என் மலர்
சினிமா

கவுரவம் உள்பட சிவாஜியுடன் 30 படங்களில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன்
நடிகர் சிவாஜிகணேசனுடன் "கவுரவம்'', "பரீட்சைக்கு நேரமாச்சு'' உள்பட 30 படங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்.

சிவாஜிகணேசனும், மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம், 1961-ல் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது, அதில் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், அப்போது நிறைவேறாமல் போன ஆசை 1971-ல் நிறைவேறியது. "கண்ணன் வந்தான்'' என்ற நாடகம், "கவுரவம்'' என்ற பெயரில் படமாகியது. சிவாஜி அற்புதமாக நடித்த படங்களில் ஒன்று "கவுரவம்.'' அதில் நடிக்கும் வாய்ப்பு, மகேந்திரனுக்கு கிடைத்தது.
"கவுரவம்'' மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, சிவாஜியுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார்.
ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகங்கள் படமாகும்போது, ஒய்.ஜி.பி. நடித்த வேடத்தில் சிவாஜி நடிப்பது வழக்கம். அநேகமாக மகேந்திரனும் இடம் பெறுவார்.
மகேந்திரனின் நூறாவது படம் "உருவங்கள் மாறலாம். இதில் சிவாஜியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தனர். இது வெற்றிப்படம்.
"பரீட்சைக்கு நேரமாச்சு'' என்ற மகேந்திரனின் நாடகத்தைப் பார்த்த பட அதிபரும், டைரக்டருமான முக்தா சீனிவாசன், "இதை சினிமாவாக எடுக்கலாம். சிவாஜியும் நடிக்க வேண்டும். அவரிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விடுங்கள்'' என்றார்.
மகேந்திரனும், சிவாஜியை சந்தித்து கதையைச் சொன்னார். கதை, அதில் தான் நடிக்க வேண்டிய வேடம் அனைத்தையும் கேட்டுக்கொண்ட சிவாஜி, "நல்ல கதை. நடிக்கிறேன்'' என்று ஒப்புக்கொண்டார்.
இந்தக் கதையில் "வரதுக்குட்டி'' (வரதன்) என்ற இளைஞனின் கதாபாத்திரம் முக்கியமானது. நாடகத்தில், அப்பாத்திரத்தில் நடித்தவர் மகேந்திரன். சினிமாவிலும் அந்த வேடம் தனக்குத்தான் வரும் என்பது மகேந்திரனுக்குத் தெரியும் என்றாலும், அது சிவாஜி வாயிலிருந்து வரவேண்டும் என்று கருதினார்.
நடிப்பதாக சிவாஜி ஒப்புதல் கொடுத்த பிறகும், அங்கேயே நகராமல் நின்றார். "ஏன் இன்னும் நிற்கிறே! நீதான் வரதுக்குட்டி!'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார், சிவாஜி.
மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார், மகேந்திரன்.
இந்தப் படத்தில், மகேந்திரனின் நடிப்பு வெறும் நகைச்சுவையுடன் நில்லாமல், மனதைத் தொடுவதாக அமைந்தது.
சிவாஜியுடன் 30 படங்களில் நடித்த அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"ஆரம்பத்தில் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். "பாசமலர்'' படத்தைப்பார்த்தபின், சிவாஜியின் பக்தன் ஆனேன்.
என் தந்தைக்கும், சிவாஜிக்கும் நெருங்கிய நட்புறவு உண்டு. எனவே, சிவாஜியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை தன்னுடைய மூத்த மகனாகவே கருதி, பாசத்தைப் பொழிந்தார்.
மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில், சிவாஜி பேசுகையில், "நல்ல காமெடி என்றால், என் பையன் மகேந்திரனின் நடிப்பைக் கூறலாம்'' என்று குறிப்பிட்டதை, என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரிய விருதாகக் கருதுகிறேன்.
சிவாஜியின் நேரந்தவறாமைக்கும், கடமை உணர்வுக்கும் பல உதாரணங்கள் கூறலாம்.
ஒருநாள் மாலை சுமார் 5 மணிக்கு நானும், டைப்பிஸ்ட் கோபுவும் சிவாஜி வீட்டுக்குச் சென்றோம். சிவாஜி எங்களை வரவேற்று, காபி கொடுக்கும்படி கமலா அம்மாவிடம் கூறினார்.
பேச்சுவாக்கில், "இன்று மாலை 6-30 மணிக்கு நாடகம் இருக்கிறது'' என்று நான் கூறிவிட்டேன். சிவாஜிக்கு வந்ததே கோபம்! எங்கள் இருவருடைய சட்டையைப் பிடித்து `தரதர' என்று இழுத்து வந்து, வாசலில் தள்ளினார்.
"கமலா! டிராமாவை வைத்துக்கொண்டு, என்னைப் பார்க்க வந்திருக்கானுக! காபி கொடுக்காதே!'' என்று சத்தம் போட்டார்.
என்னைப் பார்த்து, "உங்கப்பா போனப்பறம் நாடகத்தின் மீது அக்கறை போயிடுச்சா! மேலே இருந்து அவருடைய ஆவி சபிக்கும். போங்கடா!'' என்று, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக எங்களை விரட்டி அடித்தார்.
நாடகம் என்றால், அவருக்கு அப்படி ஒரு பக்தி.
சிவாஜி அதிகம் நடிக்காமல் இருந்த அவருடைய இறுதிக் காலத்தில், மாதம் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஒருமுறை அவரைப் பார்க்கப் போகவில்லை. எனக்கு சிவாஜியின் வீட்டிலிருந்து போன் வந்தது. "ஏன் வரவில்லை?'' என்று சிவாஜி கேட்பதாகச் சொன்னார்கள்.
அந்த அளவுக்கு சிவாஜி என்னிடம் அன்பு காட்டினார்.
என்னுடைய நாடக வாழ்க்கையின் பொன் விழா (50-ம் ஆண்டு நிறைவு) 2002-ம் ஆண்டில் நடந்தது. அப்போது பிரபு வந்து, சிவாஜியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை எனக்கு அணிவித்தார். "கமலா அம்மாள் தன் மூத்த மகனுக்கு அளித்த பரிசு'' என்று அப்போது அவர் குறிப்பிட்டார். அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன்.
சிவாஜி மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. என்றென்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அவர் படங்கள் ஏற்படுத்துகின்றன.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

Next Story