தொழில்நுட்பம்
ரியல்மி ஜிடி

சத்தமின்றி உருவாகும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ

Published On 2021-10-30 15:42 IST   |   Update On 2021-10-30 15:42:00 IST
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


ரியல்மி நிறுவனம் சமீபத்தில் ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில், ரியல்மி நிறுவனம் ஜிடி ப்ரோ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ஜிடி ப்ரோ வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. 



அதன்படி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ப்ரோ மாடல் என்பதால், இதில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனை விட சில அப்கிரேடுகள் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Similar News