டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-03-21 16:08 GMT   |   Update On 2024-03-21 16:08 GMT
  • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா வென்றார்.

மியாமி:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவுடன் மோதினார்.

இதில் ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News