தொழில்நுட்பம்

லொகேஷன் டிராக்கிங்கை செயலிழக்க செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்

Published On 2019-02-21 07:21 GMT   |   Update On 2019-02-21 07:21 GMT
ஃபேஸ்புக் நிறுவன சேவையில் பேக்கிரவுண்டு லொகேஷன் டிராக்கிங்கை பிளாக் செய்வதற்கென புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook #SocialMedia



ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வருகிறது. சர்ச்சைகளில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவிக்கும் ஃபேஸ்புக் தற்சமயம் புதிய செட்டிங்களை தனது சேவையில் இணைத்திருக்கிறது. 

முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய செட்டிங்களை கொண்டு பயனர்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை இயக்க முடியும். செட்டிங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள், பயனர் செயலியை பயன்படுத்தாத சமயத்தில் இரண்டடுக்கு முறையில் உங்களது இருப்பிட விவரங்களை இயக்குவது பற்றி முடிவு செய்யும். 



முதலாவதாக பயனர் தனது இருப்பிட விவரங்களை இயக்க ஃபேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா என்றும் இரண்டாவதாக பின்னணியில் தகவல்களை சேகரிக்கலாமா என ஃபேஸ்புக் பயனரிடம் கேட்கும். சேவையை பயன்படுத்தாத போது ஏன் பின்னணி தகவல்களை சேகரிக்க வேண்டும் என்கிறீர்களா?

இவ்வாறு தகவல்களை சேகரிப்பதன் மூலம் அருகாமையில் இருக்கும் நண்பர்கள், செய்ய வேண்டியதற்கான பரிந்துரைகள் மற்றும் குறிப்பாக பனர்களின் அருகாமையில் இருப்பவர் பற்றி பரிந்துரைக்க முடியும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு, ஆப்பிள் பின்னணியில் தகவல்களை சேகரிக்கும் வசதியை வழங்கியிருக்கிறது. இதனால் ஃபேஸ்புக் இதற்கென தனியே அப்டேட் வழங்கி வேண்டிய அவசியம் எழவில்லை. எனினும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களின் லொகேஷன் செட்டிங்களை மாற்ற வேண்டுமா என கேட்கப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.

Tags:    

Similar News