என் மலர்
சினிமா

ரமேஷ் அரவிந்த் நடிக்கும் கன்னடப்படம்: கதை எழுதி இயக்குகிறார், காரைக்குடி நாராயணன்
காரைக்குடி நாராயணன் எழுதிய ``மாதச் சம்பளம்'' என்ற வெற்றி நாடகம், இப்போது கன்னடத்தில் திரைப்படமாகிறது. அதை அவரே இயக்குகிறார்.' சதிலீலாவதி படத்தில் நடித்த ரமேஷ் அரவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 27 படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர், காரைக்குடி நாராயணன். 7 படங்களை டைரக்ட் செய்தார். அவற்றில் 5 படங்கள் சொந்தமாக தயாரித்தவை.
காரைக்குடி நாராயணன் எழுதிய ``மாதச் சம்பளம்'' என்ற வெற்றி நாடகம், இப்போது கன்னடத்தில் திரைப்படமாகிறது. அதை அவரே இயக்குகிறார்.' சதிலீலாவதி படத்தில் நடித்த ரமேஷ் அரவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 27 படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர், காரைக்குடி நாராயணன். 7 படங்களை டைரக்ட் செய்தார். அவற்றில் 5 படங்கள் சொந்தமாக தயாரித்தவை.
தமது நீண்ட கால கலைப் பயணத்தில், சோதனைகளை சந்தித்து, எதிர் நீச்சல் போட்டவர். தமது அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
``திரைப்படத்துறையில் நுழைய வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்த நாள், இன்றும் என் நினைவில் இருக்கிறது. கடுமையான முயற்சிக்குப் பிறகே, கதை-வசன ஆசிரியராக முடிந்தது.
திருவல்லிக்கேணியில் மாத வாடகை 70 ரூபாயில் முன்னாள் தமிழக அமைச்சரும் இந்நாள் மத்திய அமைச்சருமான ரகுபதி அவர்களுடன் ஓர் அறையில் தங்கியிருந்த நாட்கள் மறக்க முடியாதவை. அப்போது அவர் சட்டக்கல்லூரி மாணவர்.
அந்த அறைக்கு சென்றது முதல்தான், எனக்கு நல்ல காலம் வரத்தொடங்கியது என்று கூறலாம்.
``அச்சாணி'' கதையை மூன்றே வரிகளில் மேஜர் சுந்தர்ராஜனிடம் கூறினேன். கதை அவருக்குப் பிடித்து விட்டது. அதற்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க அவர் ஏற்பாடு செய்த போது, ``எனக்கு அட்வான்ஸ் வேண்டாம். முதன் முதலாக எனக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என் தாயாருக்கு பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்க விரும்புகிறேன்'' என்றேன். உடனே நல்ல பட்டுப்புடவை வாங்க மேஜர் ஏற்பாடு செய்தார். 1970-ம் ஆண்டில், 700 ரூபாய் பட்டுப்புடவை வாங்கி அனுப்பினேன்.
பொதுவாக, கதை, வசன ஆசிரியர்களுக்கு டைரக்டராக வேண்டும், தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை வருவதுண்டு. அதில் ஒரு சிலரே வெற்றி பெற்றுள்ளனர்.
நான் வெற்றிகரமாக கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த போது, சிலர் என் டைரக்ஷனில் படம் தயாரிக்க முன் வந்தனர். சிலர் படத்தயாரிப்புக்கு உதவுவதாக உறுதி கூறினர்.
படம் தயாரித்த போது, சிலரின் நம்பிக்கை துரோகத்தினால், நான் பொருளாதார சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. மனைவியின் நகைகளை விற்று, கடனில் ஒரு பகுதியை அடைத்தேன். மேலும் கடன் இருந்தது.
அந்த சமயத்தில் ஏவி.எம்.சரவணன் அவர்களைச் சந்தித்தேன். ``கதை எழுதும் ஆற்றலும், இயக்கும் ஆற்றலும் இருக்கும் போது, எதற்காக சொந்தத் தயாரிப்பு? என் படங்களுக்கு பணி புரியுங்கள்.'' என்று அறிவுரை கூறினார்.
அவர் யோசனைப்படி அர்ஜுன் நடித்த ``தாய் மேல் ஆணை'' படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதினேன். படம் வெற்றி பெற்றது.
தொடர்ந்து சிவசங்கரி எழுதிய ``நெருஞ்சி முள்'' என்ற நாவலை `நேற்றைய மனிதர்கள் என்ற பெயரில், தொலைக்காட்சிக்கு 13 வாரத் தொடராக எழுதினேன். இதில் ஜெய்சங்கர், வினுசக்கரவர்த்தி, ஷாலினி நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
அடுத்தது ``நாணயம்'' என்ற தொடர். இதை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். முதன் முதலாக சின்னத் திரையில் கே.ஆர்.விஜயா நடித்தார். இவருடன் விஜயகுமார், ராஜீவ் நடித்தனர். அந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொடர் கதாசிரியராக என்னை ``மைலாப்பூர் அகடமி'' தெர்ந்தெடுத்து கவுரவித்தது.
பின்னர் மனோரமா நடித்த ``பாட்டிக்கு வயசு 16'' என்ற தொடரையும், கே.ஆர்.விஜயா நடித்த ``காதல் சங்கீதம்'' தொடரையும் எழுதி இயக்கித் தயாரித்தேன்.
இந்த நிலையில், 25 ஆண்டு காலமாக என்னிடம் நட்பு பாராட்டி வந்த படஅதிபர் கே.ஆர்.ஜி, ஒரு படத்தை எழுதி இயக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார். அந்தப் படம்தான் ``மனைவி வந்த நேரம்.''
இந்த படத்தின் கதாநாயகி சீதா. படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, சீதா வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை மணந்து கொண்டதாகவும், அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாற்று. அடுத்த நாள் படப்பிடிப்பு. கதாநாயகி இல்லாமல் என்ன செய்வது? கையை பிசைந்தேன்.
கே.ஆர்.ஜி. கலங்கவில்லை. நடிகை ராதாவுக்கு டெலிபோன் செய்தார். ``மனைவி வந்த நேரம் படத்திற்கு நீங்கள் தான் கதாநாயகி. நாளை பூஜை. படப்பிடிப்புக்கு வந்து விடுங்கள் என்றார்.
அதன்படி, ராதா மறுநாள் வந்து படத்தில் நடித்தார். இந்தப் படத்தில், ரகுமான், சித்தாரா, கே.ஆர்.விஜயா, விஜயகுமார், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நடித்தனர்.
மணவாழ்க்கைக்கு முன், ராதா கடைசியாக நடித்த படம் இதுதான். இப்படம் சுமாராகவே ஓடியது.
ஒரு கால கட்டத்தில் பாரதிராஜா மாடியிலும், நான் கீழேயும் ஒரே வீட்டில் குடியிருந்தோம்.
அப்போது, எனக்கு பாரதிராஜா செய்த உதவிகளை மறக்க முடியாது.
என் கலைப் பயணத்தில் தொய்வு ஏற்பட்ட போதெல்லாம், என் சோர்வைப் போக்கி, எனக்குத் தூண்டுகோலாக இருந்தவர், பத்திரிகையாளரும், நண்பருமான சுதாங்கன்.
திருவல்லிக்கேணி அறையில் நான் தங்கியிருந்தபோது, மாதம் பிறந்ததும் எனக்கு உதவியவர் ஆரூயிர் நண்பர் பழ.கருப்பையா. நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். அவர் திருக்குறள் நூல் ஒன்றில் ``கை உள்ளவரை கை கொடுப்பேன்-நான் அறிந்து கொண்ட நாராயணனை, நானிலம் அறியும் வரை'' என்று எழுதிக் கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்தார். `இவர்களையெல்லாம் நான் மறக்க முடியாது'' இவ்வாறு காரைக்குடி நாராயணன் கூறினார்.
தனக்கு உதவிய பழ.கருப்பையாவுக்கு, தக்க விதத்தில் நன்றி செலுத்தினார், நாராயணன். தான் திரை உலகில் உயர்ந்தாலும், பழ.கருப்பையாவும் பட அதிபர் ஆவதற்கு வழி வகுத்தார். கமல்ஹாசனை வைத்துப் படம் தயாரிக்கும் அளவுக்கு, பழ.கருப்பையா உயர்ந்தார்.
காரைக்குடி நாராயணன், இந்திப் படம் ஒன்றுக்கும் கதை, திரைக்கதை. எழுதினார். படத்தின் பெயர் ``ஹத்கடி'' இதில் கதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர் கோவிந்தா. அதில் அவருக்கு இரட்டை வேடம்.
ஒரு வேடத்தில், தான் ரஜினி ரசிகனாக நடிக்க விரும்பினார். அவர் விருப்பப்படி, ஒரு பாத்திரம் ரஜினியின் விசிறியாகப் படைக்கப்பட்டது. படம் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தை பிரபல படஅதிபர் ஏ.வி.சுப்பாராவ் தயாரித்தார். டி.ராமராவ் டைரக்ட் செய்தார். (இவர், இந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் 67 வெற்றிப் படங்களை இயக்கியவர்)
காரைக்குடி நாராயணனின் மனைவி பெயர் மெய்யம்மை. இவர்களுடைய ஒரே மகள் அழகம்மை.
அழகம்மை-லட்சுமணன் திருமணம், 2003 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. லட்சுமணன், மும்பையில் வங்கி மானேஜராகப் பணியாற்றுகிறார். இந்தத் தம்பதிகளின் குழந்தை ஷியாம் சிதம்பரம்.
அழகம்மை திருமணத்தின் போது நடந்த நிகழ்ச்சிகள், சினிமா படங்களில் வரும் ``கிளைமாக்ஸ்'' காட்சிகள் போல் இருந்தன.
ஒருவர் தந்த பத்திரங்களை நம்பி, ஒரே மகள் திருமணத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்தார், நாராயணன். கடைசி நேரத்தில் அது போலிப் பத்திரம் என்பது தெரிய வந்தது. தலையில் இடி விழுந்தது போல் இருந்தாலும், நிலை குலைந்து போகவில்லை. சிக்கலை சமாளித்து, திருமணத்தை நடத்தி முடித்தார்.
காரைக்குடி நாராயணனின் வெற்றி நாடகங்களில் ஒன்று ``மாதச் சம்பளம்''. அது இப்போது கன்னடத்தில் ``கிருஷ்ண ஜெயந்தி'' என்ற பெயரில் திரைப் படமாகிறது. அதற்கு திரைக்கதை எழுதி, டைரக்ட் செய்யும் பொறுப்பை காரைக்குடி நாராயணன் ஏற்றுள்ளார். இப்படத்தை, ஆடிட்டர் ரமேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ``சதி லீலாவதி'' படத்தில் கமலஹாசனுடன் நடித்த ரமேஷ் அரவிந்த், இந்தப் படத்தின் கதாநாயகன். ``சதிலீலாவதி'' படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட போது, அதில் கமலஹாசனுடன் நடித்ததுடன் டைரக்ஷன் பொறுப்பையும் கவனித்தவர், ரமேஷ் அரவிந்த்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டைரக்ஷன் செய்ய இருப்பது பற்றி நாராயணன் குறிப்பிடுகையில், ``படைப்பாளிக்கு வயதும், தோல்வியும் ஒரு பொருட்டாக இருக்கக் கூடாது. படத் தொழிலில் எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், கதை நன்றாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். நல்ல கதையால், இளைஞர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்'' என்றார்.
படத் தொழிலில் தேக்கம் ஏற்பட்டபோது, இவர் சும்மா இருக்கவில்லை. நிறைய படித்தார்; கதைகள் எழுதினார். தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் ஆயுள் உறுப்பினரான இவர், அங்கு 72 கதைகளை பதிவு செய்து வைத்துள்ளார்.

Next Story