டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-04-18 15:47 GMT   |   Update On 2024-04-18 15:47 GMT
  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
  • இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மேட்ரிட்:

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார்.

இதில் காஸ்பர் ரூட் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் காஸ்பர் ரூட், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியுடன் மோதுகிறார்.

Tags:    

Similar News