என் மலர்
சினி வரலாறு
கோவைத் தம்பி தயாரித்த "பயணங்கள் முடிவதில்லை'' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். "குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.
கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.
1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவியூ தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது. `கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.
இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:
"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார். பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.
எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன். அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.
சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நின்றது. செக்யூரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன். "இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.
என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன். தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன். என் இரண்டாவது படத்தை, மணிவண்ணன் டைரக்ஷனில் தயாரித்தேன். "இளமைக் காலங்கள்'' என்பது, படத்தின் பெயர். மோகனும், சசிகலாவும் நடித்தார்கள். 18-8-1983-ல் படம் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றிப்படம்தான். 200 நாட்கள் ஓடியது.
இரண்டாவது படமும் வெற்றிப்படமாக அமைந்ததால், கலைத்துறையில் எனது ஈடுபாடு அதிகமாகியது. அடுத்த படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.
முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' டைரக்ட் செய்து பெரும் வெற்றியடைய வைத்த டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் சிவகுமார் - அம்பிகா ஆகியோரை வைத்து "நான் பாடும் பாடல்'' என்ற படத்தைத் தயாரித்தேன். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரில் எடுத்தோம். இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை சுந்தர்ராஜன் வைத்திருந்ததால் எதை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது.
எந்த "கிளைமாக்சை'' வைத்துக் கொள்வது என்று நானும் சுந்தர்ராஜனும் கடும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தோம். கதாநாயகி அம்பிகா இறப்பது போல அமைந்தது ஒரு கிளைமாக்ஸ். சிவகுமார் தொட்டு பொட்டு வைத்த நெற்றியை அம்பிகாவே நெருப்புக்கட்டையை எடுத்து சூடு வைத்துக் கொள்வது போல மற்றொரு கிளைமாக்ஸ்.
இரண்டு கிளைமாக்ஸ்களில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதால், ரீ ரிக்கார்டிங் செய்யும்போது இசையமைப்பாளர் இளையராஜா முடிவிற்கே விட்டு விடுவோம் என்று இருவரும் தீர்மானித்தோம்.
அப்படி இளையராஜா தேர்ந்தெடுத்த கிளைமாக்ஸ்தான் `நான் பாடும் பாடல்' கிளைமாக்ஸ். சிவகுமார் பொட்டு வைத்த நெற்றியை அம்பிகா - தானே சுட்டுக்கொள்வது போன்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியால் படம் சக்கை போடு போட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, மதர்லேண்ட் பிக்சர்ஸ் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.''
பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.

கோவைத் தம்பியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தெலுங்குபாளையம். 1940 நவம்பர் 28-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் உடையார். தாயார் சுந்தாயி அம்மாள். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கோவைத்தம்பி, எப்படி அரசியல்வாதியாகவும், பட அதிபராகவும் ஆகமுடிந்தது?
அவரே கூறுகிறார்:
"கிராமத்தில், கோவணம் கட்டிக்கொண்டு, எருமை மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த என்னை, கோபுரத்தின் உச்சியில் உட்கார வைத்தது திராவிட இயக்கமும், எம்.ஜி.ஆரும்தான். 1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த "மலைக்கள்ளன்'' படம் வெளிவந்தது. அப்போது, கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் பள்ளியின் மாணவர் மன்றத்தில், "கலையும் நாமும்'' என்ற தலைப்பில் பேச எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார். அவரை நேரில் பார்த்த அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அவர் அழகு, நடை-உடை-பாவனை, பேச்சு அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவருடைய மேடைப் பேச்சு என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆர்வத்துடன் சென்று அந்தத் தலைவர்களின் பேச்சை கேட்டேன். அதனால்தான், பள்ளிப் பருவத்திலேயே, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளைப் பெற்றேன். கலைஞரின் பேச்சும், எழுத்தும், சினிமா வசனங்களும், எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களும் என் உள்ளத்தில் கலை உணர்வைத் தூண்டின. நானே பல நாடகங்களை உருவாக்கி, வசனம் எழுதி மேடைகளில் நடித்து வந்தேன்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டு, அவர் அ.தி.மு.க.வை தொடங்கியபோது, நானும் அவர் கட்சியில் ஐக்கியமானேன். சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்தபோது, 1981-ல் கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என்னை அணுகி, "எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதை நீங்கள் சினிமாப்படமாகத் தயாரித்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார்கள். அந்த இளைஞர்கள்தான் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனும், துணை இயக்குனர் சிறுமுகை ரவியும். "பொது வாழ்வுக்கு வந்து விட்டதால், சினிமா தயாரிக்கலாமா?'' என்று முதலில் தயங்கினேன். பிறகு சம்மதித்தேன்.
பொதுவாக, அந்தக் காலக் கட்டத்தில் என் எண்ணங்களை அண்ணன் அரங்கநாயகத்திடம் (முன்னாள் அமைச்சர்) கலந்து பேசிய பிறகுதான் முடிவு எடுப்பது வழக்கம். எனவே, சுந்தர்ராஜன் என்னிடம் கதையை கூறியதும், அதை அரங்கநாயகத்திடம் கூறும்படியும், அவர் முடிவை ஏற்பதாகவும் தெரிவித்தேன். அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்து கதையைக் கூறினார், சுந்தர்ராஜன். "கதை நன்றாக இருக்கிறது. தாராளமாகப் படம் தயாரிக்கலாம்'' என்று அரங்கநாயகம் தெரிவித்தார்.
இதன் பிறகு "மதர்லாண்ட் பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தை தொடங்கினேன். படத்தை ஆர்.சுந்தர்ராஜனே டைரக்ட் செய்வது என்று முடிவாயிற்று. படத்திற்கு "பயணங்கள் முடிவதில்லை'' என்று பெயர் சூட்டினோம். இந்தப்படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாகையால், இளையராஜா இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சுந்தர்ராஜனையும் அழைத்துக்கொண்டு, இளையராஜாவை சந்திக்கச் சென்றேன்.
பிரசாத் ஸ்டூடியோவில் அவரை சந்தித்து, "பயணங்கள் முடிவதில்லை என்ற பெயரில் படம் தயாரிக்கப்போகிறேன். அதற்கு நீங்கள் இசை அமைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன். "முழுக் கதையையும் எனக்கு கூறுங்கள். கதைப் பிடித்திருந்தால்தான் இசை அமைப்பேன். கதை பிடிக்காவிட்டால், நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் இசை அமைக்க மாட்டேன்'' என்றார், இளையராஜா.
மறுநாள் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் கருத்துடன் சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று இளையராஜா கேட்டார். "அரைமணி நேரம் போதும்'' என்று சொன்னார், சுந்தர்ராஜன். கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார்.
கதையை கேட்டு முடித்ததும், "இந்தப் படத்திற்கு நான் இசை அமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என்று இளையராஜா கூறினார். அவர் கூறியபடி, மறுநாள் இசை அமைக்க ஏற்பாடு செய்தோம். 12 மணி நேரத்தில் 30 டியூன்கள் போட்டார், இளையராஜா. "இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
"நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டியூன்களை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்ததுதான் பயணங்கள் முடிவதில்லை படப்பாடல்கள்.
"பயணங்கள் முடிவதில்லை'' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்த எண்ணினோம். ஆனால் நான் அரசியல்வாதி என்பதாலும், டைரக்டர் புதியவர் என்பதாலும் யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் வெளிவந்திருந்தது. அதில் மோகனின் தோற்றமும், நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தன. அவரை கதாநாயகனாகப் போட நானும், சுந்தர்ராஜனும் தீர்மானித்தோம். அவரை அணுகியபோது, "கதையைக் கேட்டபிறகு, என் முடிவை சொல்கிறேன்'' என்றார்.
கதையைக் கேட்டதும், "கதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த சமயத்தில், "மஞ்சவிரிச்ச பூக்கள்'' என்ற மலையாளப்படம் சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடித்த பூர்ணிமாவை (பின்னாளில் பூர்ணிமா பாக்கியராஜ்) கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தோம்.
ரூ.13 லட்சம் செலவில், நான்கே மாதங்களில் "பயணங்கள் முடிவதில்லை'' தயாராகிவிட்டது. 26-2-1982-ல் படம் ரிலீஸ் ஆகியது. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் நூறு நாட்கள் ஓடிய இப்படம், முக்கிய நகரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
சென்னையில் லிட்டில் ஆனந்த் தியேட்டரில் 425 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது. இந்த ஒரே படத்தின் மூலம், நான் முன்னணி படத் தயாரிப்பாளர்களின் வரிசைக்கு உயர்த்தப்பட்டேன்.''
இவ்வாறு கூறினார், கோவைத்தம்பி.
ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நிராகரித்த நாடகத்தை, சிவாஜிகணேசன் ஏற்று நாடகமாக நடித்தார். பிறகு சினிமாவாகவும் எடுத்தார். அதுதான் மகத்தான வெற்றி பெற்ற "வியட்நாம் வீடு
ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நிராகரித்த நாடகத்தை, சிவாஜிகணேசன் ஏற்று நாடகமாக நடித்தார். பிறகு சினிமாவாகவும் எடுத்தார். அதுதான் மகத்தான வெற்றி பெற்ற "வியட்நாம் வீடு.''
ஒய்.ஜி.பி.யின் நாடகக் குழுவில் நடித்தவர்களில் பலர், பிறகு சினிமாவில் புகழ் பெற்றார்கள். நடிகை லட்சுமி இந்தக் குழுவில் நடித்தவர்தான்.
இந்த நாடகக் குழுவின் "கண்ணன் வந்தான்'' நாடகம்தான் சிவாஜியின் நடிப்பில் "கவுரவம்'' என்ற பெயரில் படமாக வந்தது. அதில் உஷா நந்தினியும், ரமா பிரபாவும் நடித்த இரு வேடங்களையும், நாடகத்தில் லட்சுமி ஒருவரே செய்தார்.
இன்றும், மகேந்திரனிடம் "வாடா போடா'' என்று உரிமையுடன் பேசக்கூடியவர், லட்சுமி மட்டுமே.
"வியட்நாம் வீடு'' சுந்தரம், இந்த நாடகக் குழுவில், நாடக உதவியாளராக தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர்.
அவர் முதலில் எழுதிய நாடகத்தை மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி படித்து விட்டு, "நிறைய பிராமண வாடை வீசுகிறது'' என்று கூறி, திருப்பிக் கொடுத்து விட்டார். அதை சிவாஜியிடம் சுந்தரம் கொடுக்க, அவர் அதை "வியட்நாம் வீடு'' என்ற பெயரில் முதலில் நாடகமாக நடத்தி, பிறகு சினிமாவாகவும் எடுத்தார். "பிரஸ்டீஜ்'' பத்மநாபன் ரோல், சிவாஜியின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது.
வெறும் சுந்தரம், "வியட்நாம் வீடு'' சுந்தரம் ஆனார்.
நாடகத்தில், எல்லாவிதமான கேரக்டர்களையும் மகேந்திரன் நடித்துள்ளார். வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "ரூபாய்க்கு மூன்று கொலை'' என்ற நாடகத்தில், ஆல்பிரெட் அண்டு சுப்பு என்ற இரட்டை வேடங்களை மேடையில் நடித்துக்காட்டி அசத்துவார்.
இன்று `புதுமை' என்று கருதப்படுகிற சில விஷயங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார், மகேந்திரன். "சக்தி'' என்ற நாடகத்தை சுழல் மேடையில் நடத்தினார். அதில் பார்வையற்ற பெண்ணாக, மகேந்திரனின் மகள் மதுவந்தி நடித்தார். அந்த நாடகத்தைப் பார்த்த பாலசந்தர், அவர் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். "கண்ணற்ற பெண்ணின் நடிப்பை கண்ணாலேயே காட்டிவிட்டாய்!'' என்று கூறினார்.
ஆரம்பத்தில் மகேந்திரன் நாடகங்களை ஒய்.ஜி.பார்த்தசாரதியும், பட்டுவும் டைரக்ட் செய்தனர். பிறகு ஏ.ஆர்.எஸ்.டைரக்ட் செய்தார். "ரகசியம் பரமரகசியம்'' முதல் இன்று வரை அவர் நாடகங்களை அவரே டைரக்ட் செய்து வருகிறார்.
மகேந்திரனின் நாடகக் குழுவில் "சோ''வும் நடித்திருக்கிறார். "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமானபோது, நாடகத்தில் செய்த அதே "மெக்கானிக்'' ரோலை படத்திலும் அவர்தான் செய்ய வேண்டும் என்று சிவாஜி கூற, அதன்படி நடித்தார், "சோ.'' அவருடைய அந்த முதல் படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து படங்களில் நடித்தார்.
ஒருமுறை, "ரகசியம் பரம ரகசியம்'' நாடகத்துக்கு கவிஞர் கண்ணதாசன் திடீரென்று வந்தார். நாடகத்தைப் பார்த்துவிட்டு, "ரொம்ப நாளைக்குப் பிறகு, என்.எஸ்.கே. தரத்தில் ஒரு நாடகத்தைப் பார்த்தேன்'' என்று பாராட்டினார்.
பூரித்துப்போனார், மகேந்திரன்.
மகேந்திரனின் நாடகக்குழு (ï.ஏ.ஏ.) கடந்த 54 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து 54 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரே நாடகக்குழு இதுதான்.
"எந்த சூழ்நிலையிலும் நாடகம் போடுவதை நிறுத்துவதில்லை'' என்று மகேந்திரனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார், அப்பா ஒய்.ஜி.பி. எனவே, இந்த நாடகக் குழுவின் கலைப்பயணம் இன்னும் தொடருகிறது. "என்றும் தொடரும்'' என்று உறுதியுடன் கூறுகிறார், மகேந்திரன்.
தனியார் சேனல்கள் வராதபோது, முதன் முதலில் சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நாடகம் "வாலிபம் திரும்பினால்.'' இதில் ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தார்கள். இது, வெங்கட் எழுதிய நாடகம்.
சின்னத்திரையில் மகேந்திரன் நடிக்கத் தொடங்கி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தனியார் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்களில் நடித்திருக்கிறார். "எனக்குள் அவன்'', "மிஸ்டர் பிரைன்'' போன்ற தொடர்களைத் தயாரித்தார். "ருத்ரவீணை'', "சிதம்பர ரகசியம்'' முதலான தொடர்களில் நடித்தார்.
திரைப்படத் துறையிலும், மகேந்திரனின் பயணம் தொடருகிறது.
அவருடைய 200-வது படம் "தாலிதானம்.'' நிஜ வாழ்க்கையில் அண்ணன் - தங்கை போல பாசம் கொண்டுள்ள மகேந்திரனும், லட்சுமியும் அதே பாசத்தை வெளிப்படுத்தி, அற்புதமாக நடித்த படம் இது.
"ஜாம்பவான்'' படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ள மகேந்திரன், "அடாவடி'' படத்தில் சத்யராஜின் அப்பாவாக நடிக்கிறார்.
"ஸ்ருங்காரா'' என்ற ஆர்ட் படத்தில், கோவில் குருக்கள் வேடம். "பெரியார்'' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
`சித்ராலயா' கோபுவின் வாரிசான சித்ராலயா ஸ்ரீராம், மகேந்திரன் குழுவுக்கு எழுதிய "காதலிக்க நேரமுண்டு'' சினிமாவாகப் போகிறது.
ஸ்ரீராம் எழுதிய மற்றொரு நாடகம் "தந்திரமுகி.'' அது, மகேந்திரனின் சமீபத்திய வெற்றி நாடகம்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மைத்துனி லதாவை `சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இதனால் இருவரும் சகலைகள் ஆனார்கள்.

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' படத்தில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தார். முக்கிய வேடத்தில், மகேந்திரன் நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. ரஜினியும், மகேந்திரனும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி இதழுக்காக, அவர் ரஜினியை பேட்டி காண விரும்பினார்.
அப்போது, "தில்லுமுல்லு'' படப்பிடிப்பில் ரஜினி இருந்தார். லதாவை அங்கே மகேந்திரன் அழைத்துச் சென்றார். லதா கேட்ட கேள்விகளுக்கு ரஜினி பதில் அளித்தார்.
லதாவை ரஜினி பார்த்துப் பேசியது சில நிமிடங்கள்தான் என்றாலும், அவர் மனதில் லதா குடியேறி விட்டார்.
மறுநாள், மகேந்திரனுக்கு ரஜினி போன் செய்தார். "மகேந்திரன்! நான் லதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
ரஜினி குறிப்பிடும் லதா யார் என்பதைப் புரிந்து கொள்ளாத மகேந்திரன், "என்னப்பா! அவுங்க உனக்கு சீனியர் நடிகை. எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் எல்லாம் நடித்தவர். அவங்களைப்போய்...'' என்று இழுக்க, ரஜினி குறுக்கிட்டார். "நான் சொல்வது நடிகை லதாவை அல்ல. என்னை பேட்டி காண வந்த உன் மைத்துனி லதாவை!'' என்றார்.
மகேந்திரனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. என்றாலும் தமாஷாக, "என்னய்யா! அடிமடியில் கை வைக்கிறே!'' என்றார்.
பதிலுக்கு சிரித்த ரஜினி, "எனக்கு ஏற்ற பெண் லதாதான்'' என்று உறுதியாக சொன்னார்.
பிறகு இரு வீட்டாரும் திருமணப்பேச்சு நடத்தினார்கள். ரஜினி - லதா திருமணம் திருப்பதியில் நடந்தது.
ரஜினிகாந்திடம் மட்டுமல்லாமல், கமலஹாசனிடமும் நெருக்கமானவர் மகேந்திரன்.
கமலஹாசனுடன் மகேந்திரன் நடித்த "குரு'' படம், அவருடைய சிறந்த காமெடிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு, மிகச்சிறந்த நடிகராக நான் மதிப்பது கமலஹாசனைத்தான். மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
நாடக நாட்களில் நாங்கள் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடுவோம். ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்குப்போவோம்.
கமலின் "ராஜபார்வை''யில் நான் நடித்தபோது, என்னை ஒரு துணை டைரக்டர் போல நடத்தினார்; பல பொறுப்புகளைக் கொடுத்தார்.
கமலஹாசன் ஒருநாள் எனக்கு போன் செய்தார். போனை என் அப்பா எடுத்தார்.
என் அப்பாவுக்கு ஒரு வழக்கம். அன்பு ரொம்பவும் அதிகமாகிவிட்டால், கொஞ்சிப் பேசுவதுடன் சில அசைவ வார்த்தைகளையும் கூறுவார். "நான் கமல் பேசறேன்'' என்று அவர் சொன்னதும், "என்ன கண்ணா, எப்படி இருக்கே! என் ராஜா! உன்னை எப்ப பார்க்கலாம் கண்ணா!'' என்று பேச ஆரம்பித்து விட்டார். கமல் உடனே, "ராங் நம்பர்'' என்று கூறி, போனை வைத்து விட்டார்.
சற்று நேரம் கழித்து மீண்டும் கமல் போன் செய்ய, நான் எடுத்தேன். "ராங் நம்பர்'' என்று கூறி போனை வைத்தது ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்க அப்பா ராஜா, கண்ணா என்றெல்லாம் இதற்கு முன் என்னிடம் பேசியது கிடையாது. அதனால் போனை வைத்து விட்டேன்'' என்று கமல் கூறினார்.
"அவருக்கு அன்பு அதிகமாகி விட்டால் இப்படியெல்லாம் பேசுவார். இன்னும் அதிகமாகவும் பேசுவார்!'' என்று நான் சொன்னேன்.
சினிமாவில் நடிக்கும்போது, எல்லா நடிகர்களுடனும் இயல்பாக நடித்து விடுவேன். ஆனால், "தசாவதாரம்'' படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நடித்தபோது கொஞ்சம் பயம் ஏற்பட்டது. வசனம் பேசும்போது தடுமாறினேன். சில வசனங்களை மறந்து விட்டேன்.
உடனே ராதா, "என்னப்பா! ஒய்.ஜி.பி. மவனே! என்னைப் பார்த்து ஏன் பயப்படுறே! உங்கப்பாவும் நானும் நல்ல நண்பர்கள், தெரியுமா?'' என்று கூறினார்.
எம்.ஆர்.ராதாவின் "ரத்தக்கண்ணீர்'' நாடகத்தை முதன் முதலாக மைலாப்பூரில், பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் நடத்தியவர் என் அப்பா. தைரியமாக இப்படி நாடகம் போட்டதற்காக என் அப்பாவைப் பாராட்டிய ராதா, "யோவ்... நீ பூணூல் போட்ட எம்.ஆர்.ராதா!'' என்று கூறினார்.
இந்த நட்பு, அடுத்த தலைமுறையிலும் தொடருகிறது. என் நாடகக் குழுவில் நடித்த ராதாரவி, இன்று என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.
என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். "நாடோடி மன்னன்'' படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை' சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார்.
நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நìலையம்) அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன.
ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
"கலங்கரை விளக்கம்'' படத்தில், "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும். என்னுடைய "நலந்தானா'' நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன்.
"நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு'' என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர்.
ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
"இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்'' என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.
"அந்த ஜோக் அவசியம் வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்'' என்று கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், சித்தி வித்யாவும் என் தந்தையின் நாடகக் குழுவில் நடித்திருக் கிறார்கள்.
ஜெயலலிதா என்னைவிட 2 வயது மூத்தவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பழகியவர். ஒருபுறம் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும்போது, நாங்கள் இன்னொரு புறம் விளையாடிக் கொண்டு இருப்போம். அன்பான மூத்த சகோதரி அவர்.
எனக்கு உடன் பிறந்தவர் ராஜேந்திரா என்ற ஒரு சகோதரன் மட்டுமே. சகோதரி இல்லாத குறையைத் தீர்த்தவர் ஜெயலலிதா. படிப்பறிவும், அறிவாற்றலும் மிக்கவர். மெட்ரிகுலேஷன் பரீட்சையில் மாநிலத்தில் இரண்டாவது மாணவியாக பாஸ் செய்தார். அவருடைய `நோட்ஸ்'களை வாங்கிப் படித்ததால், நானும் மாநிலத்தில் 4-வது மாணவனாகத் தேறினேன்.
சகோதரி ஜெயலலிதா பிரபல நட்சத்திரமான பிறகு அவர் படங்களை நாங்கள் பார்த்துவிட்டு, எங்கள் கருத்துக்களைச் சொல்வோம்.
ஒருமுறை பேச்சுவாக்கில், அவருடைய முதல் படமான "வெண்ணிற ஆடை''யை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டேன். அப்போது, வெண்ணிற ஆடை 3-வது முறையாக ரிலீஸ் ஆகி `லிபர்டி' தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.
எனக்கு அங்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்து, அப்படத்தைப் பார்க்கச் செய்து, பிறகு படத்தைப்பற்றி என் கருத்தைக் கேட்டறிந்தார்.
இன்றைய முதல்-அமைச்சர் கலைஞரோடு எனக்கு நெருக்கம் அவ்வளவாக இருந்தது இல்லை. எனினும், "பராசக்தி'', "திரும்பிப்பார்'' வசனங்களை பலமுறை கேட்டு ரசித்தவன்.
1989-ல், மூப்பனார் மீதிருந்த அபிமானத்தின் காரணமாக, அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, முதன் முதலாக அரசியலில் இறங்கி, காங்கிரசுக்கு பிரசாரம் செய்தேன். அந்தத் தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
ஊட்டியில் அரசு நடத்தும் மலர்க் கண்காட்சியில், நான் தவறாமல் நாடகம் நடத்துவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில், அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை நடைபெறுவதால், நாடகம் ரத்து செய்யப்படுவதாக எனக்குத் தெரிவித்தார்கள்.
நான் அரங்குக்கு சென்று பார்த்தபோது, அங்கு அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை எதுவும் நடைபெறவில்லை. நாடகத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திருமëபிச்சென்றனர்.
நான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, கலைஞருக்கு காரசாரமாக ஒரு கடிதம் எழுதினேன். "காங்கிரசுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஒரே காரணத்துக்காக எங்கள் நாடகத்தை ரத்து செய்தது அநியாயம். கலைஞர் முதல்வராக இருக்கும்போது, என் போன்ற கலைஞர்களுக்கு அநீதி நடக்கலாமா?'' என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.
பிறகு அப்படி ஒரு கடிதம் எழுதியதையே மறந்து விட்டேன்.
ஒரு மாதம் கழித்து, கலைஞரிடம் இருந்து பதில் வந்தது. "தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உதகமண்டலம் கோடை விழாவில் தங்களின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மூலமாக விளக்கம் கேட்க கூறியுள்ளேன். இதுபோன்ற அரசு விழாக்களில் பலபேரை திருப்தி செய்ய வேண்டிய நெருக்கடி ஒரு சில அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுவதால், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் தவறு நேர்ந்திருக்கலாம். எனினும், இதனை பெரிதாக மனதில் கொள்ள வேண்டாம். இனி இதுபோல் நடக்காது'' என்று கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தார், கலைஞர். அதுமட்டுமின்றி, மற்ற அரசு விழாக்களில் நான் நாடகம் நடத்தவும் அனுமதி அளித்தார்.
என்னை ஒரு பொருட்டாக எண்ணி கலைஞர் தன் கைப்பட கடிதம் எழுதியது கண்டு நெகிழ்ந்தேன். அவர் எழுதிய கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
குறைகளை உடனுக்குடன் கவனிப்பதால்தான், சகல தரப்பு மக்களையும் அவர் தன் பக்கம் வைத்திருக்க முடிகிறது என்பது என் கருத்து.''

ஒய்.ஜி.மகேந்திரனின் வாழ்க்கையே, நாடகத்துடன் இரண்டறக் கலந்தது. எனவே, அவருடைய திருமணத்துக்கும் நாடகமே உதவியது.

மகேந்திரனின் பிரபலமான நாடகம் "பிளைட் 172.'' அந்த நாடகம் நடைபெறுகிறபோதெல்லாம், ஒரு பெண் தவறாமல் ஆஜராகி விடுவார்.
அந்தப் பெண்ணின் பெயர் சுதா. ஒரு நாள் அவர் மகேந்திரனை சந்தித்து, "இந்த நாடகத்தை நான் தினமும் பார்ப்பது உங்களுக்காகத்தான்'' என்றார்.
அன்று பூத்த மகேந்திரன் - சுதா காதல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது.
சுதாவின் தம்பி ரவிராகவேந்தர், நடிப்புத்திறமை உள்ளவர். "இவர் நன்றாக நடிப்பார் அப்பா'' என்று அவரை தன் தந்தை ஒய்.ஜி.பி.யிடம் அறிமுகப்படுத்தினார், மகேந்திரன். இதன் விளைவாக ராகவேந்தருக்கு நல்ல நல்ல வேடங்கள் கிடைக்கலாயின. ஏற்கனவே மகேந்திரன் மீது சுதா கொண்டிருந்த அன்பு மேலும் அதிகமாகியது.
மகேந்திரன் - சுதா திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர். 1975 செப்டம்பரில் இவர்கள் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினார்கள். நடிகர்-நடிகைகள், பட அதிபர்கள், நாடக - திரை உலகப் பிரமுகர்கள் பெருந்திரளாக வந்து வாழ்த்தினார்கள்.
மகேந்திரனின் குடும்பமே கலைக்குடும்பம். அனைவரும் நடிக்கக்கூடியவர்கள். அதற்கு சுதாவும் விலக்கல்ல.
ஒருநாள், "ரகசியம் பரம ரகசியம்'' என்ற நாடகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கச் சென்றபோது, கதாநாயகி வேடத்தில் நடிக்க மனைவி சுதா மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருப்பதைப் பார்த்து திகைத்தார்.
அவர் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி சிரித்துக்கொண்டே, "இன்று வரவேண்டிய ஹீரோயின் வரவில்லை. அதனால் இவளை காலேஜிலே இருந்து அழைத்துக்கொண்டு வந்து, ஒத்திகை பார்த்து ரெடி பண்ணிவிட்டேன்'' என்றார்.
அதுமுதல், நாடகத்துக்கு எந்த நடிகையாவது வராவிட்டால், சுதாவே அந்த வேடத்தில் நடித்து விடுவார்.
ஒய்.ஜி.பார்த்தசாரதி, கடைசி மூச்சு உள்ளவரை நாடகத்தை நேசித்தவர்.
அவர் நாடகங்களில் நடிக்காத காலக் கட்டத்தில், மகேந்திரனின் நாடகங்களைப் பார்க்க வருவார். "வேல் வேல் வெற்றி வேல்'' நாடகத்தை பார்க்க வந்தபோது, மேடையில் சிலர் பேசிக்கொண்டு நின்றனர். அதனால் கோபத்துடன் சத்தம் போட்டுவிட்டு, வீட்டுக்குப்
போய்விட்டார்.மகேந்திரன் நாடகத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது, பார்த்தசாரதிக்கு பக்கவாதம் வந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு "கோமா''வில் இருப்பதாக தகவல் வந்தது. அந்த இக்கட்டான நிலையில், மகேந்திரன் நாடகத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார்.
நாடகம் முடிந்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று அப்பாவைப் பார்த்தார். அவர் உணர்வற்ற நிலையில் இருப்பதைப் பார்த்து கலங்கினார். மறுநாள் மகேந்திரனின் நாடகம் நாகர்கோவிலில் நடப்பதாக இருந்தது. நாடகத்துக்கு போவதா, வேண்டாமா என்று முடிவு செய்ய மகேந்திரனால் இயலவில்லை. அதை தந்தையின் முடிவுக்கே விட எண்ணினார்.
"உங்களை இப்படியே விட்டு விட்டு, ஒப்புக்கொண்டபடி நாடகத்துக்கு நான் போகலாம் என்றால், என் கையை அழுத்துங்கள். இல்லாவிட்டால் இங்கேயே இருக்கிறேன்'' என்று தந்தையின் காதருகே குனிந்து சொன்னார்.
ஐந்து நிமிடம், அசைவற்று இருந்தார், ஒய்.ஜி.பி. பிறகு உடல் லேசாக அசைந்தது. ஒய்.ஜி.பி. தன் கையால், மகேந்திரன் கையை அழுத்தினார். "கோமா'' நிலையிலும், நாடகத்தை குறிப்பிட்டபடி நடத்திவிட வேண்டும் என்பதில் தந்தை உறுதியாக இருப்பதைக் கண்டு, கண்ணீர் விட்டார், மகேந்திரன்.
திட்டமிட்டபடி நாகர்கோவிலுக்கு சென்று நாடகம் நடத்தினார். திரும்பி வந்தபோது, தந்தையை சடலமாகத்தான் பார்த்தார். அவர் வரும்வரை, ஒய்.ஜி.பி.யின் உடலை பார்த்துக்கொண்டவர்கள் நாகேஷ், ராதாரவி, நடிகர் மதன்பாப் ஆகியோர்.
மறுநாள் தன் திருமண நாளுக்காக ஹோமம் செய்யப்போன சிவாஜிகணேசன் பத்திரிகையில் வெளியாகியிருந்த ஒய்.ஜி.பி. மறைவு செய்தியைப் பார்த்து பதறிப்போனார். "என் நல்ல நண்பரை இழந்து விட்டேன்'' என்று கண்களில் கண்ணீர் மல்க கூறிவிட்டு, மகேந்திரன் வீட்டுக்கு விரைந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மகேந்திரனுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
மகேந்திரனுக்கு மிகவும் பிடித்தமான டைரக்டர்களில் முதன்மையானவர் பீம்சிங். அதன் பிறகு ஸ்ரீதர், கே.பாலசந்தர்.
மகேந்திரன், டைரக்டர் ஸ்ரீதரின் பெரிய விசிறி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த "காதலிக்க நேரமில்லை'' படத்தை 100 முறை பார்த்திருக்கிறார்.பழைய பாடல்களை வைத்து "மெல்லிசை நிகழ்ச்சி''யை மகேந்திரன் நடத்தி வருகிறார். அதில், "நினைவெல்லாம் ஸ்ரீதர்'' என்ற தலைப்பில் ஸ்ரீதரின் படப்பாடல்களை பாடி, ஸ்ரீதரை மேடைக்கு அழைத்து கவுரவித்தார்.
"என் டைரக்ஷனில் நீ 3 படங்கள்தானே நடித்திருக்கிறாய்! அதற்காகவா இந்த கவுரவம்?'' என்று நெகிழ்ச்சியுடன் ஸ்ரீதர் கேட்க, "இல்லை சார்! இன்று வரை என்னை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த படம் உங்களுடைய `காதலிக்க நேரமில்லை.' அதற்காகத்தான் இந்த நன்றி'' என்றார், மகேந்திரன்.
கண்கலங்கிய ஸ்ரீதர், மகேந்திரனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார்.

நடிகர் சிவாஜிகணேசனுடன் "கவுரவம்'', "பரீட்சைக்கு நேரமாச்சு'' உள்பட 30 படங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்.

சிவாஜிகணேசனும், மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம், 1961-ல் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது, அதில் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், அப்போது நிறைவேறாமல் போன ஆசை 1971-ல் நிறைவேறியது. "கண்ணன் வந்தான்'' என்ற நாடகம், "கவுரவம்'' என்ற பெயரில் படமாகியது. சிவாஜி அற்புதமாக நடித்த படங்களில் ஒன்று "கவுரவம்.'' அதில் நடிக்கும் வாய்ப்பு, மகேந்திரனுக்கு கிடைத்தது.
"கவுரவம்'' மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, சிவாஜியுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார்.
ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகங்கள் படமாகும்போது, ஒய்.ஜி.பி. நடித்த வேடத்தில் சிவாஜி நடிப்பது வழக்கம். அநேகமாக மகேந்திரனும் இடம் பெறுவார்.
மகேந்திரனின் நூறாவது படம் "உருவங்கள் மாறலாம். இதில் சிவாஜியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தனர். இது வெற்றிப்படம்.
"பரீட்சைக்கு நேரமாச்சு'' என்ற மகேந்திரனின் நாடகத்தைப் பார்த்த பட அதிபரும், டைரக்டருமான முக்தா சீனிவாசன், "இதை சினிமாவாக எடுக்கலாம். சிவாஜியும் நடிக்க வேண்டும். அவரிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விடுங்கள்'' என்றார்.
மகேந்திரனும், சிவாஜியை சந்தித்து கதையைச் சொன்னார். கதை, அதில் தான் நடிக்க வேண்டிய வேடம் அனைத்தையும் கேட்டுக்கொண்ட சிவாஜி, "நல்ல கதை. நடிக்கிறேன்'' என்று ஒப்புக்கொண்டார்.
இந்தக் கதையில் "வரதுக்குட்டி'' (வரதன்) என்ற இளைஞனின் கதாபாத்திரம் முக்கியமானது. நாடகத்தில், அப்பாத்திரத்தில் நடித்தவர் மகேந்திரன். சினிமாவிலும் அந்த வேடம் தனக்குத்தான் வரும் என்பது மகேந்திரனுக்குத் தெரியும் என்றாலும், அது சிவாஜி வாயிலிருந்து வரவேண்டும் என்று கருதினார்.
நடிப்பதாக சிவாஜி ஒப்புதல் கொடுத்த பிறகும், அங்கேயே நகராமல் நின்றார். "ஏன் இன்னும் நிற்கிறே! நீதான் வரதுக்குட்டி!'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார், சிவாஜி.
மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார், மகேந்திரன்.
இந்தப் படத்தில், மகேந்திரனின் நடிப்பு வெறும் நகைச்சுவையுடன் நில்லாமல், மனதைத் தொடுவதாக அமைந்தது.
சிவாஜியுடன் 30 படங்களில் நடித்த அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"ஆரம்பத்தில் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். "பாசமலர்'' படத்தைப்பார்த்தபின், சிவாஜியின் பக்தன் ஆனேன்.
என் தந்தைக்கும், சிவாஜிக்கும் நெருங்கிய நட்புறவு உண்டு. எனவே, சிவாஜியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை தன்னுடைய மூத்த மகனாகவே கருதி, பாசத்தைப் பொழிந்தார்.
மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில், சிவாஜி பேசுகையில், "நல்ல காமெடி என்றால், என் பையன் மகேந்திரனின் நடிப்பைக் கூறலாம்'' என்று குறிப்பிட்டதை, என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரிய விருதாகக் கருதுகிறேன்.
சிவாஜியின் நேரந்தவறாமைக்கும், கடமை உணர்வுக்கும் பல உதாரணங்கள் கூறலாம்.
ஒருநாள் மாலை சுமார் 5 மணிக்கு நானும், டைப்பிஸ்ட் கோபுவும் சிவாஜி வீட்டுக்குச் சென்றோம். சிவாஜி எங்களை வரவேற்று, காபி கொடுக்கும்படி கமலா அம்மாவிடம் கூறினார்.
பேச்சுவாக்கில், "இன்று மாலை 6-30 மணிக்கு நாடகம் இருக்கிறது'' என்று நான் கூறிவிட்டேன். சிவாஜிக்கு வந்ததே கோபம்! எங்கள் இருவருடைய சட்டையைப் பிடித்து `தரதர' என்று இழுத்து வந்து, வாசலில் தள்ளினார்.
"கமலா! டிராமாவை வைத்துக்கொண்டு, என்னைப் பார்க்க வந்திருக்கானுக! காபி கொடுக்காதே!'' என்று சத்தம் போட்டார்.
என்னைப் பார்த்து, "உங்கப்பா போனப்பறம் நாடகத்தின் மீது அக்கறை போயிடுச்சா! மேலே இருந்து அவருடைய ஆவி சபிக்கும். போங்கடா!'' என்று, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக எங்களை விரட்டி அடித்தார்.
நாடகம் என்றால், அவருக்கு அப்படி ஒரு பக்தி.
சிவாஜி அதிகம் நடிக்காமல் இருந்த அவருடைய இறுதிக் காலத்தில், மாதம் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஒருமுறை அவரைப் பார்க்கப் போகவில்லை. எனக்கு சிவாஜியின் வீட்டிலிருந்து போன் வந்தது. "ஏன் வரவில்லை?'' என்று சிவாஜி கேட்பதாகச் சொன்னார்கள்.
அந்த அளவுக்கு சிவாஜி என்னிடம் அன்பு காட்டினார்.
என்னுடைய நாடக வாழ்க்கையின் பொன் விழா (50-ம் ஆண்டு நிறைவு) 2002-ம் ஆண்டில் நடந்தது. அப்போது பிரபு வந்து, சிவாஜியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை எனக்கு அணிவித்தார். "கமலா அம்மாள் தன் மூத்த மகனுக்கு அளித்த பரிசு'' என்று அப்போது அவர் குறிப்பிட்டார். அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன்.
சிவாஜி மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. என்றென்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அவர் படங்கள் ஏற்படுத்துகின்றன.''

ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, சின்னத்திரை ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். 45 வருடங்களுக்கு முன் நாடகத்தில் அடியெடுத்து வைத்த அவர், 35 ஆண்டு காலமாக சினிமாவில் நடித்து வருகிறார்.

அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 200-க்கு மேல்.
ஒய்.ஜி.மகேந்திரன் 1950-ல் பிறந்தார். தந்தை ஒய்.ஜி.பார்த்த சாரதி நாடகக் கலைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தாயார் திருமதி ஒய்.ஜி.பி. (ராஜலட்சுமி) மிகச்சிறந்த கல்வியாளர்.
ஒய்.ஜி.பார்த்தசாரதி, தன் நண்பர் பட்டுவுடன் சேர்ந்து "யு.ஏ.ஏ'' நாடகக்குழுவை 1952-ல் தொடங்கினார். அப்போது மகேந்திரனுக்கு வயது 2. இந்த இரண்டு வயதிலேயே, நாடகம், ஒத்திகை, வசனம் என்ற சூழ்நிலையில் வளர்ந்தார். இதுவே, அவர் பிற்காலத்தில் நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்க அஸ்திவாரமாக அமைந்தது.
மகேந்திரன் நடிப்பில் மட்டுமல்ல; படிப்பிலும் திறமைசாலி. "எம்.பி.ஏ'' பட்டம் பெற்றவர். பட உலகில் உள்ள, விரல் விட்டு எண்ணத்தக்க படிப்பாளிகளில் இவரும் ஒருவர்.
மகேந்திரன் முதன் முதலாக 1961-ல் "பெற்றால்தான் பிள்ளையா'' என்ற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம்தான் பிறகு சிவாஜிகணேசன் நடிப்பில், "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக வந்தது.
தான் நடித்த நாடகம் படமானதால், படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், சினிமாவுக்காக கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நாடகத்தில் நடிக்கத் தொடங்கியது முதல், நடிப்பில் இவர் முன்னேற வேண்டும் என்பதில் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் அம்மாவுக்கோ, இவர் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று ஆசை.
"நாளைக்குப் பரீட்சை. நன்றாகப் படி'' என்று மகனிடம் திருமதி ஒய்.ஜி.பி. சொல்லிவிட்டுப் போவார். மறு நிமிடமே அப்பா ஒய்.ஜி.பி. வந்து, "டேய்! நாளைக்கு நாடகம் இருக்கு. சரியா ஐந்து மணிக்கு வந்துவிடு!'' என்று சொல்வார்.
படித்துக் கொண்டிருக்கும்போதே, மகேந்திரன் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அப்போது, மவுலியும் இவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். "தமிழக லாரல்-ஹார்டி'' என்று கூறும் அளவுக்கு, நகைச்சுவை இரட்டையர்களாகக் கொடிகட்டிப் பறந்தார்கள்.
"பிளைட்-172'' நாடகத்தில் அறிமுகமான இந்த நகைச்சுவை இரட்டையர்கள் "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'', "பத்ம விïகம்'' போன்ற நல்ல நாடகங்கள் மூலமாக, மேலும் புகழ் பெற்றனர்.
மகேந்திரனுக்கு நடிகர் "ஏ.ஆர்.எஸ்'' நிறைய வாய்ப்பளித்து, அவர் நடிப்புக்கு மெருகேற்றினார்.
"நலந்தானா?'' என்ற நாடகத்தில் மகேந்திரன் நடித்துக் கொண்டிருந்தபோது, அவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது.
"நலந்தானா'' நாடகத்தில், மகேந்திரன் நடித்தது "அரைக்கிறுக்கு'' ("செமி லூஸ்'') கேரக்டர். பிரமாதமாக நடித்து, ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றார்.
இந்த நாடகத்தில் ஏ.ஆர்.எஸ்.சும் உண்டு. அலுவலக வேலைகள் காரணமாக, அவர் சில நாட்கள் நடிக்க இயலவில்லை. அப்போது அவர் வேடத்தை நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்று நடித்தார்.
அந்தச் சமயத்தில், மகேந்திரனின் நடிப்பை அவர் பார்த்தார். அந்த நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. பட அதிபர் "கலாகேந்திரா'' கோவிந்தராஜனிடம், மகேந்திரன் நடிப்பைப் பற்றி கூறினார். "அரைக்கிறுக்கு ரோலில், மகேந்திரன் அசத்துகிறார்'' என்று புகழ்ந்தார்.
அந்த சமயத்தில், கே.பாலசந்தர் டைரக்ஷனில் "நவக்கிரகம்'' என்ற படத்தை கலாகேந்திரா தயாரித்துக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில், அரைக்கிறுக்கு வேடத்தில் நடிக்க ஒரு நடிகரை தேடிக்கொண்டிருந்தார்கள்.
மகேந்திரன் பற்றி பாலசந்தரிடம் "கலாகேந்திரா'' கோவிந்தராஜன் சொல்ல, அவர் மகேந்திரனை அழைத்துப்பேசினார். தான் சிந்தித்து வைத்திருக்கும் அரைக்கிறுக்கு ரோலுக்கு, மகேந்திரன் பொருத்தமானவர் என்று முடிவு செய்தார்.
மகேந்திரனும், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக நடித்தார்.
"நவக்கிரகம்'' 3-9-1970-ல் வெளிவந்து, மகேந்திரனுக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது.
பாலசந்தர் டைரக்ஷனில் முதல் படம் அமைந்தது குறித்து, மகேந்திரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. "மோதிரக்கையால் குட்டுப்பட்டதால், சினிமாத்துறையில் முன்னேற முடிந்தது'' என்று கூறுகிறார்.
"நவக்கிரகம்'' வந்த பிறகு, நாடகம், சினிமா இரண்டிலும் "பிசி'' ஆனார், மகேந்திரன். நாடகம் இல்லாதபோது சினிமா, சினிமா இல்லாதபோது நாடகம் என்று இரட்டைக் குதிரைகளிலும் திறமையாக சவாரி செய்தார்.

காரைக்குடி நாராயணன் எழுதிய ``மாதச் சம்பளம்'' என்ற வெற்றி நாடகம், இப்போது கன்னடத்தில் திரைப்படமாகிறது. அதை அவரே இயக்குகிறார்.' சதிலீலாவதி படத்தில் நடித்த ரமேஷ் அரவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 27 படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர், காரைக்குடி நாராயணன். 7 படங்களை டைரக்ட் செய்தார். அவற்றில் 5 படங்கள் சொந்தமாக தயாரித்தவை.
காரைக்குடி நாராயணன் எழுதிய ``மாதச் சம்பளம்'' என்ற வெற்றி நாடகம், இப்போது கன்னடத்தில் திரைப்படமாகிறது. அதை அவரே இயக்குகிறார்.' சதிலீலாவதி படத்தில் நடித்த ரமேஷ் அரவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 27 படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர், காரைக்குடி நாராயணன். 7 படங்களை டைரக்ட் செய்தார். அவற்றில் 5 படங்கள் சொந்தமாக தயாரித்தவை.
தமது நீண்ட கால கலைப் பயணத்தில், சோதனைகளை சந்தித்து, எதிர் நீச்சல் போட்டவர். தமது அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
``திரைப்படத்துறையில் நுழைய வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்த நாள், இன்றும் என் நினைவில் இருக்கிறது. கடுமையான முயற்சிக்குப் பிறகே, கதை-வசன ஆசிரியராக முடிந்தது.
திருவல்லிக்கேணியில் மாத வாடகை 70 ரூபாயில் முன்னாள் தமிழக அமைச்சரும் இந்நாள் மத்திய அமைச்சருமான ரகுபதி அவர்களுடன் ஓர் அறையில் தங்கியிருந்த நாட்கள் மறக்க முடியாதவை. அப்போது அவர் சட்டக்கல்லூரி மாணவர்.
அந்த அறைக்கு சென்றது முதல்தான், எனக்கு நல்ல காலம் வரத்தொடங்கியது என்று கூறலாம்.
``அச்சாணி'' கதையை மூன்றே வரிகளில் மேஜர் சுந்தர்ராஜனிடம் கூறினேன். கதை அவருக்குப் பிடித்து விட்டது. அதற்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க அவர் ஏற்பாடு செய்த போது, ``எனக்கு அட்வான்ஸ் வேண்டாம். முதன் முதலாக எனக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என் தாயாருக்கு பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்க விரும்புகிறேன்'' என்றேன். உடனே நல்ல பட்டுப்புடவை வாங்க மேஜர் ஏற்பாடு செய்தார். 1970-ம் ஆண்டில், 700 ரூபாய் பட்டுப்புடவை வாங்கி அனுப்பினேன்.
பொதுவாக, கதை, வசன ஆசிரியர்களுக்கு டைரக்டராக வேண்டும், தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை வருவதுண்டு. அதில் ஒரு சிலரே வெற்றி பெற்றுள்ளனர்.
நான் வெற்றிகரமாக கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த போது, சிலர் என் டைரக்ஷனில் படம் தயாரிக்க முன் வந்தனர். சிலர் படத்தயாரிப்புக்கு உதவுவதாக உறுதி கூறினர்.
படம் தயாரித்த போது, சிலரின் நம்பிக்கை துரோகத்தினால், நான் பொருளாதார சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. மனைவியின் நகைகளை விற்று, கடனில் ஒரு பகுதியை அடைத்தேன். மேலும் கடன் இருந்தது.
அந்த சமயத்தில் ஏவி.எம்.சரவணன் அவர்களைச் சந்தித்தேன். ``கதை எழுதும் ஆற்றலும், இயக்கும் ஆற்றலும் இருக்கும் போது, எதற்காக சொந்தத் தயாரிப்பு? என் படங்களுக்கு பணி புரியுங்கள்.'' என்று அறிவுரை கூறினார்.
அவர் யோசனைப்படி அர்ஜுன் நடித்த ``தாய் மேல் ஆணை'' படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதினேன். படம் வெற்றி பெற்றது.
தொடர்ந்து சிவசங்கரி எழுதிய ``நெருஞ்சி முள்'' என்ற நாவலை `நேற்றைய மனிதர்கள் என்ற பெயரில், தொலைக்காட்சிக்கு 13 வாரத் தொடராக எழுதினேன். இதில் ஜெய்சங்கர், வினுசக்கரவர்த்தி, ஷாலினி நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
அடுத்தது ``நாணயம்'' என்ற தொடர். இதை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். முதன் முதலாக சின்னத் திரையில் கே.ஆர்.விஜயா நடித்தார். இவருடன் விஜயகுமார், ராஜீவ் நடித்தனர். அந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொடர் கதாசிரியராக என்னை ``மைலாப்பூர் அகடமி'' தெர்ந்தெடுத்து கவுரவித்தது.
பின்னர் மனோரமா நடித்த ``பாட்டிக்கு வயசு 16'' என்ற தொடரையும், கே.ஆர்.விஜயா நடித்த ``காதல் சங்கீதம்'' தொடரையும் எழுதி இயக்கித் தயாரித்தேன்.
இந்த நிலையில், 25 ஆண்டு காலமாக என்னிடம் நட்பு பாராட்டி வந்த படஅதிபர் கே.ஆர்.ஜி, ஒரு படத்தை எழுதி இயக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார். அந்தப் படம்தான் ``மனைவி வந்த நேரம்.''
இந்த படத்தின் கதாநாயகி சீதா. படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, சீதா வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை மணந்து கொண்டதாகவும், அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாற்று. அடுத்த நாள் படப்பிடிப்பு. கதாநாயகி இல்லாமல் என்ன செய்வது? கையை பிசைந்தேன்.
கே.ஆர்.ஜி. கலங்கவில்லை. நடிகை ராதாவுக்கு டெலிபோன் செய்தார். ``மனைவி வந்த நேரம் படத்திற்கு நீங்கள் தான் கதாநாயகி. நாளை பூஜை. படப்பிடிப்புக்கு வந்து விடுங்கள் என்றார்.
அதன்படி, ராதா மறுநாள் வந்து படத்தில் நடித்தார். இந்தப் படத்தில், ரகுமான், சித்தாரா, கே.ஆர்.விஜயா, விஜயகுமார், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நடித்தனர்.
மணவாழ்க்கைக்கு முன், ராதா கடைசியாக நடித்த படம் இதுதான். இப்படம் சுமாராகவே ஓடியது.
ஒரு கால கட்டத்தில் பாரதிராஜா மாடியிலும், நான் கீழேயும் ஒரே வீட்டில் குடியிருந்தோம்.
அப்போது, எனக்கு பாரதிராஜா செய்த உதவிகளை மறக்க முடியாது.
என் கலைப் பயணத்தில் தொய்வு ஏற்பட்ட போதெல்லாம், என் சோர்வைப் போக்கி, எனக்குத் தூண்டுகோலாக இருந்தவர், பத்திரிகையாளரும், நண்பருமான சுதாங்கன்.
திருவல்லிக்கேணி அறையில் நான் தங்கியிருந்தபோது, மாதம் பிறந்ததும் எனக்கு உதவியவர் ஆரூயிர் நண்பர் பழ.கருப்பையா. நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். அவர் திருக்குறள் நூல் ஒன்றில் ``கை உள்ளவரை கை கொடுப்பேன்-நான் அறிந்து கொண்ட நாராயணனை, நானிலம் அறியும் வரை'' என்று எழுதிக் கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்தார். `இவர்களையெல்லாம் நான் மறக்க முடியாது'' இவ்வாறு காரைக்குடி நாராயணன் கூறினார்.
தனக்கு உதவிய பழ.கருப்பையாவுக்கு, தக்க விதத்தில் நன்றி செலுத்தினார், நாராயணன். தான் திரை உலகில் உயர்ந்தாலும், பழ.கருப்பையாவும் பட அதிபர் ஆவதற்கு வழி வகுத்தார். கமல்ஹாசனை வைத்துப் படம் தயாரிக்கும் அளவுக்கு, பழ.கருப்பையா உயர்ந்தார்.
காரைக்குடி நாராயணன், இந்திப் படம் ஒன்றுக்கும் கதை, திரைக்கதை. எழுதினார். படத்தின் பெயர் ``ஹத்கடி'' இதில் கதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர் கோவிந்தா. அதில் அவருக்கு இரட்டை வேடம்.
ஒரு வேடத்தில், தான் ரஜினி ரசிகனாக நடிக்க விரும்பினார். அவர் விருப்பப்படி, ஒரு பாத்திரம் ரஜினியின் விசிறியாகப் படைக்கப்பட்டது. படம் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தை பிரபல படஅதிபர் ஏ.வி.சுப்பாராவ் தயாரித்தார். டி.ராமராவ் டைரக்ட் செய்தார். (இவர், இந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் 67 வெற்றிப் படங்களை இயக்கியவர்)
காரைக்குடி நாராயணனின் மனைவி பெயர் மெய்யம்மை. இவர்களுடைய ஒரே மகள் அழகம்மை.
அழகம்மை-லட்சுமணன் திருமணம், 2003 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. லட்சுமணன், மும்பையில் வங்கி மானேஜராகப் பணியாற்றுகிறார். இந்தத் தம்பதிகளின் குழந்தை ஷியாம் சிதம்பரம்.
அழகம்மை திருமணத்தின் போது நடந்த நிகழ்ச்சிகள், சினிமா படங்களில் வரும் ``கிளைமாக்ஸ்'' காட்சிகள் போல் இருந்தன.
ஒருவர் தந்த பத்திரங்களை நம்பி, ஒரே மகள் திருமணத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்தார், நாராயணன். கடைசி நேரத்தில் அது போலிப் பத்திரம் என்பது தெரிய வந்தது. தலையில் இடி விழுந்தது போல் இருந்தாலும், நிலை குலைந்து போகவில்லை. சிக்கலை சமாளித்து, திருமணத்தை நடத்தி முடித்தார்.
காரைக்குடி நாராயணனின் வெற்றி நாடகங்களில் ஒன்று ``மாதச் சம்பளம்''. அது இப்போது கன்னடத்தில் ``கிருஷ்ண ஜெயந்தி'' என்ற பெயரில் திரைப் படமாகிறது. அதற்கு திரைக்கதை எழுதி, டைரக்ட் செய்யும் பொறுப்பை காரைக்குடி நாராயணன் ஏற்றுள்ளார். இப்படத்தை, ஆடிட்டர் ரமேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ``சதி லீலாவதி'' படத்தில் கமலஹாசனுடன் நடித்த ரமேஷ் அரவிந்த், இந்தப் படத்தின் கதாநாயகன். ``சதிலீலாவதி'' படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட போது, அதில் கமலஹாசனுடன் நடித்ததுடன் டைரக்ஷன் பொறுப்பையும் கவனித்தவர், ரமேஷ் அரவிந்த்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டைரக்ஷன் செய்ய இருப்பது பற்றி நாராயணன் குறிப்பிடுகையில், ``படைப்பாளிக்கு வயதும், தோல்வியும் ஒரு பொருட்டாக இருக்கக் கூடாது. படத் தொழிலில் எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், கதை நன்றாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். நல்ல கதையால், இளைஞர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்'' என்றார்.
படத் தொழிலில் தேக்கம் ஏற்பட்டபோது, இவர் சும்மா இருக்கவில்லை. நிறைய படித்தார்; கதைகள் எழுதினார். தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் ஆயுள் உறுப்பினரான இவர், அங்கு 72 கதைகளை பதிவு செய்து வைத்துள்ளார்.

காரைக்குடி நாராயணன் தயாரித்து இயக்கிய "அச்சாணி'' படம், தமிழக அரசின் பரிசைப் பெற்றது. எனினும் பரிசை வழங்குவதில், எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு அகன்றது.
நாராயணனின் புகழ் பெற்ற மேடை நாடகம் "அச்சாணி.'' சிவகுமார், மேஜர் சுந்தரராஜன் நடித்த இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதன் உரிமையை பிரபல ஒளிப்பதிவாளர் வின்சென்ட் வாங்கி அதே பெயரில் மலையாளத்தில் சினிமாவாகத் தயாரித்தார். பிரேம் நசீர், சுஜாதா நடித்தனர். இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடியது.
காரைக்குடி நாராயணன் சொந்தமாகப் படம் தயாரிக்க முடிவு செய்தபோது, "அச்சாணி'' கதையைத்தான் தேர்வு செய்தார். இந்தக் கதையை ஏற்கனவே மலையாளத்தில் தயாரிக்க வின்சென்ட்டிடம் விற்று விட்டதால், அதன் உரிமை அவரிடம்தான் இருந்தது. எனவே, காரைக்குடி நாராயணன் ரூ.25 ஆயிரம் கொடுத்து, தன் கதையின் உரிமையை தானே வாங்கி, தமிழில் எடுத்தார்!
இந்தப்படத்தில் முத்துராமன், லட்சுமி இணைந்து நடித்தனர். ஷோபா அறிமுகமானார். இளையராஜா இசை அமைத்தார். படம் 1978 பிப்ரவரி 4-ந்தேதி ரிலீஸ் ஆயிற்று. படம் வெற்றி பெற்றது.
இந்தப் படத்திற்கு தமிழக அரசின் 1978-ம் ஆண்டுக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தார்.
பரிசு அறிவிக்கப்பட்ட மறுநாளே, "இந்தப் பரிசை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று கேட்டு, நாராயணனுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.
"அச்சாணி கதை, மலையாள படத்தின் கதை. அதை காப்பி அடித்து நாராயணன் தமிழில் தயாரித்திருக்கிறார். எனவே, பரிசு தரக்கூடாது'' என்று, அரைகுறை ஆசாமி ஒருவர் அரசுக்கு புகார் மனு அனுப்பியதே இதற்குக் காரணம்.
இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த நாராயணன், அரசு தலைமைச் செயலாளரைச் சந்தித்து, நடந்ததை விளக்கினார். "அச்சாணி கதை, நீங்கள் எழுதியதுதான் என்பதை, ஆதாரத்துடன் 24 மணி நேரத்தில் நிரூபியுங்கள். அப்படி நிரூபித்தால், நீங்கள் பரிசு பெறலாம்'' என்று அரசு தலைமைச் செயலாளர் கூறினார்.
"24 மணி நேர கெடு''வை, ஒரு சவாலாகவும், தன்மானப் பிரச்சினையாகவும் எடுத்துக்கொண்டார், நாராயணன். "எனக்கு லட்சம் பெரிதல்ல; லட்சியம்தான் பெரிது. எப்படியும் தங்களிடம் விருது பெறுவேன். இது நிச்சயம்'' என்று எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி கொடுத்தார்.
"அச்சாணி'' நாடகமாக நடந்தபோது, அதை பார்த்து சிறந்த நாடகமாகத் தேர்வு செய்த நீதிபதி வழங்கிய சான்றிதழ், நல்லவேளையாக நாராயணனிடம் இருந்தது. அதை அரசு தலைமைச் செயலாளரிடம் கொடுத்தார்.
அத்துடன் அப்போது அமைச்சர்களாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து ஆகியோரும், "அச்சாணி, காரைக்குடி நாராயணன் எழுதிய நாடகம்தான்'' என்பதை எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தனர்.
மறுநாள் அரசிடம் இருந்து, நாராயணனுக்கு அழைப்பு வந்தது. முதல் அமைச்சரிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொள்ளும்படி அதில் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி மறுநாள், எம்.ஜி.ஆரிடம் இருந்து விருதை பெற்றார்.
எம்.ஜி.ஆர். புன்சிரிப்புடன் விருதை நாராயணனிடம் கொடுத்து, அவரை அன்புடன் தட்டிக் கொடுத்தார்.
விருது வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை, மகிழ்ச்சிகரமாக முடிந்தது.
"மீனாட்சி குங்குமம்'' படத்தை நாராயணன் தயாரித்தபோது, கவிஞர் கண்ணதாசனை அணுகி ஒரு பாடல் எழுதித் தரும்படி கேட்டார். அவரும் சம்மதித்து எழுதித் தந்தார்.
"உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?'' என்று கேட்டார், நாராயணன். "நான் கேட்பதை உன்னால் தரமுடியாது; நீ கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்'' என்றார், கண்ணதாசன்.
"பட பூஜைக்கு தாங்கள் அவசியம் வரவேண்டும்'' என்று நாராயணன் கேட்க, "எத்தனை மணிக்கு பூஜை?'' என்று என்று கவிஞர் கேட்டார்.
"அதிகாலை 6.40 மணிக்கு என்றதும், அவர் சிரித்தார். "அதிகாலையை நான் பார்த்ததே இல்லை! வர முயற்சிக்கிறேன்'' என்றார்.
பூஜை நேரத்துக்கு, கவிஞர் காரில் வந்து இறங்கியதைப் பார்த்து, அனைவரும் வியந்தனர்.
"எங்கள் படத்துக்கெல்லாம் நீங்கள் இப்படி அதிகாலையில் வருவதில்லையே! நாராயணன் படத்துக்கு மட்டும் வந்திருக்கிறீர்களே!'' என்று அருகில் இருந்த ஏவி.எம்.சரவணன் கேட்டார்.
உடனே கண்ணதாசன், காரைக்குடியில் இருந்து கலை உலகுக்கு வந்தவர்களின் பெயர்களை எல்லாம் கடகடவென்று சொன்னார். "இவ்வளவு பேர் காரைக்குடியில் இருந்து வந்திருக்கிறோம். யாராவது, பெயருக்கு முன்னால் ஊர் பெயரை வைத்துக் கொண்டோமா? அவன்தானே ஊர் பெயரை போட்டு, பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறான்! அதனால்தான் வந்தேன்'' என்றார்.

"திக்கற்ற பார்வதி'' படத்தின் வெற்றியினால், காரைக்குடி நாராயணன் டைரக்டராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.

"திக்கற்ற பார்வதி''யில் அவர் எழுதிய வசனங்கள் பெரிதும் பாராட்டப்பட்டதால், 11 படங்களுக்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இவற்றில் "தீர்க்க சுமங்கலி'' பெரிய வெற்றிப்படம். இதில், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்தனர். இந்தப் படத்தில்தான், தமிழ்ப்பட உலகில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார். அவர் இப்படத்தில் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'' என்ற பாடல், மிகப்பிரபலம்.
இந்தப் படத்துக்கு பாடல்களை வாலி எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.
"ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு'' என்ற நகைச்சுவை படத்துக்கு கதை வசனம் எழுதினார். இதில் சிவகுமார், ஜெயசித்ரா நடித்தனர். ரா.சங்கரன் டைரக்ட் செய்தார்.
மூன்று பேர்களை மட்டும் கதாபாத்திரங்களாக வைத்து, "தூண்டில் மீன்'' என்ற கதையை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார். அதற்கு திரைக்கதை வசனம் எழுதினார், காரைக்குடி நாராயணன். மேஜர் சுந்தரராஜன், லட்சுமி, `ஜுலி' படத்தின் கதாநாயகன் மோகன் ஆகியோர் நடித்தனர்.
இந்தப்படத்தை ரா.சங்கரன் டைரக்ட் செய்தார். சிவாஜிகணேசன், மஞ்சுளா நடித்த "அன்பே ஆருயிரே'' படத்துக்கு வசனம் எழுதினார்.
கதை-வசன ஆசிரியராக இருந்த காரைக்குடி நாராயணன், பின்னர் டைரக்டராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.
தனது புகழ் பெற்ற மேடை நாடகமான "அச்சாணி''யை, 1978-ல் திரைப்படமாகத் தயாரித்தார். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளையும் அவரே ஏற்றார். முத்துராமன், லட்சுமி நடித்தனர். இந்தப்படத்தில், ஷோபா அறிமுகமானார். இளையராஜா இசை அமைத்தார்.
"அச்சாணி'' வெற்றிப்படமாக அமைந்தபோதிலும், அதைத் தயாரிக்கும்போது காரைக்குடி நாராயணன் பல சோதனைகளை அனுபவித்தார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"ஒழுங்காக கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். `அச்சாணியை நாம் சேர்ந்து தயாரிக்கலாம். பணப்பொறுப்பு என்னைச் சேர்ந்தது. நீ கதை வசனம் எழுதுவதோடு, டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுக்கொள்' என்றார். நானும் சம்மதித்தேன்.
அழைப்பிதழ் அடிக்கப்பட்ட நிலையில், முதல் நாளே பிலிம் வாங்கக்கூட பணம் இல்லாத நிலையை அவர் உருவாக்கினார். அன்றுதான் நான் முதன் முதலில் புரோ நோட்டில் கையெழுத்து போட்டு கடன் வாங்க நேர்ந்தது.
அச்சாணியில் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. பைனான்ஸ் செய்ய வந்தவர் கூறியதால், ஜெய்சங்கருக்கு பதிலாக முத்துராமன் நடித்தார். ஆனால், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அச்சாணி தொடக்க விழாவில் ஜெய்சங்கர் வந்து கலந்து கொண்டார்.
பணம் இல்லாமல் ஒரே நாள் படப்பிடிப்புடன் படம் நின்றது. ஆறு மாதங்களுக்குப்பிறகு படம் மீண்டும் துவங்கியது.
இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பதிவாக வேண்டிய நிலையில், அருணாசலம் ஸ்டூடியோவில் இயந்திரம் பழுதுபட்டு அன்று காலை தடங்கலானது.
என் நிலையைப் புரிந்து கொண்ட இளையராஜா, அதே இரண்டு பாடல்களையும் 3 மணி நேரத்துக்குள் பிரசாத் ஸ்டூடியோவில் பதிவு செய்து கொடுத்து எனக்கு நிம்மதியைத் தந்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் பாடிய "தாலாட்டு பிள்ளையுண்டு'', ஜானகி பாடிய "மாதா உன் கோயிலில்'' ஆகிய பாடல்களே அவை. இரண்டு பாடல்களும் பிரபலமாயின.
மேலூர் கணேஷ் திரையரங்கின் அதிபர் மீனாட்சி சுந்தரத்தின் உதவியால், தடைகளைக் கடந்து, படத்தை முடித்தேன்.
நான் பட்ட சிரமங்களுக்குப் பலன் கிடைத்தது. படம் வெற்றி பெற்றது. பாராட்டுகளும், பரிசுகளும் கிடைத்தன.''
இவ்வாறு காரைக்குடி நாராயணன் கூறினார்.
அடுத்து இவர் கதை-வசம் எழுதி, இயக்கி தயாரித்த "மீனாட்சி குங்குமம்'' படத்தில், விஜயகுமார், ஸ்ரீபிரியா நடித்தனர்.
இப்படத் தயாரிப்பில் ராமராஜன் துணை இயக்குனராக பணியாற்றினார்.
இந்தப் படத்தில், சின்னப்பதேவர் பாணியில் மிருகங்களை நடிக்க வைத்தார், காரைக்குடி நாராயணன். இதில் ஒரு காட்சி: ஒரு பசு மாட்டிடம் குரங்கு பால் கறந்து, அந்தப் பாலை குழந்தைக்கு புகட்டும்.
முதலில் இந்தக் காட்சியை படமாக்க முயன்றபோது, குரங்கை மாடு எட்டி உதைக்க அது தூரத்தில் போய் விழுந்தது! பிறகு மிருகங்களை பழக்குபவரிடம் இந்தக் காட்சியை நாராயணன் விளக்க, அவர் பசுவிடம் குரங்கை நன்றாகப் பழக விட்டு இரண்டு பிராணிகளுக்கும் இடையே நட்பை உண்டாக்கினார். இரண்டும் சிநேகமான பிறகு, காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டது.
இந்தப் படத்தைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், "மிருகங்களை நடிக்க வைத்து அசத்தியிருக்கிறாய்! குட்டி தேவராகிவிட்டாய்!'' என்று பாராட்டினார்.
ராதிகா, ஜெய்கணேஷ் ஆகியோரின் நடிப்பில், "அன்பே சங்கீதா'' என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார், நாராயணன். இந்தப் படத்தில், இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய "சின்னப்புறா ஒன்று'' என்ற பாடல் அற்புதமாக அமைந்தது.
படத்தைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், "பிமல்ராய் படம் மாதிரி நன்றாக இருக்கிறது. ஆனால் ஓடாது'' என்றார்.
நாராயணன் திடுக்கிட்டவராய், "ஏன்?'' என்று கேட்க, "ராதிகா எவ்வளவு இளமையோடு இருக்கிறார்! அவருக்கு ஜோடியாக ஜெய்கணேஷ் நடிப்பதை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள்'' என்றார், ஏவி.எம்.
அவர் கணித்தபடியே, படம் ஓடவில்லை.
இதன் பிறகு "உன்னிடம் மயங்குகிறேன்'', "நல்லது நடந்தே தீரும்'' ஆகிய படங்களை நாராயணன் தயாரித்து இயக்கினார்.
"நல்லது நடந்தே தீரும்'' தலைப்பு நன்றாக இருந்தபோதிலும், படம் தொடங்கியது முதல் கெட்ட நிகழ்ச்சிகளே நடந்தன. "தகரா'' என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரேகாவை இதில் அறிமுகப்படுத்தினார். மற்றும் சுமன், பானுசந்தர் ஆகியோர் நடித்தனர். படத்தொடக்க விழாவின்போதே, படத் தயாரிப்புக்கு பணம் போடுவதாகக் கூறியிருந்தவர், பின்வாங்கிவிட்டார். பாரதிராஜா, பட அதிபர் கே.ஆர்.ஜி. ஆகியோர் உதவி செய்ததால், படம் தயாராகி முடிந்தது.
அதன் பிறகும் பிரச்சினை. படத்தின் சில காட்சிகளுக்காக, தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படத்தை திரையிட முடியாத நிலைமை. அப்போது, தணிக்கைக் குழுவின் தலைமைப் பதவியில் எல்.வி.பிரசாத் இருந்தார். அவரிடம் நாராயணனும், இளையராஜாவும் சென்று முறையிட்டனர். அவர் யோசனைப்படி, ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது.
அந்தப் படத்தில் இடம் பெறாமல் போன "நிலாக்காயுதே'' என்ற பாடல், பிறகு கமலஹாசன் நடித்த "சகலகலா வல்லவன்'' படத்தில் பயன்படுத்தப்பட்டது.

மூதறிஞர் ராஜாஜி எழுதிய "திக்கற்ற பார்வதி'' நாவல் திரைப்படம் ஆகியது. அதற்கு திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் பெற்றார், 20 வயது காரைக்குடி நாராயணன்.

கதை, வசனம், டைரக்ஷன், தயாரிப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்ட இவருடைய சொந்த ஊர் காரைக்குடி. பெற்றோர்: ராமநாதன் - ஜானகி.
ஏவி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் படித்த காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப்பள்ளியில்தான் இவரும் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், அழகப்பா கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கவிஞர் கண்ணதாசன் தலைமையில் நடந்த கவியரங்கில் கவிதை பாடினார். கண்ணதாசனின் பாராட்டைப் பெற்றார்.
சிறு வயதிலேயே, கவிஞனாக வேண்டும், திரை உலகில் நுழைய வேண்டும் என்பது நாராயணனின் கனவாக இருந்தது. எனவே கல்லூரி படிப்பைத் தொடரவில்லை. வங்கி ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக தந்தை கூறினார். "திரை உலகமே நான் தேடும் திசை'' என்று கூறி விட்டு, சென்னைக்கு வந்தார், காரைக்குடி நாராயணன்.
தீவிர முயற்சிக்குப்பின், நடிகரும், கதை - வசன ஆசிரியருமான ஜாவர் சீதாராமனுக்கு உதவியாளரானார். அவர் பணியாற்றிய "பட்டத்து ராணி'' படத்துக்கு துணை இயக்குனர் ஆனார். ஜெமினிகணேசன், பானுமதி நடித்த இந்தப் படத்தில், டைட்டில் கார்டில் உதவி இயக்குனர் - காரைக்குடி நாராயணன் என்று போடப்பட்டது.
"மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி'', பி.எஸ்.வீரப்பா தயாரித்த "பொண்ணு மாப்ளே'' உள்பட சில படங்களுக்கு துணை டைரக்டராக பணியாற்றினார்.
இந்தக் காலக்கட்டத்தில் ஏவி.எம்.ராஜனுக்காக "பாசதீபம்'' என்ற நாடகத்தை எழுதினார். அது வெற்றி நாடகமாயிற்று.
மேஜர் சுந்தரராஜன், தனது "என்.எஸ்.என். தியேட்டர்ஸ்'' நாடகக் குழுவுக்கு ஒரு நாடகம் எழுதித் தருமாறு கேட்டுக்கொள்ள, காரைக்குடி நாராயணன் எழுதிய நாடகம் "அச்சாணி'' இது மிகப்பெரிய வெற்றி நாடகம். இதில், மேஜரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
இந்த நாடகத்தின் நூறாவது நாள் விழாவில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு, நாராயணனுக்கு கேடயம் வழங்கினார்.
"அச்சாணி'' நாடகத்தை பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான வின்சென்ட், நடிகர் தோப்பில் பாசியுடன் வந்து பார்த்தார். நாடகம் அவரை வெகுவாக கவர்ந்தது.
காரைக்குடி நாராயணனிடம் இருந்து கதை உரிமையை வாங்கி, "அச்சாணி'' என்ற பெயரிலேயே மலையாளத்தில் படமாகத் தயாரித்தார். இதில் பிரேம் நசீர், நந்திதா போஸ், சுஜாதா ஆகியோர் நடித்தனர். பின்னணி பாடகர் ஜேசுதாசும் இதில் ஒரு வேடம் ஏற்று நடித்தார்.
இந்தப்படம் கேரளாவில் வெள்ளி விழா கொண்டாடியது. இதற்காக கேரள அரசின் பரிசும் நாராயணனுக்கு கிடைத்தது.
பின்னர் இவர் எழுதிய "சொந்தம்'' நாடகத்தில் மேஜர் சுந்தரராஜனும், சிவகுமாரும் நடித்தனர்.
இந்த நாடகம் ஏ.சி.திருலோகசந்தர் டைரக்ஷனில் படமாகத் தயாரிக்கப்பட்டது. இதில் முத்துராமன், கே.ஆர்.விஜயா, பிரமீளா ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தின் 4 ஏரியாக்களின் விநியோக உரிமையை ஏவி.எம்.வாங்கினார். படம் நன்றாக ஓடியது.
கன்னடத்தில் பல விருதுகளை பெற்ற சிறந்த படமான "சமஸ்காரா''வின் இணை இயக்குனராகப் பணியாற்றியவர், சிங்கீதம் சீனிவாசராவ். (பிற்காலத்தில் கமலஹாசனின் `ராஜபார்வை', `பேசும் படம்' முதலிய படங்களை இயக்கியவர்.)
இவர், ராஜாஜியின் "திக்கற்ற பார்வதி'' கதையை படமாக்க விரும்பினார். "படம், ஆர்ட் பிலிம் போலவும் இருக்க வேண்டும்; அதே சமயம் மக்கள் விரும்பி பார்க்கக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும்'' என்று எண்ணினார்.
அவர் "அச்சாணி'' நாடகத்தை பார்த்தார். அதன் கதை அமைப்பும், வசனமும் அவருக்குப் பிடித்திருந்தன. எனவே, "திக்கற்ற பார்வதி''க்கு திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பை காரைக்குடி நாராயணனிடம் ஒப்படைத்தார். அப்போது நாராயணனுக்கு வயது 20.
நாராயணனை பார்க்க வேண்டும் என்று ராஜாஜி விரும்பினார். எனவே, பார்த்தசாரதி சுவாமி சபாவின் செயலாளராக இருந்த சேஷாத்திரி, அவரை ராஜாஜியிடம் அழைத்துச்சென்றார்.
நாராயணனை பார்த்த ராஜாஜி, `இவ்வளவு சின்னப்பையன், திரைக்கதை - வசனத்தை ஒழுங்காக எழுதுவானா?' என்று மனதுக்குள் சந்தேகப்பட்டார்.
"குடியினால் ஒரு குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதை விளக்க, இந்தக் கதையை எழுதினேன். குடிப்பதால் சில நன்மைகளும் உண்டு என்று மாற்றி எழுதிவிட மாட்டீர்களே!'' என்று சிரித்துக்கொண்டே நாராயணனிடம் ராஜாஜி தமாஷாகக் கூறினார்.
"இல்லை. கதையில் நீங்கள் வலியுறுத்தியுள்ள கருத்து அணுவளவும் மாறாதபடி வசனத்தை எழுதுகிறேன்'' என்று பதிலளித்தார், இளைஞர்
நாராயணன்."திக்கற்ற பார்வதி''யில் லட்சுமி, ஸ்ரீகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு ராஜாஜியின் சொந்த ஊரான ஓசூரிலேயே நடந்தது. 18 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி, படத்தை முடித்தார், சிங்கீதம் சீனிவாசராவ்.
படம் சிறப்பாக அமைந்தது. இதை ஜெமினி ரிலீஸ் செய்தது.
லட்சுமி அற்புதமாக நடித்திருந்தார். அவருக்கு ஜனாதிபதி பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நூலிழையில் பரிசு வேறொருவருக்குச் சென்றது. (பின்னர், "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்துக்காக ஜனாதிபதி பரிசு பெற்றார், லட்சுமி)
"திக்கற்ற பார்வதி'' வெளியாகும் முன், ராஜாஜி காலமாகிவிட்டார். "ராஜாஜி கூறியபடி அவர் கருத்துக்களை நன்கு வலியுறுத்தும் வகையில், படம் அமைந்திருந்தது. எனினும் படம் வெளியாவதற்கு முன் அவர் மறைந்து விட்ட சோகத்தை, இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை'' என்று கூறினார், காரைக்குடி நாராயணன்.
"திக்கற்ற பார்வதி''யில் பங்கு கொண்ட அனைவரும் புகழ் பெற்றனர். காரைக்குடி நாராயணனின் வாழ்க்கையில், அப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.