என் மலர்

  ஆட்டோமொபைல்

  டாடா ஹேரியர் 7 சீட்டர் இந்திய வெளியீட்டு விவரம்
  X

  டாடா ஹேரியர் 7 சீட்டர் இந்திய வெளியீட்டு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் 7 சீட்டர் வெர்ஷனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Tatamotors #harrier  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் 7 சீட்டர் காரை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியானது. எனினும், சமீபத்திய தகவலை டாடா பிராண்டு தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மூலம் வெளியாகியிருக்கிறது.

  இதுவரை 7 சீட்டர் டாடா H7X பற்றி அதிகப்படியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் லேண்ட் ரோவரின் டி8 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கும் என தெரிகிறது. 

  புதிய டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.  இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  எஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
  Next Story
  ×