என் மலர்
சினி வரலாறு
ஒய்.ஜி.மகேந்திரனின் வாழ்க்கையே, நாடகத்துடன் இரண்டறக் கலந்தது. எனவே, அவருடைய திருமணத்துக்கும் நாடகமே உதவியது.

மகேந்திரனின் பிரபலமான நாடகம் "பிளைட் 172.'' அந்த நாடகம் நடைபெறுகிறபோதெல்லாம், ஒரு பெண் தவறாமல் ஆஜராகி விடுவார்.
அந்தப் பெண்ணின் பெயர் சுதா. ஒரு நாள் அவர் மகேந்திரனை சந்தித்து, "இந்த நாடகத்தை நான் தினமும் பார்ப்பது உங்களுக்காகத்தான்'' என்றார்.
அன்று பூத்த மகேந்திரன் - சுதா காதல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது.
சுதாவின் தம்பி ரவிராகவேந்தர், நடிப்புத்திறமை உள்ளவர். "இவர் நன்றாக நடிப்பார் அப்பா'' என்று அவரை தன் தந்தை ஒய்.ஜி.பி.யிடம் அறிமுகப்படுத்தினார், மகேந்திரன். இதன் விளைவாக ராகவேந்தருக்கு நல்ல நல்ல வேடங்கள் கிடைக்கலாயின. ஏற்கனவே மகேந்திரன் மீது சுதா கொண்டிருந்த அன்பு மேலும் அதிகமாகியது.
மகேந்திரன் - சுதா திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர். 1975 செப்டம்பரில் இவர்கள் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினார்கள். நடிகர்-நடிகைகள், பட அதிபர்கள், நாடக - திரை உலகப் பிரமுகர்கள் பெருந்திரளாக வந்து வாழ்த்தினார்கள்.
மகேந்திரனின் குடும்பமே கலைக்குடும்பம். அனைவரும் நடிக்கக்கூடியவர்கள். அதற்கு சுதாவும் விலக்கல்ல.
ஒருநாள், "ரகசியம் பரம ரகசியம்'' என்ற நாடகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கச் சென்றபோது, கதாநாயகி வேடத்தில் நடிக்க மனைவி சுதா மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருப்பதைப் பார்த்து திகைத்தார்.
அவர் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி சிரித்துக்கொண்டே, "இன்று வரவேண்டிய ஹீரோயின் வரவில்லை. அதனால் இவளை காலேஜிலே இருந்து அழைத்துக்கொண்டு வந்து, ஒத்திகை பார்த்து ரெடி பண்ணிவிட்டேன்'' என்றார்.
அதுமுதல், நாடகத்துக்கு எந்த நடிகையாவது வராவிட்டால், சுதாவே அந்த வேடத்தில் நடித்து விடுவார்.
ஒய்.ஜி.பார்த்தசாரதி, கடைசி மூச்சு உள்ளவரை நாடகத்தை நேசித்தவர்.
அவர் நாடகங்களில் நடிக்காத காலக் கட்டத்தில், மகேந்திரனின் நாடகங்களைப் பார்க்க வருவார். "வேல் வேல் வெற்றி வேல்'' நாடகத்தை பார்க்க வந்தபோது, மேடையில் சிலர் பேசிக்கொண்டு நின்றனர். அதனால் கோபத்துடன் சத்தம் போட்டுவிட்டு, வீட்டுக்குப்
போய்விட்டார்.மகேந்திரன் நாடகத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது, பார்த்தசாரதிக்கு பக்கவாதம் வந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு "கோமா''வில் இருப்பதாக தகவல் வந்தது. அந்த இக்கட்டான நிலையில், மகேந்திரன் நாடகத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார்.
நாடகம் முடிந்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று அப்பாவைப் பார்த்தார். அவர் உணர்வற்ற நிலையில் இருப்பதைப் பார்த்து கலங்கினார். மறுநாள் மகேந்திரனின் நாடகம் நாகர்கோவிலில் நடப்பதாக இருந்தது. நாடகத்துக்கு போவதா, வேண்டாமா என்று முடிவு செய்ய மகேந்திரனால் இயலவில்லை. அதை தந்தையின் முடிவுக்கே விட எண்ணினார்.
"உங்களை இப்படியே விட்டு விட்டு, ஒப்புக்கொண்டபடி நாடகத்துக்கு நான் போகலாம் என்றால், என் கையை அழுத்துங்கள். இல்லாவிட்டால் இங்கேயே இருக்கிறேன்'' என்று தந்தையின் காதருகே குனிந்து சொன்னார்.
ஐந்து நிமிடம், அசைவற்று இருந்தார், ஒய்.ஜி.பி. பிறகு உடல் லேசாக அசைந்தது. ஒய்.ஜி.பி. தன் கையால், மகேந்திரன் கையை அழுத்தினார். "கோமா'' நிலையிலும், நாடகத்தை குறிப்பிட்டபடி நடத்திவிட வேண்டும் என்பதில் தந்தை உறுதியாக இருப்பதைக் கண்டு, கண்ணீர் விட்டார், மகேந்திரன்.
திட்டமிட்டபடி நாகர்கோவிலுக்கு சென்று நாடகம் நடத்தினார். திரும்பி வந்தபோது, தந்தையை சடலமாகத்தான் பார்த்தார். அவர் வரும்வரை, ஒய்.ஜி.பி.யின் உடலை பார்த்துக்கொண்டவர்கள் நாகேஷ், ராதாரவி, நடிகர் மதன்பாப் ஆகியோர்.
மறுநாள் தன் திருமண நாளுக்காக ஹோமம் செய்யப்போன சிவாஜிகணேசன் பத்திரிகையில் வெளியாகியிருந்த ஒய்.ஜி.பி. மறைவு செய்தியைப் பார்த்து பதறிப்போனார். "என் நல்ல நண்பரை இழந்து விட்டேன்'' என்று கண்களில் கண்ணீர் மல்க கூறிவிட்டு, மகேந்திரன் வீட்டுக்கு விரைந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மகேந்திரனுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
மகேந்திரனுக்கு மிகவும் பிடித்தமான டைரக்டர்களில் முதன்மையானவர் பீம்சிங். அதன் பிறகு ஸ்ரீதர், கே.பாலசந்தர்.
மகேந்திரன், டைரக்டர் ஸ்ரீதரின் பெரிய விசிறி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த "காதலிக்க நேரமில்லை'' படத்தை 100 முÛ
பார்த்திருக்கிறார்.பழைய பாடல்களை வைத்து "மெல்லிசை நிகழ்ச்சி''யை மகேந்திரன் நடத்தி வருகிறார். அதில், "நினைவெல்லாம் ஸ்ரீதர்'' என்ற தலைப்பில் ஸ்ரீதரின் படப்பாடல்களை பாடி, ஸ்ரீதரை மேடைக்கு அழைத்து கவுரவித்தார்.
"என் டைரக்ஷனில் நீ 3 படங்கள்தானே நடித்திருக்கிறாய்! அதற்காகவா இந்த கவுரவம்?'' என்று நெகிழ்ச்சியுடன் ஸ்ரீதர் கேட்க, "இல்லை சார்! இன்று வரை என்னை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த படம் உங்களுடைய `காதலிக்க நேரமில்லை.' அதற்காகத்தான் இந்த நன்றி'' என்றார், மகேந்திரன்.
கண்கலங்கிய ஸ்ரீதர், மகேந்திரனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார்.

நடிகர் சிவாஜிகணேசனுடன் "கவுரவம்'', "பரீட்சைக்கு நேரமாச்சு'' உள்பட 30 படங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்.

சிவாஜிகணேசனும், மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம், 1961-ல் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது, அதில் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், அப்போது நிறைவேறாமல் போன ஆசை 1971-ல் நிறைவேறியது. "கண்ணன் வந்தான்'' என்ற நாடகம், "கவுரவம்'' என்ற பெயரில் படமாகியது. சிவாஜி அற்புதமாக நடித்த படங்களில் ஒன்று "கவுரவம்.'' அதில் நடிக்கும் வாய்ப்பு, மகேந்திரனுக்கு கிடைத்தது.
"கவுரவம்'' மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, சிவாஜியுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார்.
ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகங்கள் படமாகும்போது, ஒய்.ஜி.பி. நடித்த வேடத்தில் சிவாஜி நடிப்பது வழக்கம். அநேகமாக மகேந்திரனும் இடம் பெறுவார்.
மகேந்திரனின் நூறாவது படம் "உருவங்கள் மாறலாம். இதில் சிவாஜியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தனர். இது வெற்றிப்படம்.
"பரீட்சைக்கு நேரமாச்சு'' என்ற மகேந்திரனின் நாடகத்தைப் பார்த்த பட அதிபரும், டைரக்டருமான முக்தா சீனிவாசன், "இதை சினிமாவாக எடுக்கலாம். சிவாஜியும் நடிக்க வேண்டும். அவரிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விடுங்கள்'' என்றார்.
மகேந்திரனும், சிவாஜியை சந்தித்து கதையைச் சொன்னார். கதை, அதில் தான் நடிக்க வேண்டிய வேடம் அனைத்தையும் கேட்டுக்கொண்ட சிவாஜி, "நல்ல கதை. நடிக்கிறேன்'' என்று ஒப்புக்கொண்டார்.
இந்தக் கதையில் "வரதுக்குட்டி'' (வரதன்) என்ற இளைஞனின் கதாபாத்திரம் முக்கியமானது. நாடகத்தில், அப்பாத்திரத்தில் நடித்தவர் மகேந்திரன். சினிமாவிலும் அந்த வேடம் தனக்குத்தான் வரும் என்பது மகேந்திரனுக்குத் தெரியும் என்றாலும், அது சிவாஜி வாயிலிருந்து வரவேண்டும் என்று கருதினார்.
நடிப்பதாக சிவாஜி ஒப்புதல் கொடுத்த பிறகும், அங்கேயே நகராமல் நின்றார். "ஏன் இன்னும் நிற்கிறே! நீதான் வரதுக்குட்டி!'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார், சிவாஜி.
மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார், மகேந்திரன்.
இந்தப் படத்தில், மகேந்திரனின் நடிப்பு வெறும் நகைச்சுவையுடன் நில்லாமல், மனதைத் தொடுவதாக அமைந்தது.
சிவாஜியுடன் 30 படங்களில் நடித்த அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"ஆரம்பத்தில் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். "பாசமலர்'' படத்தைப்பார்த்தபின், சிவாஜியின் பக்தன் ஆனேன்.
என் தந்தைக்கும், சிவாஜிக்கும் நெருங்கிய நட்புறவு உண்டு. எனவே, சிவாஜியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை தன்னுடைய மூத்த மகனாகவே கருதி, பாசத்தைப் பொழிந்தார்.
மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில், சிவாஜி பேசுகையில், "நல்ல காமெடி என்றால், என் பையன் மகேந்திரனின் நடிப்பைக் கூறலாம்'' என்று குறிப்பிட்டதை, என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரிய விருதாகக் கருதுகிறேன்.
சிவாஜியின் நேரந்தவறாமைக்கும், கடமை உணர்வுக்கும் பல உதாரணங்கள் கூறலாம்.
5 மணிக்கு நானும், டைப்பிஸ்ட் கோபுவும் சிவாஜி வீட்டுக்குச் சென்றோம். சிவாஜி எங்களை வரவேற்று, காபி கொடுக்கும்படி கமலா அம்மாவிடம் கூறினார்.
பேச்சுவாக்கில், "இன்று மாலை 6-30 மணிக்கு நாடகம் இருக்கிறது'' என்று நான் கூறிவிட்டேன். சிவாஜிக்கு வந்ததே கோபம்! எங்கள் இருவருடைய சட்டையைப் பிடித்து `தரதர' என்று இழுத்து வந்து, வாசலில் தள்ளினார்.
"கமலா! டிராமாவை வைத்துக்கொண்டு, என்னைப் பார்க்க வந்திருக்கானுக! காபி கொடுக்காதே!'' என்று சத்தம் போட்டார்.
என்னைப் பார்த்து, "உங்கப்பா போனப்பறம் நாடகத்தின் மீது அக்கறை போயிடுச்சா! மேலே இருந்து அவருடைய ஆவி சபிக்கும். போங்கடா!'' என்று, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக எங்களை விரட்டி அடித்தார்.
நாடகம் என்றால், அவருக்கு அப்படி ஒரு பக்தி.
சிவாஜி அதிகம் நடிக்காமல் இருந்த அவருடைய இறுதிக் காலத்தில், மாதம் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஒருமுறை அவரைப் பார்க்கப் போகவில்லை. எனக்கு சிவாஜியின் வீட்டிலிருந்து போன் வந்தது. "ஏன் வரவில்லை?'' என்று சிவாஜி கேட்பதாகச் சொன்னார்கள்.
அந்த அளவுக்கு சிவாஜி என்னிடம் அன்பு காட்டினார்.
என்னுடைய நாடக வாழ்க்கையின் பொன் விழா (50-ம் ஆண்டு நிறைவு) 2002-ம் ஆண்டில் நடந்தது. அப்போது பிரபு வந்து, சிவாஜியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை எனக்கு அணிவித்தார். "கமலா அம்மாள் தன் மூத்த மகனுக்கு அளித்த பரிசு'' என்று அப்போது அவர் குறிப்பிட்டார். அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன்.
சிவாஜி மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. என்றென்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அவர் படங்கள் ஏற்படுத்துகின்றன.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, சின்னத்திரை ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். 45 வருடங்களுக்கு முன் நாடகத்தில் அடியெடுத்து வைத்த அவர், 35 ஆண்டு காலமாக சினிமாவில் நடித்து வருகிறார்.

அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 200-க்கு மேல். ஒய்.ஜி.மகேந்திரன் 1950-ல் பிறந்தார். தந்தை ஒய்.ஜி.பார்த்த சாரதி நாடகக் கலைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தாயார் திருமதி ஒய்.ஜி.பி. (ராஜலட்சுமி) மிகச்சிறந்த கல்வியாளர். ஒய்.ஜி.பார்த்தசாரதி, தன் நண்பர் பட்டுவுடன் சேர்ந்து "யு.ஏ.ஏ'' நாடகக்குழுவை 1952-ல் தொடங்கினார். அப்போது மகேந்திரனுக்கு வயது 2. இந்த இரண்டு வயதிலேயே, நாடகம், ஒத்திகை, வசனம் என்ற சூழ்நிலையில் வளர்ந்தார். இதுவே, அவர் பிற்காலத்தில் நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்க அஸ்திவாரமாக அமைந்தது.
மகேந்திரன் நடிப்பில் மட்டுமல்ல; படிப்பிலும் திறமைசாலி. "எம்.பி.ஏ'' பட்டம் பெற்றவர். பட உலகில் உள்ள, விரல் விட்டு எண்ணத்தக்க படிப்பாளிகளில் இவரும் ஒருவர். மகேந்திரன் முதன் முதலாக 1961-ல் "பெற்றால்தான் பிள்ளையா'' என்ற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம்தான் பிறகு சிவாஜிகணேசன் நடிப்பில், "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக வந்தது.
தான் நடித்த நாடகம் படமானதால், படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், சினிமாவுக்காக கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நாடகத்தில் நடிக்கத் தொடங்கியது முதல், நடிப்பில் இவர் முன்னேற வேண்டும் என்பதில் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் அம்மாவுக்கோ, இவர் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று ஆசை.
"நாளைக்குப் பரீட்சை. நன்றாகப் படி'' என்று மகனிடம் திருமதி ஒய்.ஜி.பி. சொல்லிவிட்டுப் போவார். மறு நிமிடமே அப்பா ஒய்.ஜி.பி. வந்து, "டேய்! நாளைக்கு நாடகம் இருக்கு. சரியா ஐந்து மணிக்கு வந்துவிடு!'' என்று சொல்வார். படித்துக் கொண்டிருக்கும்போதே, மகேந்திரன் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அப்போது, மவுலியும் இவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். "தமிழக லாரல்-ஹார்டி'' என்று கூறும் அளவுக்கு, நகைச்சுவை இரட்டையர்களாகக் கொடிகட்டிப் பறந்தார்கள்.
"பிளைட்-172'' நாடகத்தில் அறிமுகமான இந்த நகைச்சுவை இரட்டையர்கள் "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'', "பத்ம வியூகம்'' போன்ற நல்ல நாடகங்கள் மூலமாக, மேலும் புகழ் பெற்றனர். மகேந்திரனுக்கு நடிகர் "ஏ.ஆர்.எஸ்'' நிறைய வாய்ப்பளித்து, அவர் நடிப்புக்கு மெருகேற்றினார்.
"நலந்தானா?'' என்ற நாடகத்தில் மகேந்திரன் நடித்துக் கொண்டிருந்தபோது, அவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. "நலந்தானா'' நாடகத்தில், மகேந்திரன் நடித்தது "அரைக்கிறுக்கு'' ("செமி லூஸ்'') கேரக்டர். பிரமாதமாக நடித்து, ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றார். இந்த நாடகத்தில் ஏ.ஆர்.எஸ்.சும் உண்டு. அலுவலக வேலைகள் காரணமாக, அவர் சில நாட்கள் நடிக்க இயலவில்லை. அப்போது அவர் வேடத்தை நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்று நடித்தார்.
அந்தச் சமயத்தில், மகேந்திரனின் நடிப்பை அவர் பார்த்தார். அந்த நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. பட அதிபர் "கலாகேந்திரா'' கோவிந்தராஜனிடம், மகேந்திரன் நடிப்பைப் பற்றி கூறினார். "அரைக்கிறுக்கு ரோலில், மகேந்திரன் அசத்துகிறார்'' என்று புகழ்ந்தார்.
அந்த சமயத்தில், கே.பாலசந்தர் டைரக்ஷனில் "நவக்கிரகம்'' என்ற படத்தை கலாகேந்திரா தயாரித்துக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில், அரைக்கிறுக்கு வேடத்தில் நடிக்க ஒரு நடிகரை தேடிக்கொண்டிருந்தார்கள்.
மகேந்திரன் பற்றி பாலசந்தரிடம் "கலாகேந்திரா'' கோவிந்தராஜன் சொல்ல, அவர் மகேந்திரனை அழைத்துப்பேசினார். தான் சிந்தித்து வைத்திருக்கும் அரைக்கிறுக்கு ரோலுக்கு, மகேந்திரன் பொருத்தமானவர் என்று முடிவு செய்தார். மகேந்திரனும், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக நடித்தார். "நவக்கிரகம்'' 3-9-1970-ல் வெளிவந்து, மகேந்திரனுக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது.
பாலசந்தர் டைரக்ஷனில் முதல் படம் அமைந்தது குறித்து, மகேந்திரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. "மோதிரக்கையால் குட்டுப்பட்டதால், சினிமாத்துறையில் முன்னேற முடிந்தது'' என்று கூறுகிறார். "நவக்கிரகம்'' வந்த பிறகு, நாடகம், சினிமா இரண்டிலும் "பிசி'' ஆனார், மகேந்திரன். நாடகம் இல்லாதபோது சினிமா, சினிமா இல்லாதபோது நாடகம் என்று இரட்டைக் குதிரைகளிலும் திறமையாக சவாரி செய்தார்.
திக்கற்ற பார்வதி படத்தின் வெற்றியினால், காரைக்குடி நாராயணன் டைரக்டராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.
"திக்கற்ற பார்வதி'' படத்தின் வெற்றியினால், காரைக்குடி நாராயணன் டைரக்டராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.
"திக்கற்ற பார்வதி''யில் அவர் எழுதிய வசனங்கள் பெரிதும் பாராட்டப்பட்டதால், 11 படங்களுக்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
இவற்றில் "தீர்க்க சுமங்கலி'' பெரிய வெற்றிப்படம். இதில், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்தனர். இந்தப் படத்தில்தான், தமிழ்ப்பட உலகில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார். அவர் இப்படத்தில் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'' என்ற பாடல், மிகப்பிரபலம்.
இந்தப் படத்துக்கு பாடல்களை வாலி எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு'' என்ற நகைச்சுவை படத்துக்கு கதை வசனம் எழுதினார். இதில் சிவகுமார், ஜெயசித்ரா நடித்தனர். ரா.சங்கரன் டைரக்ட் செய்தார்.
மூன்று பேர்களை மட்டும் கதாபாத்திரங்களாக வைத்து, "தூண்டில் மீன்'' என்ற கதையை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார். அதற்கு திரைக்கதை வசனம் எழுதினார், காரைக்குடி நாராயணன். மேஜர் சுந்தரராஜன், லட்சுமி, `ஜுலி' படத்தின் கதாநாயகன் மோகன் ஆகியோர் நடித்தனர்.
இந்தப்படத்தை ரா.சங்கரன் டைரக்ட் செய்தார். சிவாஜிகணேசன், மஞ்சுளா நடித்த "அன்பே ஆருயிரே'' படத்துக்கு வசனம் எழுதினார். கதை-வசன ஆசிரியராக இருந்த காரைக்குடி நாராயணன், பின்னர் டைரக்டராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.
தனது புகழ் பெற்ற மேடை நாடகமான "அச்சாணி''யை, 1978-ல் திரைப்படமாகத் தயாரித்தார். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளையும் அவரே ஏற்றார். முத்துராமன், லட்சுமி நடித்தனர். இந்தப்படத்தில், ஷோபா அறிமுகமானார். இளையராஜா இசை அமைத்தார்.
"அச்சாணி'' வெற்றிப்படமாக அமைந்தபோதிலும், அதைத் தயாரிக்கும்போது காரைக்குடி நாராயணன் பல சோதனைகளை அனுபவித்தார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"ஒழுங்காக கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். `அச்சாணியை நாம் சேர்ந்து தயாரிக்கலாம். பணப்பொறுப்பு என்னைச் சேர்ந்தது. நீ கதை வசனம் எழுதுவதோடு, டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுக்கொள்' என்றார். நானும் சம்மதித்தேன்.
அழைப்பிதழ் அடிக்கப்பட்ட நிலையில், முதல் நாளே பிலிம் வாங்கக்கூட பணம் இல்லாத நிலையை அவர் உருவாக்கினார். அன்றுதான் நான் முதன் முதலில் புரோ நோட்டில் கையெழுத்து போட்டு கடன் வாங்க நேர்ந்தது. அச்சாணியில் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. பைனான்ஸ் செய்ய வந்தவர் கூறியதால், ஜெய்சங்கருக்கு பதிலாக முத்துராமன் நடித்தார். ஆனால், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அச்சாணி தொடக்க விழாவில் ஜெய்சங்கர் வந்து கலந்து கொண்டார்.
பணம் இல்லாமல் ஒரே நாள் படப்பிடிப்புடன் படம் நின்றது. ஆறு மாதங்களுக்குப்பிறகு படம் மீண்டும் துவங்கியது. இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பதிவாக வேண்டிய நிலையில், அருணாசலம் ஸ்டூடியோவில் இயந்திரம் பழுதுபட்டு அன்று காலை தடங்கலானது. என் நிலையைப் புரிந்து கொண்ட இளையராஜா, அதே இரண்டு பாடல்களையும் 3 மணி நேரத்துக்குள் பிரசாத் ஸ்டூடியோவில் பதிவு செய்து கொடுத்து எனக்கு நிம்மதியைத் தந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் பாடிய "தாலாட்டு பிள்ளையுண்டு'', ஜானகி பாடிய "மாதா உன் கோயிலில்'' ஆகிய பாடல்களே அவை. இரண்டு பாடல்களும் பிரபலமாயின.
மேலூர் கணேஷ் திரையரங்கின் அதிபர் மீனாட்சி சுந்தரத்தின் உதவியால், தடைகளைக் கடந்து, படத்தை முடித்தேன். நான் பட்ட சிரமங்களுக்குப் பலன் கிடைத்தது. படம் வெற்றி பெற்றது. பாராட்டுகளும், பரிசுகளும் கிடைத்தன.'' இவ்வாறு காரைக்குடி நாராயணன் கூறினார். அடுத்து இவர் கதை-வசம் எழுதி, இயக்கி தயாரித்த "மீனாட்சி குங்குமம்'' படத்தில், விஜயகுமார், ஸ்ரீபிரியா நடித்தனர். இப்படத் தயாரிப்பில் ராமராஜன் துணை இயக்குனராக பணியாற்றினார்.
இந்தப் படத்தில், சின்னப்பதேவர் பாணியில் மிருகங்களை நடிக்க வைத்தார், காரைக்குடி நாராயணன். இதில் ஒரு காட்சி: ஒரு பசு மாட்டிடம் குரங்கு பால் கறந்து, அந்தப் பாலை குழந்தைக்கு புகட்டும். முதலில் இந்தக் காட்சியை படமாக்க முயன்றபோது, குரங்கை மாடு எட்டி உதைக்க அது தூரத்தில் போய் விழுந்தது! பிறகு மிருகங்களை பழக்குபவரிடம் இந்தக் காட்சியை நாராயணன் விளக்க, அவர் பசுவிடம் குரங்கை நன்றாகப் பழக விட்டு இரண்டு பிராணிகளுக்கும் இடையே நட்பை உண்டாக்கினார். இரண்டும் சிநேகமான பிறகு, காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டது.
இந்தப் படத்தைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், "மிருகங்களை நடிக்க வைத்து அசத்தியிருக்கிறாய்! குட்டி தேவராகிவிட்டாய்!'' என்று பாராட்டினார். ராதிகா, ஜெய்கணேஷ் ஆகியோரின் நடிப்பில், "அன்பே சங்கீதா'' என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார், நாராயணன். இந்தப் படத்தில், இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய "சின்னப்புறா ஒன்று'' என்ற பாடல் அற்புதமாக அமைந்தது. படத்தைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், "பிமல்ராய் படம் மாதிரி நன்றாக இருக்கிறது. ஆனால் ஓடாது'' என்றார்.
நாராயணன் திடுக்கிட்டவராய், "ஏன்?'' என்று கேட்க, "ராதிகா எவ்வளவு இளமையோடு இருக்கிறார்! அவருக்கு ஜோடியாக ஜெய்கணேஷ் நடிப்பதை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள்'' என்றார், ஏவி.எம். அவர் கணித்தபடியே, படம் ஓடவில்லை. இதன் பிறகு "உன்னிடம் மயங்குகிறேன்'', "நல்லது நடந்தே தீரும்'' ஆகிய படங்களை நாராயணன் தயாரித்து இயக்கினார்.
"நல்லது நடந்தே தீரும்'' தலைப்பு நன்றாக இருந்தபோதிலும், படம் தொடங்கியது முதல் கெட்ட நிகழ்ச்சிகளே நடந்தன. "தகரா'' என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரேகாவை இதில் அறிமுகப்படுத்தினார். மற்றும் சுமன், பானுசந்தர் ஆகியோர் நடித்தனர். படத்தொடக்க விழாவின்போதே, படத் தயாரிப்புக்கு பணம் போடுவதாகக் கூறியிருந்தவர், பின்வாங்கிவிட்டார். பாரதிராஜா, பட அதிபர் கே.ஆர்.ஜி. ஆகியோர் உதவி செய்ததால், படம் தயாராகி முடிந்தது.
அதன் பிறகும் பிரச்சினை. படத்தின் சில காட்சிகளுக்காக, தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படத்தை திரையிட முடியாத நிலைமை. அப்போது, தணிக்கைக் குழுவின் தலைமைப் பதவியில் எல்.வி.பிரசாத் இருந்தார். அவரிடம் நாராயணனும், இளையராஜாவும் சென்று முறையிட்டனர். அவர் யோசனைப்படி, ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது.
அந்தப் படத்தில் இடம் பெறாமல் போன "நிலாக்காயுதே'' என்ற பாடல், பிறகு கமலஹாசன் நடித்த "சகலகலா வல்லவன்'' படத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட்ட அவர் மகன் காசிக்கு, பல சோதனைகள் ஏற்பட்டன. ஒரு சித்தருடன் காடுகளில் சில ஆண்டுகள் அலைந்து திரிந்தார்.

இதுகுறித்து காசி கூறியதாவது:-
"1976-ம் ஆண்டில் எனக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டது. உடல் நிலை மோசமாகியது. 4 ஆண்டுகள் சிகிச்சை பெற்றேன். படத்தயாரிப்பு நின்று போயிற்று. இந்நிலையில் என் நண்பர்கள் ராமமூர்த்தி, சுவாமிநாதன் ஆகியோர் உதவியால், பெரம்பலூர் அருகே வாசம் செய்து கொண்டிருந்த தலையாட்டி சித்தர் என்ற மகானை சந்தித்தேன்.
அவர் காட்டிலும், மலையிலும் அலைந்து திரிபவர். அவருடன் சுற்றித்திரிந்தேன். ஒருநாள் அவர் ஒரு பொட்டலத்தைப் பிரித்து, அதில் இருந்த அல்வாவை கொடுத்து சாப்பிடச் சொன்னார். "எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நான் அல்வா சாப்பிடக்கூடாதே!'' என்றேன். "உன் வியாதிக்கு இதுதான் மருந்து!'' என்றார்.
நான் அந்த அல்வாவை சாப்பிட்டேன். ஆச்சரியப்படும் வகையில், சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டேன். இதன் காரணமாக அவர் மீது பக்தி ஏற்பட்டது. அவருடனேயே சில ஆண்டுகள் தங்கினேன். அவர் போகிற இடங்களுக்கெல்லாம் சென்றேன். ஒருநாள் அவர் என்னை அழைத்து, "நீ ஊருக்குப்போ. உனக்குள்ள கடன் பிரச்சினைகள் தீரும்'' என்றார். ஜுபிடரின் பிற்காலப்படங்கள் சரியாக ஓடாததால், என் தகப்பனார் காலத்திலேயே ஜுபிடர் நிறுவனத்தின் மீது கடன் சுமை ஏறியிருந்தது.
கம்பெனிக்கு சொத்துக்கள் இருந்தபோதிலும், கடனை தீர்க்க முடியாத நிலை. எனவே, "கடன் பிரச்சினை தீர வழி இல்லையே'' என்று சித்தரிடம் கூறினேன். "பிரச்சினை தீருமë நேரம் வந்துவிட்டது. ஊருக்குப்போ. வடக்கே இருந்து ஒருவர் வந்து கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்'' என்று சித்தர் கூறினார். எனவே, ஊருக்குத் திரும்பினேன். சித்தர் சொன்னபடியே நடந்தது. மும்பையில் இருந்து, அதிகாரி ஒருவர் வந்தார். நிலங்களை விற்க அவர் வழி செய்தார்.
எங்கள் மீதிருந்த கடன் சுமைகள் அதிசயப்படத்தக்க வகையில் அகன்றன. 1991-ல் சித்தர் சமாதியானார். பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே, அவர் இருந்த இடத்தில் சமாதியுடன் ஆசிரமம் கட்டியுள்ளோம். அங்கு பூஜை, வழிபாடு, அன்னதானம் செய்து வருகிறோம்.'' இவ்வாறு காசி கூறினார். "நெஞ்சம் மறப்பதில்லை'', "பாமா விஜயம்'' முதலிய படங்களை காசி தயாரித்த காலக்கட்டத்தில், அவரும் ஜுபிடர் மொகிதீன் மகன் ஹபிபுல்லாவும் சேர்ந்து கூட்டாக சில படங்களை தெலுங்கிலும், கன்னடத்திலும் தயாரித்தனர். தமிழில் ஜுபிடர் எடுத்த "வால்மீகி''யை தெலுங்கில் தயாரித்தனர்.
இதில் என்.டி.ராமராவும், ராஜசுலோசனாவும் நடித்தார்கள். "மர்மயோகி''யை தெலுங்கில் எடுத்தனர். தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் என்.டி.ராமராவும், மாதுரிதேவி நடித்த வேடத்தில் கிருஷ்ணகுமாரியும் நடித்தனர். கன்னடத்து சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரையும், லீலாவதியையும் நடிக்க வைத்து, "வால்மீகி''யை கன்னடத்தில் எடுத்தார்கள். அறிஞர் அண்ணா கதை - வசனம் எழுதி, ஜுபிடர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "வேலைக்காரி''யை கன்னடத்தில் தயாரித்தனர்.
தமிழில் கே.ஆர்.ராமசாமி நடித்த வேடத்தில் ராஜ்குமாரும், வி.என்.ஜானகியின் வேடத்தில் சவுகார் ஜானகியும், எம்.வி.ராஜம்மா நடித்த வேடத்தில் லீலாவதியும் நடித்தனர். இந்த தெலுங்கு, கன்னடப் படங்கள் வெற்றிகரமாக ஓடின. ஜுபிடர் சோமுவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் படத்தொழிலில் ஈடுபட்டனர்.
ஜுபிடர் சோமுவின் இளைய மகன் (காசியின் தம்பி) எம்.எஸ்.செந்தில்குமார், பெங்களூர் பிலிம் இன்ஸ்டிட்ïட்டில் ஒளிப்பதிவாளராகப் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர். பின்னர் 1974-ல் "பணத்துக்காக'' என்ற படத்தை தயாரித்து, டைரக்ட் செய்தார். இதில் சிவகுமார், தேங்காய் சீனிவாசன், சசிகுமார், ஜெய்சித்ரா, ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்தனர்.
கமலஹாசன் இப்படத்தின் துணை நடன இயக்குனராக பணியாற்றியதுடன், வில்லனாகவும் நடித்தார். கதை-வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். கண்ணதாசன் பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். "போலீஸ் அறியறது'' என்ற மலையாளப்படத்தையும் செந்தில்குமார் தயாரித்தார். ஜுபிடர் சோமு இருந்தபோதே, அவர் மகள் பாலசவுந்தரியின் கணவர் ஏ.கே.பாலசுப்பிரமணியம் மற்றும் சிலருடன் சேர்ந்து சரவணபவா - யூனிட்டி பேனரில், "எதிர்பாராதது'' படத்தை தயாரித்தார்.
பெரிய வெற்றிப்படமான இதில் சிவாஜிகணேசன், பத்மினி ஆகியோர் நடித்தனர். ஸ்ரீதர் வசனம் எழுதினார். சோமுவுடன் பணியாற்றிய சி.சுந்தரம்பிள்ளை, கேமராமேன் பி.ராமசாமி, ஒலிப்பதிவாளர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் இந்தப் பட நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சிவாஜிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்த "வணங்காமுடி'', சிவாஜி, சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ் ஆகியோர் நடித்த "எல்லாம் உனக்காக'' ஆகியவையும் "சரவணபவா யூனிட்டி'' தயாரித்த படங்கள்.
இதன்பின், பங்குதாரர்கள் தனித்தனியாகப் பிரிந்து, படங்களைத் தயாரித்தனர். பாலசுப்பிரமணியம் சில மலையாளப்படங்களைத் தயாரித்தார். சோமுவின் மற்றொரு மகளான சுலோசனாவின் கணவர் வி.பி.எம்.மாணிக்கம், பகவதி பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனியை தொடங்கி, மலையாளப்படங்கள் தயாரித்தார். (சோமுவின் இன்னொரு மகள் சரோஜாவின் கணவர் திருப்பூர் ஜி.எஸ்.ராமநாதன், "பனாமா'' என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார்.
இப்போது அதை அவர் மகன் டி.ஆர்.சுப்பிரமணியம் நிர்வாகித்து வருகிறார்.) சோமுவின் தம்பியான எம்.கோபால், திருப்பூரில் ஜோதி தியேட்டர் என்ற திரையரங்கின் உரிமையாளராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் விளங்கினார். தனது எதிர்காலத் திட்டம் பற்றி எம்.எஸ்.காசி கூறியதாவது:- "திரைப்படத் தயாரிப்புதான் எங்கள் குடும்பத் தொழிலாக இருந்தது. எனவே, மீண்டும் திரைப்படம் தயாரிக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனக்கு கலைஞானம் உதவி புரிகிறார். சினிமா தொழிலில் பல மாற்றங்களைக் காண்கிறேன். தொழில் நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது. திறமையான இளைஞர்கள் பலர் திரைப்படத் தொழிலில் நுழைந்துள்ளனர். போட்டி கடுமையாக இருப்பினும், கதையில் கவனம் செலுத்தினால் வெற்றி அடைய முடியும் என்று கருதுகிறேன்.
சிறந்த படங்கள் சிலவற்றை தயாரிப்பதன் மூலம், பழம்பெரும் நிறுவனமான ஜுபிடரின் பெருமையை நிலைநாட்டி, என் தந்தையின் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன்.''
இவ்வாறு காசி கூறினார்.
ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பிறகு, அவர் மகன் எம்.எஸ்.காசி, படத்தொழிலில் இறங்கினார். ஸ்ரீதர் டைரக்ஷனில் "நெஞ்சம் மறப்பதில்லை'' படத்தைத் தயாரித்தார்.

காசி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் "பி.எஸ்.சி'' முதல் ஆண்டு படித்து வந்தபோது, தந்தை சோமுவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், தனக்கு உதவியாக மகன் காசியை படத்தொழிலில் இறக்கினார். 1959-ம் ஆண்டு "தங்கப்பதுமை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை காசி கவனித்தார்.
இதன்பின் எம்.ஜி.ஆர். நடித்த "அரசிளங்குமரி'' தயாரிக்கப்பட்டு வந்தபோது, சோமு மரணம் அடைந்தார். இதனால், அந்தப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை காசி ஏற்றார்.
இந்த அனுபவம் பற்றி காசி கூறியதாவது:-
"மாணவ பருவத்திலேயே, ஜுபிடர் படங்களின் படப்பிடிப்பை பார்த்திருக்கிறேன். எனவே, சின்ன வயதிலேயே எனக்கு சினிமா பற்றி ஓரளவு தெரியும். என் தந்தை உடல் நலம் குன்றியதால், நான் படத்தொழிலுக்கு வந்தேன். படத்தயாரிப்பின் நுட்ங்கள் பற்றி, எனக்கு என் தந்தை பயிற்சி அளித்தார்.
"அரசிளங்குமரி'' தயாராகி வந்தபோது என் தந்தை காலமாகிவிட்டதால், அந்தப் படத்தை முடிக்க எம்.ஜி.ஆர். செய்த உதவி மறக்க முடியாதது. கிட்டத்தட்ட பாதி படத்தை அவர்தான் டைரக்ட் செய்தார் என்று கூறவேண்டும். ஒரு காரியத்தை எடுத்தால், அதை முடிக்கும் வரை சாப்பாடு, தூக்கம் எதைப்பற்றியும் எம்.ஜி.ஆர். நினைக்கமாட்டார். "எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும்'' என்பதே அவர் கொள்கை. அவரிடமிருந்து நான் கற்ற முக்கிய பாடம் இது.''
இவ்வாறு காசி கூறினார்.
"அரசிளங்குமரி'' படத்திற்குப் பிறகு, ஜுபிடர் பிக்சர்ஸ் பேனரில் படம் எதுவும் தயாரிக்கப்படவில்லை. 1963-ல், மனோகர் பிக்சர்ஸ் பேனரில் "நெஞ்சம் மறப்பதில்லை'' என்ற படத்தை காசி தயாரித்தார். அதன் கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஸ்ரீதர் கவனித்தார். பூர்வஜென்மம் பற்றிய கதையைக் கொண்ட இப்படத்தில் தேவிகா, கல்யாண்குமார், நம்பியார் ஆகியோர் நடித்தனர்.
இதுபற்றி காசி கூறுகையில், "நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எடுத்து முடிக்க ஸ்ரீதர் மிகவும் உதவினார். அவர் செய்த உதவிகளை மறக்க முடியாது. "நெஞ்சம் மறப்பதில்லை'' தரமான படம் என்று பெயர் பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை'' என்று கூறினார். இதன் பிறகு கே.பாலசந்தரின் நாடகமான "பாமா விஜய''த்தை திரைப்படமாக காசி தயாரித்தார். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார். முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ஜெயந்தி நடித்த இப்படம், வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படத்தைத் தயாரிப்பதற்கு ஜெமினி எஸ்.எஸ்.வாசன் மிகவும் உதவினார். கதை விவாதத்திலும் கலந்து கொண்டார். படத்தையும் விநியோகித்தார்.
இந்தப் படத்தின் திரைக்கதையை பாலசந்தர் மிக சிறப்பாக அமைத்திருந்தார். படத்தின் வெற்றிக்கு, அதுவே அடிப்படையாக அமைந்தது. இதுபற்றி காசி கூறுகையில், "இந்தப் படத்தயாரிப்பின்போது, வாசன் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மாமனிதர். அவருடைய சாதனைகளைப் பார்த்தபோது, `நாம் இன்னும் உழைக்கத் தொடங்கவே இல்லை' என்று தோன்றியது. என் தந்தை மீது அவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதன் காரணமாகவே அவர் எனக்கு உதவினார்'' என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து "சூதாட்டம்'' என்ற படத்தை காசி தயாரித்தார். ஜெய்சங்கர், முத்துராமன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் டைரக்டராக மதுரை திருமாறன் அறிமுகமானார். பின்னர் `வாயாடி' என்ற படத்தை தயாரித்தார். படத்தின் கதையை கலைஞானம் எழுதினார். மதுரை திருமாறன் டைரக்ட் செய்தார். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். படம் வெற்றி பெற்றது. இதன்பின் "திருடி'' என்ற படத்தை தயாரித்தார். கதையை "தங்கப்பதக்கம்'' மகேந்திரன் எழுதினார். திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்தார், மதுரை திருமாறன். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்தனர். படம் வெற்றிப்படமானது.
1976-ம் ஆண்டு "தாய்வீட்டு சீதனம்'' என்ற படத்தை தயாரித்தார். படத்திற்கு கலைஞானம் கதை எழுதினார். திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர்.
இதுபற்றி காசி குறிப்பிடுகையில், "இந்தப் படத்தை தயாரித்து முடிக்க கே.ஆர்.விஜயா, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பைனான்சியரும், பட அதிபருமான நந்தகோபால் செட்டியார், விநியோகஸ்தர் "போட்டோ லித்தோ'' சதாசிவம், திருப்பூர் நண்பர் லோகராஜ் ஆகியோர் உதவினார்கள். அவர்களை நான் மறக்க முடியாது'' என்றார். 1976-ல், சர்க்கரை நோயினால் காசி பாதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்று தப்பினார். அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஆச்சரியமானவை.
கண்ணகிக்கு அற்புதமாக வசனம் எழுதிய இளங்கோவன், பின்னர் மஹா மாயாவுக்கு வசனம் எழுதியதுடன், ஜுபிடர் சோமுவுடன் இணைந்து அந்தப் படத்தை டைரக்ட் செய்தார்.
"கண்ணகி''க்கு அற்புதமாக வசனம் எழுதிய இளங்கோவன், பின்னர் "மஹா மாயா''வுக்கு வசனம் எழுதியதுடன், ஜுபிடர் சோமுவுடன் இணைந்து அந்தப் படத்தை டைரக்ட் செய்தார். ஜுபிடர் பிக்சர்ஸ் "கண்ணகி'' படத்தை அடுத்து தயாரித்த படம் "குபேரகுலேசா.'' குசேலர் கதை பலரும் அறிந்த ஒன்று. கிருஷ்ணபரமாத்மாவாவும், குசேலரும் பள்ளித் தோழர்கள். கிருஷ்ணன், மகாவிஷ்ணுவின் அவதாரம்.
துவாரகையைத் தலைநகராகக் கொண்டு, அரசராகி விடுகிறார். குசேலரோ, 27 குழந்தைகளுடன் வறுமையில் உழல்கிறார். "உங்கள் பால்ய நண்பர் கிருஷ்ணனை சந்தித்து, ஏதாவது உதவி பெற்று வாருங்கள்'' என்று, குசேலரை துவாரகைக்கு அனுப்பி வைக்கிறார், அவர் மனைவி. வெறுங்கையுடன் போகக்கூடாது என்பதால், ஒரு சிறு பையில் அவல் கொடுத்து அனுப்புகிறார்.
பழமோ, வேறு பரிசுகளோ வாங்க அவர்களிடம் பணம் இல்லை. குசேலரை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார், கிருஷ்ணன். "அண்ணி ஏதாவது கொடுத்து அனுப்பி இருப்பாரே!'' என்று கிருஷ்ணன் கேட்க, அவலை எடுத்து நீட்டுகிறார், குசேலர். சிரித்துக்கொண்டே, ஒரு பிடி அவலை சாப்பிடுகிறார், கிருஷ்ணன். அவ்வளவுதான்! குசேலரின் குடிசை வீடு, பெரிய மாளிகை ஆகிவிடுகிறது! இன்னொரு பிடி அவலை கிருஷ்ணன் சாப்பிடுகிறார்.
குசேலர் வீட்டில் இருந்த மண்பாண்டங்கள், தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன. வீடு நிறைய நகைகள் குவிகின்றன. மூன்றாவது பிடி அவலை கிருஷ்ணன் சாப்பிட போகும்போது, ருக்மணி தடுத்து விடுகிறாள். காரணம், அந்த மூன்றாவது பிடி அவலை சாப்பிட்டு விட்டால், குசேலர் பெரிய மாமன்னர் ஆகிவிடுவார் என்பது ருக்மணிக்கு தெரியும்! சில நாட்கள் கிருஷ்ணனின் விருந்தாளியாகத் தங்கியிருந்து விட்டு, சொந்த ஊருக்குத் திரும்புகிறார், குசேலர். கூச்சத்தின் காரணமாக, கிருஷ்ணனிடம் உதவி ஏதும் கேட்கவில்லை. ஊர் வந்து சேர்ந்த குசேலர், தன் குடிசை வீடு பெரிய மாளிகையாக மாறி இருப்பதைப் பார்த்து திகைத்து நிற்கிறார்.
வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும், தங்கப் பாத்திரங்கள், தங்க நகைகள், தங்கக்காசுகள்! முன்பு கந்தல் சேலை அணிந்திருந்த குசேலரின் மனைவி, பட்டு சேலை அணிந்து, விலை உயர்ந்த ஆபரணங்கள் ஜொலிக்க எதிரே வருகிறாள்! கிருஷ்ணனின் மகிமையைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார், குசேலர். - இதுதான், புராணத்தில் உள்ள குசேலர் கதை. இதை "பக்த குசேலா'' என்ற பெயரில் டைரக்டர் கே.சுப்பிரமணியம் ஏற்கனவே தயாரித்தார்.
குலேசராக பாபநாசம் சிவன் நடித்தார். குசேலரின் மனைவியாகவும், கிருஷ்ணனாகவும் எஸ்.டி.சுப்புலட்சுமி இரட்டை வேடத்தில் நடித்தார். தரித்திர குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நடந்திருக்கும்ப இதுபற்றி கற்பனை செய்தார், எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அளவுக்கு மீறி பணம் வந்த பிறகு குசேலர் சும்மா இருப்பாராப காயகல்பம் சாப்பிட்டு இளைஞர் ஆகிறார்.
டி.ஆர்.ராஜகுமாரியை காதலிக்கிறார்! அதனால் அவர் குடும்பத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும், திருப்பங்களையும் வைத்து, பி.எஸ்.ராமையா எழுதிய கதைதான், "குபேர குசேலா.'' ஜுபிடர் சோமுவும், மொகிதீனும் தயாரித்த இப்படத்தில் குசேலராக பாபநாசம் சிவன் நடித்தார். காயகல்பம் சாப்பிட்டு இளைஞனாக மாறிய பிறகு, பி.யு.சின்னப்பா நடித்தார். கிருஷ்ணனாக நடித்தவர் பி.எஸ்.கோவிந்தன்.
(பிற்காலத்தில் "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி''யின் கதாநாயகன்.) கதை-வசனத்தை பி.எஸ்.ராமையா எழுதினார். கண்ணகியை டைரக்ட் செய்த சோமு, ஆர்.எஸ்.மணி ஆகிய இருவரும், இந்தப் படத்தையும் இணைத்து டைரக்டர் செய்தனர். படம் 14-6-1943-ல் வெளியாயிற்று.
இது வெற்றிப்படம் என்றாலும், "கண்ணகி'' போல மகத்தான வெற்றிப்படம் அல்ல. "கண்ணகி'' படத்தை "மகத்தான காவியம்'' என்று புகழ்ந்த பத்திரிகைகள், "குபேர குலேசா'' பற்றி மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டன."படம் நன்றாக இருக்கிறது; பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது'' என்று பொதுவாக கூறப்பட்டாலும், "குசேலர் கதை புராணத்தில் உள்ளது. அவர் சிறந்த பக்திமான். அவர் காயகல்பம் சாப்பிட்டு விட்டு, இளைஞனாக மாறி பெண் பித்தன் போல் நடந்து கொள்வதாகக் கற்பனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று, பல பத்திரிகைகள் கண்டித்திருந்தன.
ஜுபிடரின் மூன்றாவது படம் "மஹா மாயா.'' ஹர்சர் காலத்து சரித்திர நிகழ்ச்சிகளை வைத்து, கற்பனை செய்யப்பட்ட கதை இது. இளங்கோவன் எழுதி னார். கண்ணகியின் வெற்றி ஜோடியான பி.யு.சின்னப்பாவும், கண்ணாம்பாவும் மீண்டும் இப்படத்தில் இணைந்தனர். கண்ணகியில் மாதவியாக நடித்த எம்.எஸ்.சரோஜாவும் இதில் நடித்தார்.
படத்தை டி.ஆர்.ரகுநாத்தும், இளங்கோவனும் இணைந்து டைரக்ட் செய்தனர். பிற்காலத்தில் பிரபல டைரக்டராக புகழ் பெற்ற காசிலிங்கம் எடிட்டிங்கை கவனித்தார். எப்.நாகூர், கலை டைரக்டராகப் பணியாற்ற, மிகச்சிறந்த கேமராமேன் மார்க்ஸ் பார்ட்லே ஒளிப்பதிவு செய்தார். பாடல்களை சுந்தரவாத்தியாரும், கம்பதாசனும் எழுதினார்கள். இசை அமைப்பை எஸ்.வி.வெங்கட்ராமன் (பிற்காலத்தில் "மீரா'' படத்துக்கு இசை அமைத்தவர்) கவனித்தார்.
பெரும் எதிர்பார்ப்புடன் 16-10-1944-ல் (தீபாவளி) வெளிவந்த "மஹாமாயா'' எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. காரணம், "மஹாமாயா''வை "கண்ணகி''யுடன் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்த்ததுதான்! ("மஹாமாயா'' வெளிவந்த அதே தீபாவளி தினத்தில்தான், பாகவதரின் "ஹரிதாஸ்'' படமும் வெளிவந்து இமாலய வெற்றி பெற்றது.) தமிழ்த்திரை உலகில், சிறந்த வசனத்துக்கு முன்னோடி "இளங்கோவன்.''
இவருடைய இயற்பெயர் தணிகாசலம். "மணிக்கொடி'' இலக்கியப் பத்திரிகை மூலம் புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா போன்றவர்கள் புகழ் பெற்றபோது, இவரும் புகழ் பெற்றார். புதுமைப்பித்தனும், இளங்கோவனும் ஒரே காலக்கட்டத்தில் "தினமணி''யில் துணையாசிரியர்களாகப் பணியாற்றினர். 1931-ல் தமிழின் முதல் பேசும் படமான "காளிதாஸ்'' வெளிவந்தது.
அப்போது, சமஸ்கிருத சொற்கள் அதிகம் கலந்த மணிப்பிரவாள நடையில், வசனங்கள் எழுதப்பட்டன. 1937-ல் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த "அம்பிகாபதி'' படத்துக்கு, இளங்கோவன் முதன் முதலாக வசனம் எழுதினார். இலக்கிய நயம் மிக்க வசனம், முதன் முதலாகத் தமிழ்த்திரையில் ஒலித்தது. அதுமுதல், "சிறந்த வசனம் என்றால் இளங்கோவன்'' என்று பெயர் பெற்றார்."திருநீலகண்டர்'', "அசோக்குமார்'', "சிவகவி'' ஆகிய படங்களுக்கு சிறந்த முறையில் வசனம் எழுதிய இளங்கோவன், 1942-ல் "கண்ணகி'' படத்துக்கு வசனம் எழுதினார்.
இளங்கோவனின் அற்புத வசனங்களை சின்னப்பாவும், கண்ணாம்பாவும் பேசியபோது, ரசிகர்கள் மெய் சிலிர்த்தனர். குறிப்பாக, பாண்டியனின் அவையில், தன் கணவன் கள்வன் அல்ல என்று நிரூபிக்க கண்ணாம்பா பேசியபோது, இளங்கோவனின் வசனங்கள் சிகரத்தைத் தொட்டன.
பிறகு மஹாமாயா, ஹரிதாஸ், சுதர்சன் போன்ற படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதினார். பிற்காலத்தில், எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள்'' படத்துக்கு வசனம் எழுதினார். வசனத்தில் மன்னனாக விளங்கிய இளங்கோவன், இறுதிக்காலத்தில் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டார். இளங்கோவனின் வசனங்களை பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பாராட்டியுள்ளனர். "கண்ணகி''க்கு இளங்கோவன் எழுதிய வசனம், என்றென்றும் சிரஞ்சீவியாக வாழும்.
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான "வால்மீகி'' படத்தில், எம்.கே.தியாகராஜ பாகவதரும், யு.ஆர்.ஜீவரத்தினமும் இணைந்து நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் சிறை செல்ல நேரிட்டதால், அவருக்கு பதிலாக ஹொன்னப்ப பாகவதர் "வால்மீகி''யாக நடித்தார்.

ஜெமினி, ஏவி.எம்., மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகியவற்றுக்கு இணையாக, தமிழில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த நிறுவனம் "ஜுபிடர் பிக்சர்ஸ்.'' 1941-ம் ஆண்டு ஜுலை முதல் தேதி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொகிதீன் ஆகிய இருவரும் இதன் பங்குதாரர்கள்.
இவர்கள் 1926-ம் ஆண்டில் இருந்தே இணைபிரியாத நண்பர்கள். திருப்பூரில், தானிய வியாபாரம், ரைஸ் மில், இயந்திர சாமான்கள் விற்பனை, தேயிலை கம்பெனி என்று பல வியாபாரங்களில் ஈடுபட்டார்கள். திறமையாலும், கடும் உழைப்பாலும் முன்னேறினார்கள்.
இருவருக்குமே சினிமா தொழிலில் நாட்டம் உண்டு. 1935-ல் "ஸ்ரீசண்முகானந்தா டாக்கீஸ்'' என்ற படக்கம்பெனியை மற்றும் சிலருடன் சேர்ந்து தொடங்கி, "மேனகா'' என்ற படத்தை தயாரித்தனர்.
இந்தப் படத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள், எம்.எஸ்.விஜயாள், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர். ராஜா சாண்டோ டைரக்ட் செய்தார்.
இந்தப்படத்தில் இன்ஸ்பெக்டராக சோமுவும், டாக்டராக மொகைதீனும் நடித்தனர்.
"மேனகா'' வெற்றிப்படமாக அமைந்தது. எனினும், பங்குதாரர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், சோமுவும், மொகிதீனும் விலகி வேறு சிலருடன் சேர்ந்து "ஜுபிடர் பிக்சர்ஸ் லிமிடெட்'' என்ற கம்பெனியைத் தொடங்கினார்கள். "சந்திரகாந்தா'', "அனாதைப் பெண்'' என்ற படங்களைத் தயாரித்தார்கள்.
"சந்திரகாந்தா'' வெற்றிப் படம். இதில் காளி என்.ரத்தினம் போலிச் சாமியாராக பிரதான வேடத்தில் நடித்தார். பி.யு.சின்னப்பா சிறு வேடத்தில் நடித்தார்.
இதன்பின், பங்குதாரர்களுக்குள் தகராறு ஏற்படவே, சோமுவும், மொகிதீனும் விலகினார்கள். கொஞ்ச காலம் படத்தொழிலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்கள். தானிய வியாபாரத்தை மொகிதீன் கவனித்தார்.
சேலம் சண்முகா பிலிம்ஸ் கூட்டுறவுடன் "பூலோக ரம்பை'' என்ற படத்தை சோமு தயாரித்தார். இந்தப்படம் வெற்றி பெற்றது.
நண்பர்கள் இருவரும், மீண்டும் படத்தொழிலில் முழு மூச்சுடன் இறங்க முடிவு செய்தனர். 1941-ல் `ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனத்தை தொடங்கினர். முதல் படமாக "கண்ணகி''யைத் தயாரிக்க முடிவு செய்தனர்.
இப்படத்தில் கண்ணகியாக கண்ணாம்பாவும், கோவலனாக பி.யு.சின்னப்பாவும் நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நகைச்சுவை விருந்தளித்தனர். இளங்கோவன் அற்புதமாக வசனம் எழுதினார். `ஜ×பிடர்' சோமுவும் ஆர்.எஸ்.மணியும் டைரக்ட் செய்தனர்.
"கண்ணகி'' படம் மகத்தான வெற்றி பெற்றது.
பின்னர் "குபேரகுசேலா'', "மஹாமாயா'' ஆகிய படங்களை ஜுபிடர் எடுத்து, வெற்றிப்பயணத்தைத் தொடர்ந்தது.
1944-ம் ஆண்டில் ராயல் டாக்கீஸ் தயாரிப்பில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்'' படம் வெளிவந்து, இமாலய வெற்றி பெற்றது.
("ஹரிதாஸ்'', 1944 தீபாவளிக்கு வெளிவந்தது. சென்னை பிராட்வே தியேட்டரில் மொத்தம் 110 வாரங்கள் - அதாவது 768 நாட்கள் ஓடியது. 3 தீபாவளிகளைக் கண்ட படம்.)
"ஹரிதாஸ்'' படம் வெளிவருகிற வரை, ஒரு சமயத்தில் ஒரே படத்தில் நடிப்பது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார், பாகவதர். "ஹரிதாஸ்'' படத்தின் மகத்தான வெற்றியினால், பாகவதரை ஒப்பந்தம் செய்ய ஏராளமான பட அதிபர்கள் படையெடுத்தனர்.
சினிமா தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்ததால், ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. எனவே, 10 படங்களில் நடிக்க பாகவதர் ஒப்பந்தமானார்.
ஒரு நடிகர், 10 படங்களில் நடிக்க ஒரே சமயத்தில் ஒப்பந்தமானது, அக்காலக்கட்டத்தில் அகில இந்தியாவிலும் நடந்திராத அதிசயமாகும்.
பாகவதர் ஒப்பந்தமான படங்களில் ஜுபிடரின் "வால்மீகி''யும் ஒன்று.
கொள்ளைக்காரனாக இருந்து, பிறகு முனிவரானவர் வால்மீகி.
பாகவதருக்கு ஜோடியாக நடிக்க, நடிகை யு.ஆர்.ஜீவரத்தினம் ஒப்பந்தமானார். சொந்தமாக பாடி நடித்த ஒருசில நடிகைகளில் ஜீவரத்தினமும் ஒருவர். அவர் முதன் முதலாக பாகவதருடன் இணைந்து நடித்ததால், ரசிகர்களிடம் "வால்மீகி'' பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியது.டி.ஆர்.ராஜகுமாரி, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரும் இப்படத்திற்கு ஒப்பந்தம் ஆயினர்.
"வால்மீகி'' படப்பிடிப்பு தொடங்கியது. பாகவதரும், ஜீவரத்தினமும் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் "இந்து நேசன்'' என்ற மஞ்சள் பத்திரிகையின் ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாகவதர் 1944 டிசம்பர் 28-ந்தேதி கைது செய்யப்பட்டார். மறுநாள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைதானார். இரு பெரும் கலைஞர்கள் கைதானது கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.
பாகவதரும், கிருஷ்ணனும் விரைவில் விடுதலை ஆகி விடுவார்கள் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
பாகவதர் வந்து விடுவார் என்று கருதி, "வால்மீகி'' படப்பிடிப்பை சிறிது காலம் ஜுபிடர் நிறுவனம் நிறுத்தி வைத்தது. ஆனால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், வேறு வழியின்றி வால்மீகியாக ஹொன்னப்ப பாகவதரை நடிக்க வைத்து, படத்தை முடிக்க சோமுவும், மொகிதீனும் முடிவு செய்தனர்.
ஹொன்னப்ப பாகவதர், கன்னடத்தில் பிரபல நடிகர். சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்த "அம்பிகாவதி''யில் அரசவையில் பாடகராக கச்சேரி செய்வார்.
சொந்தக் குரலில் பாடி நடிப்பவர் என்ற முறையில், அவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் நடித்த "வால்மீகி'' 13-4-1946-ல் வெளிவந்து, ஓரளவு வெற்றிகரமாகவே ஓடியது.

ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த பல படங்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் பாடல்கள் எழுதியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன், மூன்று முகம், தங்க மகன், நல்லவனுக்கு நல்லவன், நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதினார். நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தில் பெரும்பான்மையான பாடல்களை எழுதியவர் முத்துலிங்கம்தான்.
"தங்கமகன்'' படத்தில் இவர் எழுதிய "வா... வா... பக்கம் பக்கம் வா!'' என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றதாகும்.
கமலஹாசன் நடித்து வெளிவந்த "விருமாண்டி'' படத்தின் பெரும்பாலான படங்களை முத்துலிங்கம் எழுதியுள்ளார்.
அதில் கமலஹாசன் பாடுவதுபோல் ஓர் பாடல்:
"மாட விளக்கே -யாரு உன்னைத்
தெருவோரம் சாத்துனா
மல்லிகைப் பூவை - யாரு இப்போ
வேலியிலே சூட்டுனா'' என்று ஆரம்பம் ஆகும் அந்தப் பாடல். அதில் சரணத்தில் "ஆறாக நீ ஓட, உதவாக்கரை நானே'' என்ற வரி வரும். அந்த "உதவாக்கரை'' என்ற சொல்லை பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பதை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
கமலஹாசன் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான "உணர்ச்சிகள்'' படத்திலும் முத்துலிங்கம் பாடல் எழுதியுள்ளார்.
"காக்கிச்சட்டை'' படத்தில் வரும் "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்'' என்ற பாடலும், "காதல் பரிசு'' படத்தில் வரும் "காதல் மகாராணி கவிதை பூ விரித்தாள்'' பாடலும் இவர் எழுதியவை.
தன்னுடைய திரையுலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.ஆர்.பாப்பா, சங்கர் கணேஷ், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, ஜெர்ரி அமல்தேவ், லட்சுமிகாந்த் பியாரிலால், மனோஜ் கியான், மரகதமணி, ஷியாம், அம்சலேகா, பாலபாரதி, சவுந்தர்யன் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களிடம் எழுதியிருக்கிறேன். இளையராஜா இசையில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை எழுதியிருந்தாலும், சில குறிப்பிட்ட பாடல்களை வாசகர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1. ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
(பயணங்கள் முடிவதில்லை)
2. மணி ஓசை கேட்டு எழுந்து - நெஞ்சில் ஆசை கோடி சுமந்து (பயணங்கள் முடிவதில்லை)
3. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் (உதய கீதம்)
4. கூட்டத்திலே கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா (இதயக்கோயில்)
5. ராகவனே ரமணா ரகுநாதா (இளமைக் காலங்கள்)
6. எம் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான்
(கோபுரங்கள் சாய்வதில்லை)
7. சின்னச்சின்ன ரோஜாப்பூவே செல்லக்கண்ணே நீ யாரு (பூவிழி வாசலிலே)
8. சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே (முந்தானை முடிச்சு)
9. ஆறும் அது ஆழமில்லை - அது சேரும் கடலும் ஆழமில்லை (முதல் வசந்தம்)
10. செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா (செந்தூரப்பூவே)
11. இதயம் போகுதே எனையே பிரிந்தே (புதிய வார்ப்புகள்)
12. டாடி டாடி ஓ மை டாடி (மவுன கீதங்கள்)
13. இதழில் கதை எழுதும் நேரமிது (உன்னால் முடியும் தம்பி)
14. தண்ணி கொஞ்சம் ஏறியிருக்கு கம்மாக் கரையிலே (ஜுலி கணபதி)
15. போடு தாளம் போடு - நாங்க பாடாத தெம்மாங்கு ஏது (புதுவசந்தம்)
16. கேக்கலையோ கேக்கலையோ கண்ணனது கானம் (கஸ்தூரி மான்)
எனக்கு ஒரே இடத்தில் அமர்ந்து எழுதினால் சிந்தனை வராது. நடந்து கொண்டேதான் சிந்திப்பேன். பெரும்பாலும் நான் நடந்து செல்வதற்கு காரணம் இதுதான். இல்லையென்றால் வீட்டில் மொட்டை மாடியில் சுருட்டுப் பிடித்துக்கொண்டே சிந்திப்பேன். இதுவரை ஆயிரத்து நானூற்றுப் பத்துப் பாடல்களை எழுதியிருக்கிறேன். இதில் நடந்து கொண்டும், சுருட்டு பிடித்துக்கொண்டும் எழுதிய பாடல்களில் இருநூற்றுப் பத்துப்பாடல்கள் ஹிட்டாகி இருக்கின்றன.
ஆனால் மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதும்போது நான்கு மணி நேரம் ஆனாலும் ஒரே இடத்தில் அமர்ந்து எழுதினால்தான் எழுத முடியும். அப்போதுதான் உதட்டசைவு, காட்சி, பாடக்கூடிய பாத்திரத்தின் இயல்பு இவற்றிற்கேற்ப எழுத இயலும். அப்படித்தான் நான் எழுதியிருக்கிறேன்.
இதில் ஆரூர்தாஸ் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழி மாற்றுப்படங்களில் ஐம்பத்தைந்து படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். என்னை எழுத வைத்தவர் அவர். என் நன்றிக்குரியவர்களில் அவரும் ஒருவர். அதுபோல் கே.ஏ.வி.கோவிந்தன், மருதபரணி, ரவிசங்கர் போன்றவர்கள் வசனம் எழுதிய பல மொழி மாற்றுப்படங்களுக்கும் எழுதியிருக்கிறேன்.''
இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.
முத்துலிங்கத்தின் மனைவி பெயர் லட்சுமி.
ஒரே மகள் மோகனவல்லி "எம்.எஸ்.சி'' பட்டதாரி.
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய திரைப்படப் பாடல்கள், "முத்துலிங்கம் திரை இசைப் பாடல்கள்'' என்ற பெயரில் 2 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மற்றும் "எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்'', "எம்.ஜி.ஆர். உலா'', "காற்றில் விதைத்த கருத்து'', "முத்துலிங்கம் கவிதைகள்'', "வெண்ணிலா'' உள்பட பல நூல்கள் எழுதியுள்ளார்.
ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான "எம்.ஜி.ஆர். கழகம்'', இவருக்கு "எம்.ஜி.ஆர். விருது'' ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளது.

"மீனவ நண்பன்'' படம் கடைசி கட்டப் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். கட்டளைப்படி கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சேர்க்கப்பட்டது.
இதுபற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-
"ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது "மீனவநண்பன்'' படத்திற்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், "இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எது?'' என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
"நான் எழுதவில்லை'' என்றேன். "ஏன்?'' என்றார். "என்னை யாரும் அழைக்கவில்லை'' என்றேன்.
அப்போது புரொடக்ஷன் மானேஜர் வந்தார். "முத்துலிங்கத்தை வைத்துப் பாடல் எழுதச் சொன்னேனே! ஏன் அதன்படி செய்யவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.
"நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை'' என்றார்.
"இப்போது வந்துவிட்டார் அல்லவா? இவரை வைத்து ஒரு பாடல் எழுதி வாருங்கள்'' என்றார். "படம் முடிந்து விட்டதே'' என்றார்.
உடனே, டைரக்டர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச்சொன்னார். அவர்கள் வந்ததும், "இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு கனவுக்காட்சி பாடலை எழுதுங்கள். அதற்குப்பிறகு படப்பிடிப்பு நடத்தலாம்'' என்றார்.
அவர்களும் புரொடக்ஷன் மானேஜர் சொன்னது மாதிரி "அதற்கான சிட்டுவேஷன் (சம்பவம்) இல்லையே'' என்றார்கள்.
"ட்ரீம் சீன் பாடலுக்கு என்ன சிட்டுவேஷன் வேண்டும்? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வருவதுதானே ட்ரீம்சாங்? அதற்குத் தனியாக என்ன சிட்டுவேஷன்? பாடல் எழுதுங்கள்; அதன் பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்'' என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
அதன்பிறகு நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலாக அமைந்தது.
"தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ - நீ
மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ''
என்ற பாடல்தான் அது.
இந்தப் படத்திற்குப் பாடல்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிந்திருந்தும் என்னை வைத்துப் பாடல் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஏன் கூறினார்? தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.''
இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் படங்களுக்கு மட்டுமின்றி, பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற டைரக்டர்கள் இயக்கிய முக்கிய படங்களுக்கும் கவிஞர் முத்துலிங்கம் பாடல் எழுதியுள்ளார்.
"16 வயதினிலே'' படத்துக்குப்பிறகு பாரதிராஜா உருவாக்கிய படம் "கிழக்கே போகும் ரெயில்'' (1978). ராதிகா - சுதாகர் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.
இந்தப் படத்தில் இடம் பெற்ற "மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ! வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ!'' என்ற பாட்டு, பெரிய சூப்பர் ஹிட் பாடலாகும். இதை எழுதியவர் முத்துலிங்கம்.
ஒன்றரை மணி நேரத்தில் இந்தப் பாடலை முத்துலிங்கம் எழுதி முடித்தார்.
1978-79-ம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை முத்துலிங்கத்திற்கு இந்தப் பாடல் பெற்றுத்தந்தது.
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா கமலா திரையரங்கில் நடைபெற்றபோது, இந்தப் பாடலைத் தாளம் போட்டுப் பாடி "இதைப்போல எங்கள் படங்களுக்குப் பாடல் போடக்கூடாதா?'' என்று இளையராஜாவைப் பார்த்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கேட்டார்.
எனக்குக் கேடயம் கொடுக்கும்போது என்னை முதுகில் தட்டி பாராட்டினார். இந்தப் பாடலை டைரக்டர் ஸ்ரீதர் மிகவும் பாராட்டியதாக இளையராஜா என்னிடம் கூறினார்.
காஞ்சிப் பட்டுடுத்தி...
இதைப்போல் `வயசுப் பொண்ணு' என்ற படத்தில் நான் எழுதிய
"காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் - அந்தத்
திருமகளும் உன்னழகைப் பெறவேண்டும்''
என்ற பாடலும் தமிழக அரசின் பாடலாசிரியருக்கான விருதை எனக்குப் பெற்றுத் தந்தது. இது முழுக்க முழுக்க நான் எழுதி, அதன் பிறகு மெட்டமைக்கப்பட்ட பாடல்.
நான் இரண்டு மணி நேரத்தில் எழுதிய இப்பாடலுக்கு முக்கால் மணி நேரத்தில் இசையமைத்தவர் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன். "காஞ்சிப் பட்டுடுத்தி'' என்ற வார்த்தையை வைத்துப் பாட்டைத் தொடங்கு என்று எனக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் அந்தப் படத்தின் இயக்குனர் கே.சங்கர். ஆனால் இந்தப்பாட்டை அந்தப் படத்தின் பைனான்சியர் சடையப்பச் செட்டியார் வேண்டாம் என்று முதலில் நிராகரித்துவிட்டார். "பாட்டில் வேகம் இல்லை. அதனால் வேண்டாம். வேறு பாட்டுப் போடுங்கள்'' என்றார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான் மிகவும் வலியுறுத்தி, "இந்தப் பாட்டைப் படத்தில் இடம் பெறச் செய்யுங்கள். நான் ஹிட் பண்ணிக்காட்டுகிறேன்'' என்றார். அதன் பிறகு செட்டியார் ஒப்புக்கொண்டார்.
அந்தப்படம் ஓடவில்லை. ஆனால் இந்தப் பாட்டுத்தான் அந்தப் படத்தின் பேர் சொல்லிக்கொண்டிருக்கிறது. சொன்னதுபோல் எம்.எஸ்.வி. அந்தப் பாடலை ஹிட்டாக்கினார்.
அதுபோல் "எங்க ஊரு ராசாத்தி'' என்ற படம் ஓடவில்லை. அந்தப் படத்தில் இடம் பெற்ற "பொன்மானைத்தேடி - நானும் பூவோடு வந்தேன்'' என்ற எனது பாடல்தான் படத்தின் பேரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகாத நாளே இல்லை என்று சொல்லும் வண்ணம் தொடர்ந்து ஒலிபரப்பினார்கள்.''

எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாட்டு எழுதி வந்த கவிஞர் முத்துலிங்கம், சிவாஜிகணேசன் படங்களுக்கும் பாட்டு எழுதினார். அதனால் பிரச்சினை ஏற்பட்டது.

இதுபற்றி கவிஞர் முத்துலிங்கம் கூறியிருப்பதாவது:-
"எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதியதுடன் வெளியார் படங்களுக்குப் பாட்டு எழுதினேன்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த சில படங்களுக்கும் எழுதியிருக்கிறேன்.
அதில் முதல் படம் கோமதிசங்கர் பிலிம்ஸ் சார்பில் குற்றாலிங்கம் தயாரித்த "ஊருக்கு ஒரு பிள்ளை'' என்ற படம். இதில் கண்ணதாசன்தான் முதல் பாடலை எழுதியிருந்தார். அந்தப் பாடலுக்குப் பதிலாக வேறு பாடல் எழுதவேண்டும் என்று கண்ணதாசனை அழைத்தபோது, அவர் மறுத்துவிட்டார். அதனால் என்னை அழைத்தார்கள்.
நான் சென்று எழுதினேன். எழுதிய பாடலை சிவாஜியிடம் அந்தப் படத்தின் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் சென்று காட்ட, "இந்தக் காட்சிக்கு இது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. இது யார் எழுதியது?'' என்று கேட்டிருக்கிறார். முத்துலிங்கம் என்று என் பெயரைச் சொல்லவும், "இவரை வைத்தே எல்லாப் பாடல்களையும் எழுதிவிடுங்கள்'' என்றாராம், சிவாஜி.
அதன்படி, அந்தப் படத்தின் நான்கு பாடல்களையும் நானே எழுதினேன்.
படம் வெளியான பிறகு இப்படத்திற்காக முதலில் நான் எழுதிய பாடலால் பெரிய பிரச்சினை வந்தது. அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியிருந்தது. அந்த நேரத்தில் இந்தப் பாடலைக்கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர். அலுவலகத்திலிருந்து "இது யார் எழுதியது?'' என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். கண்ணதாசனா, வாலியா என்றெல்லாம் விசாரித்ததில், அதை எழுதியது நான் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர். அந்தப் பாடலை மீண்டும் போட்டுக் கேட்டுவிட்டு, ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டாராம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை நான் சந்தித்தபோது, இதுபற்றி என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆர். கருத்துக்கு மாறாக எதையும் எழுதாதவன், பேசாதவன் நான் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் எழுதியிருக்க மாட்டேன். அந்தக் காட்சிக்கு ஏற்ப எழுதவேண்டும் என்று நினைத்து எழுதினேனே தவிர, வேறல்ல.
பிரச்சினைக்குரிய அந்தப்பாடல் இதுதான்.
"அட - ராஜாங்கம் - உன் அதிகாரம் - இன்னும்
எத்தனை நாளைக்கு நடக்கும்?
நாங்க - துணிஞ்சாலே உண்மை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்துச் சிரிக்கும்
நாங்க - கலங்கரை விளக்கு
நீங்க - களங்கத்தின் கணக்கு''
படம் தோல்வி அடைந்ததால், பாடல் குறித்து பெரிய அளவில் பிரச்சினை எழவில்லை.
"நாங்க கலங்கரை விளக்கு; நீங்க களங்கத்தின் கணக்கு'' என்ற வரிதான் என்னைக் காப்பாற்றி இருக்கும் என்று நினைக்கிறேன்.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது, "இதுதான் பதில்'' என்றொரு படத்தை அவரே தயாரித்து இயக்குவதாக இருந்தார். அப்போது அவரைப் பார்க்கச் சென்றேன்.
"படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை அமைக்கிறார். நாளை மறுநாள் பாட்டு எழுதவேண்டும். சத்யா ஸ்டூடியோவுக்கு காலை 8 மணிக்கு வந்து விடுங்கள்'' என்றார். அதன்படி நான் சென்றேன்.
எம்.எஸ்.வி. அவர்கள் போட்ட டிïனுக்கு நான் பல்லவி எழுதினேன்.
"வண்ணப் பூஞ்சோலை; வாழ்க்கை பொன் மேடை. வளமோடு நீ வாழலாம்'' என்று ஆரம்பமாகும் அந்தப் பாட்டு.
சரணத்திற்கான டிïனை மட்டும் வாசித்துக் காட்டுங்கள், என்றார், எம்.ஜி.ஆர். எம்.எஸ்.வி. வாசித்துக் காட்டினார். "இந்தப் பாடல் நாளைக்கு ரிக்கார்டிங் ஆகவேண்டும். அதனால் இன்று இரவு 10 மணிக்கே எனக்குப் பாடலை எழுதிக்காட்டு என்றார், எம்.ஜி.ஆர்.
இரவு 10 மணிக்கு எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ'', "விக்கிரமாதித்தன்'' முதலிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம்தாஸ் என் வீட்டிற்கு வந்து எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்குக் கூட்டிச்சென்றார். அங்கிருந்து தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம் சரணங்களைப் படித்துக் காட்டினேன். நான் எழுதியது சரியில்லை என்று சொல்லி அவரே சில கருத்துக்களைக் கூறினார். அதற்கேற்ப சரணங்களை எழுதி அவரிடம் வாசித்துக் காட்டி ஒப்புதல் பெற்றபோது இரவு இரண்டு மணி ஆகிவிட்டது.
மறுநாள் பாடல் ஒலிப்பதிவின்போது ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்திருந்து ஒலிப்பதிவு முடியும் வரை இருந்து பாடலை மிகவும் பாராட்டினார்.
எம்.ஜி.ஆர். சென்ற பிறகு டைரக்டர் நீலகண்டனிடம், "இந்தப் பாடலை பதிவு செய்தது வீண் வேலை'' என்றேன். `என்னய்யா இப்படிச் சொல்கிறாய்?'' என்று கேட்டார், நீலகண்டன்.
"ஆம். தேர்தல் அறிவிப்பு நாளையோ நாளை மறுநாளோ வரப்போகிறது. தேர்தலில் ஜெயித்து மீண்டும் தலைவர் ஆட்சிக்கு வரப்போகிறார். அதனால் இந்தப் படத்தில் அவர் நடிக்கப் போவதில்லை. அதனால் பாடலுக்காக செய்யும் செலவும் வீண்'' என்றேன்.
அதை எம்.ஜி.ஆரிடம் அப்போதே போய் அவர் சொல்லிவிட்டார்.
"முத்துலிங்கம் அப்படியா சொன்னார்? தேர்தல் வரும்போது வரட்டும். இப்போது வேலையைப் பார்ப்போம். நாளை சந்திப்போம்'' என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆனால், அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது!
படம் தயாரிப்பதை ஒத்திவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நான் சொன்னதைப் போலவே, அமோகமான வெற்றி பெற்று ஆட்சியில் மீண்டும் கம்பீரத்துடன் அமர்ந்தார். "இதுதான் பதில்.'' படம் கைவிடப்பட்டது.
அதற்குப் பிறகுதான், எனக்கு "கலைமாமணி விருது'', "பாரதி தாசன் விருது'' ஆகிய விருதுகளை வழங்கினார்.
அதற்குப் பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அதற்கடுத்து அரசவைக் கவிஞராகவும் என்னைப் பதவியில் அமர்த்தினார்.''
இவ்வாறு கூறினார், கவிஞர் முத்துலிங்கம்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த படங்களுக்கு பாடல் எழுதியவர், கவிஞர் முத்துலிங்கம்.

இவருடைய சொந்த ஊர் சிவகங்கை. பெற்றோர்: சுப்பையா சேர்வை - குஞ்சரம் அம்மாள்.
சிவகங்கையில் உள்ள அரசர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.
சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சுரதா நடத்திய "இலக்கியம்'' என்ற கவிதை இதழில், இவருடைய முதல் கவிதை பிரசுரமாயிற்று.
1958-ல் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்'' படம் வெளிவந்தது. அந்த படம் பற்றி, சுரதா ஒரு கவிதைப்போட்டி நடத்தினார். "நாடோடி மன்னன் போல் நல்ல திரைப்படமும் ஓடோடி வாரா உயர் தமிழில்...'' என்று தொடங்கும் கவிதை எழுதி பரிசு பெற்றார், முத்துலிங்கம்.
இந்தப் பாடலைப் பார்த்த முத்துலிங்கத்தின் நண்பர்கள், "கவிதை நன்றாக இருக்கிறது. சுரதா மூலம் எம்.ஜி.ஆரை சந்தித்தால், நீயும் சினிமாவுக்குப் பாடல் எழுதலாம்'' என்று கூறினார்கள். நண்பர்கள் கொடுத்த ஆர்வம்தான், திரைப்பட பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசையை முத்துலிங்கத்தின் உள்ளத்தில் வளரச் செய்தது.
படிப்பு முடிந்தது, திரைப்படக் கவிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் முத்துலிங்கம் சென்னைக்கு வந்தார். ஆனால், உடனடியாக அந்த ஆசை நிறைவேறவில்லையென்றாலும், "முரசொலி'' பத்திரிகையில் துணை ஆசிரியர் ஆனார்.
அப்போது கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்தக் கட்டத்தில், வசனகர்த்தா பாலமுருகனின் நட்பு கிடைத்தது. அவர் முயற்சியால், டைரக்டர் மாதவனுக்கு சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' என்ற படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு, முத்துலிங்கத்துக்கு கிடைத்தது.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது இளையராஜா அவரிடம் உதவி இசை அமைப்பாளராக இருந்தார்.
இளையராஜா போட்டுக்காட்டிய மெட்டுக்கு, முத்துலிங்கம் "தஞ்சாவூருச் சீமையிலே - கண்ணு தாவி வந்தேன் பொண்ணியம்மா'' என்ற பாடலை எழுதி, திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
இந்தப் படத்தில் சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா, விதுபாலா ஆகியோர் நடித்தனர். விஜயகுமாருக்கு இது முதல் படம்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி, அ.தி.மு.க.வை தொடங்கியபோது, முத்துலிங்கம் அ.தி.மு.க.வில் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்துக்கு முத்துலிங்கம் சென்றார். எம்.ஜி.ஆர். மாடியில் இருந்தார். அவருடன் `இன்டர்காம்' டெலிபோனில் முத்துலிங்கம் பேசினார்.
"நீங்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகிறீர்கள். மானேஜர் குஞ்சப்பனிடம் சொல்லி உங்களுக்குக் கொஞ்சம் பணம் தரச் சொல்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதற்கு முத்துலிங்கம், "பணம் வேண்டாம். எனக்கு வேலை கொடுங்கள்'' என்றார். "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறியும், முத்துலிங்கம் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.
முத்துலிங்கத்தின் மனதைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., தொடர்ந்து தன் படங்களில் பாட்டு எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த "உழைக்குமë கரங்கள்'' (1976) படத்துக்கு, முத்துலிங்கம் இரண்டு பாடல்கள் எழுதினார்.
"கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்'' என்று தொடங்கும் பாடலை வாணி ஜெயராம் பாடினார்.
"முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார்?'' என்று இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் எம்.ஜி.ஆர். கேட்டபோது, "முத்துலிங்கம் பாடலில் மீட்டரும் சரியாக இருக்கிறது; மேட்டரும் சரியாக இருக்கிறது'' என்றார், விஸ்வநாதன்.
எம்.ஜி.ஆர். நடித்த "இன்றுபோல் என்றும் வாழ்க'' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல் எழுதிக் கொண்டிருந்தார், முத்துலிங்கம். "ஏர்கண்டிஷன்'' அறையில் அவருக்கு சிந்தனையோட்டம் தடைபட்டது. எனவே, அறைக்கு வெளியே வந்து, அங்கிருந்த சவுக்குக் கன்றுகளை தொட்டபடி, பாடலுக்கான கருத்தை சிந்தித்துக் கொண்டே நடந்தார்.
அதைப்பார்த்த பட அதிபர், "என்னய்யா இவன்! மரத்தைப் பிடிக்கிறான், மட்டையைப் பிடிக்கிறான்! பல்லவியை படிக்கமாட்டேன் என்கிறானே!'' என்று கூறினார்.
இது, முத்துலிங்கத்தின் காதில் விழுந்தது. "ஆம். நான் அதைப் பிடிப்பேன், இதைப்பிடிப்பேன். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து, உங்களுக்குப் பிடித்தபடி பல்லவியை எழுதிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு, கோபமாக வெளியேறினார்.
பின்னர் டைரக்டர் கே.சங்கரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் அவரை சமாதானப்படுத்தினார்கள். "சினிமா உலகில், பலரும், பலவிதமாகப் பேசுவார்கள். அதற்காகக் கோபப்பட்டால் முன்னுக்கு வரமுடியாது. பாடல் எழுதுவதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்'' என்றார்கள்.
அதன்பின் முத்துலிங்கம் எழுதிய பாட்டு, "சூப்பர்ஹிட்'' பாடலாக அமைந்தது.
அன்புக்கு நானடிமை - தமிழ்ப் பண்புக்கு நானடிமை - நல்ல கொள்கைக்கு நானடிமை - தொண்டர் கூட்டத்தில் நானடிமை - இதுவே அந்தப் பாடல்.
எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். இசைக்கேற்றபடி கருத்துக்கள் வரவில்லையென்று கருதினால், பாடலை எழுதச்சொல்லி அதற்கேற்ப மெட்டமைக்கச் சொல்வார்.
``மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' படத்திற்குப் பாடல் எழுதும்போது, ஒரு காட்சிக்கான பாடலை, அவருக்கு மன நிறைவு ஏற்படும்வரை எழுத பலநாட்களாகி விட்டன.
"இதில் கவித்துவம் இருக்கிறது; கருத்துக்கள் இல்லை. இதில் கருத்துக்கள் இருந்தாலும், வன்முறையைத் தூண்டுவதுபோல் இருக்கிறது. இதில் எல்லாம் இருக்கிறது என்றாலும், நான் நினைப்பது போல் இல்லை'' என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் குறை கூறிக் கொண்டே இருந்தார். `நான் நினைப்பதுபோல் இல்லை'யென்றால், என்ன நினைக்கிறார் என்று அவர் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லமாட்டார்.
அவர் சொல்லாமலேயே அவர் நினைப்பதை யார் புரிந்து கொண்டு எழுதுகிறார்களோ அவர்கள்தான் அவர் படத்தில் தொடர்ந்து பாடல்கள் எழுதமுடியும். அப்படிப் புரிந்து கொண்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்.
ஒரு நாள் அந்தப் படத்திற்குப் பாடல் எழுத வேண்டிய அந்தக் காட்சிக்கு சில மெட்டுக்களைப் போட்டு அதற்குப் பல்லவியும், அனுபல்லவியும் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள் என்னை எழுதச் சொன்னார். எழுதிய பிறகு அதை `டேப்'பில் அவரே பாடிப் பதிவு செய்து, மைசூரில் இதே படத்திற்காகப் படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று காண்பித்து ஒப்புதல் வாங்கி வாருங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார்.
அதை எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு "எல்லாமே நன்றாக இருக்கிறது. இதை இப்படியே ஒரு பாட்டாக்கி ஒலிப்பதிவு செய்து விடுங்கள்'' என்றார். அந்தப்பாடல் இதுதான்:
"தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்''
இந்தப் பாடல், உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்பக்கூடிய பாடல். அதே நேரம், இலங்கை வானொலியில் 1983-க்குப்பிறகு தடை செய்யப்பட்ட பாடல்! இந்தப்பாட்டின் இறுதியில் "வீரம் உண்டு வெற்றி உண்டு; விளையாடும் களம் இங்கே உண்டு; வா வா என் தோழா; பூனைகள் இனம் போலப் பதுங்குதல் இழிவாகும்; புலியினம் நீயெனில் பொருதிட வாராய்'' என்று எழுச்சியோடு சில வரிகள் வரும்.
இதனால் தடை போட்டார்களோ என்னவோ தெரியவில்லை.''