்க மாட்டான்டா...! நல்லா இரு!'' என்று வாழ்த்தினார்.
இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.
சிவகுமாரின் 100-வது படத்தின் 100-வது நாள் விழா, சிவாஜிகணேசன் தலைமையில் நடந்தது.
இதே காலக்கட்டத்தில் சிவகுமாரும், ஷோபாவும் ஜோடியாக நடித்த "ஏணிப்படிகள்'' வெளிவந்தது.
இந்தத் தரமான படம், வசூலிலும் வெற்றி பெற்றது.