டென்னிஸ்

முதல் முறையாக கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் நுழைந்தது சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி

Update: 2023-01-25 10:02 GMT
  • 3-வது தரவரிசையில் உள்ள நீல் ஸ்குப்ஸ்கி-டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
  • போட்டிக்கு முன்னதாக இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று சானியா அறிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சானியா இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News