என் மலர்

  ஆட்டோமொபைல்

  இந்தியாவில் டாடா ஹேரியர் கார் அறிமுகம்
  X

  இந்தியாவில் டாடா ஹேரியர் கார் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேரியர் கார் அறிமுகமானது. #TataHarrier  டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் கார் இந்தியாவில் அறிமுகமானது. புதிய ஹேரியர் காரின் XE வேரியன்ட் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  டாடா ஹேரியர் கார் டாடாவின் OMEGA பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த பிரிவில் வெளியாகி இருக்கும் பெரிய கார்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாக்கயிருக்கும் டாடா நிறுவனத்தின் முதல் கார் டாடா ஹேரியர் ஆகும்.

  காரின் முன்புற லைட்டிங் பிரத்யேகமாக காட்சியளிக்கிறது. எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் கார் பொனெட்டின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் பம்ப்பர் அருகில் பொருத்தப்பட்டுள்ளது. ஹேரியர் காரில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று 17-இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.  பின்புறம் எளிய டெயில்-லேம்ப் வடிவமைப்புடன் ஹேரியர் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது மிக அழகாக காட்சியளிக்கிறது. காரின் உள்புறம் லெதர், அலுமினியம், கிளாஸ் பிளாக் பேனல்கள் மற்றும் மரத்தாலான பாகங்களை கொண்டு உருவாகியிருக்கிறது. இதில் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் ரேப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.

  டாடா ஹேரியர் கார் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் ஜீப் காம்பஸ் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடலான XZ விலை ரூ.16.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×