டென்னிஸ்

கார்லோஸ் அல்காரஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் - அல்காரஸ், சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Update: 2023-03-17 19:21 GMT
  • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
  • இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், இத்தாலி வீரர் சின்னரை சந்திக்கிறார்.

வாஷிங்டன்:

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் அகர் அலிசமெவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அல்காராஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். முதல் செட்டை 6-4 என சின்னர் கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-4 என பிரிட்ஸ் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.

இதன்மூலம் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், சின்னருடன் மோத உள்ளார்.

Tags:    

Similar News