டென்னிஸ்

மியாமி ஓபன்: ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-03-27 12:25 GMT   |   Update On 2024-03-27 12:25 GMT
  • முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என இழந்தது.
  • 2-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் போபண்ணா ஜோடி அதை கைப்பற்றியது.

மியாமி ஒபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணைந்து விளையாடி வருகிறது.

இந்த ஜோடி செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா)யை காலிறுதியில் எதிர்கொண்டது.

முதல் இடத்தில் இருக்கும் போபண்ணா ஜோடிக்கு செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது.

முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என அதிர்ச்சிகரமாக இழந்தது. 2-வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடியது. இருந்தபோதிலும் செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியாக போபண்ணா ஜோடி 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றியது.

3-வது செட்டில் போபண்ணா ஜோடி கை ஓங்கியது. அந்த செட்டை 10-7 எனக் கைப்பற்றி போபண்ணா ஜோடி 3-6, 7(7)-6(4), 10-7 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போபண்ணா- மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா ஜோடி, மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 7(7)-6(3) என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தாமஸ் மகாச்- ஜேனிக் சின்னெர், அலேக்சாண்டர் ஸ்வெரேவ்- பேஃபியன் மரோஸ்சன், நிக்கோலஸ் ஜார்ரி- டேனில் மெட்வதேவ், அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Tags:    

Similar News