தொழில்நுட்பம்
ஆப்பிள் மேப்ஸ் செயலியில் நேவிகேஷன் மற்றும் கார் முன்பதிவு வசதி அறிமுகம்
ஆப்பிள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய அப்டேட் மூலம் நேவிகேஷன் மற்றும் கார் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. #AppleMaps
இந்தியாவில் ஆப்பிள் மேப்ஸ் செயலியில் நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பயணங்களில் நடக்கும் போதோ அல்லது கார்களில் பயணிக்கும் போது வழி சொல்கிறது.
புதிதாக நேவிகேஷன் வசதி தவிர உபெர் மற்றும் ஒலா போன்றவற்றில் இருந்து கார் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்குகிறது. இதனை இயக்க மேப்ஸ் செயலயின் ரைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். எனினும், பொது போக்குவரத்து சார்ந்த விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
அதிகளவு விவரங்களை சேகரித்து சரியான தகவல்களை வழங்கினாலும், கூகுள் மேப்ஸ் சேவையுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மேப்ஸ் சற்று பின்தங்கியிருக்கிறது. ஏற்கனவே தாமதமாகி இருந்த போதும் மாற்றம் செய்ய ஆப்பிள் முன்வந்திருப்பதே ஆப்பிள் ப்ரியர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை தெரிவிப்பதோடு, குறிப்பிட்ட முகவரியில் பணி நடைபெறும் நேரம், சரியான முகவரி, தொடர்பு விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்களை வழங்குகிறது.
இவை தவிர ஆப்பிள் மேப்ஸ் செயலியில் பொது போக்குவரத்து விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் முப்பறிமான காட்சி போன்ற வசதிகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.