டென்னிஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - ரிபாகினா, கலினினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Update: 2023-05-20 09:15 GMT
  • இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ரோம்:

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் குடர்மெடோவா, உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் கலினினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை குடர்மெடோவா 7-5 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கலினினா 6-2 என கைப்பற்றினார்.

இறுதியில், கலினினா 7-5, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதேபோல் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா, லாத்வியாவைச் சேர்ந்த ஆஸ்டா பென்கோவுடன் மோதினார். இதில் ரிபாகினா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News