தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள்

இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி சிக்கல்கள் நிறைந்தது - வல்லுநர் வெளியிட்ட அதிரடி தகவல்

Update: 2022-05-26 07:01 GMT
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவன சாதனங்கள் உற்பத்திக்காக சீனாவை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆப்பில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் முடிவு குறித்த புது தகவலை பிரபல ஆப்பிள் வல்லுனர் மிங் சி கியோ தெரிவித்து உள்ளார்.

சீனாவில் இருந்து ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றும் முடிவு சிறப்பான ஒன்று தான், ஆனால் இவ்வாறு செய்யும் போது சீனாவை சேர்ந்த ஆப்பிள் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் போது வீண் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக ஆப்பிள் தனது சாதனங்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.இதோடு சீனாவுக்கு அடுத்தப்படியாக உற்பத்திக்கான சிறந்த சூழல் கொண்ட நாடுகளில் வியட்நாம் முதன்மையானது என அவர் தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் அரசியல் மோதல்கள் காரணமாகவும் ஆப்பிள் தனது உறிபத்தியை சீனாவில் இருந்து மாற்ற முடிவு எடுத்துள்ளது. 

இதுகுறித்து வெளியான மற்ற தகவல்களின் படி ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் வியட்நாமில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். முந்தைய தகவல்களில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 
Tags:    

Similar News