தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் M13 5ஜி

இணையத்தில் லீக் ஆன புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

Update: 2022-05-26 04:21 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. 

அதிகம் அறியப்படும் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே, செங்குத்தாக பொருத்தப்படும் மூன்று கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், போனின் இடது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்கள் வழங்கப்படுகிறது.சாம்சங் கேலக்ஸி M13 5ஜி மாடல் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் SM-M135M மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்தது. 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 5ஜி 6.5 இன்ச் புல் HD+ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 6GB, 128GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News