தொழில்நுட்பம்

பப்ஜி விளையாட மாணவர்களுக்கு மட்டும் தடை

Published On 2018-12-16 04:52 GMT   |   Update On 2018-12-16 04:52 GMT
வி.ஐ.டி. கல்லூரியின் மாணவர்கள் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #PUBG



ஸ்மார்ட்போன் ஆன்லைன் கேமிங்கில் இந்த ஆண்டின் பிரபல கேமாக பப்ஜி இருக்கிறது. பப்ஜி விளையாட்டு உலகில் அதிகம் விற்பனையாகும் கணினிக்கான் கேம்களில் முன்னணி இடம் பிடித்திருக்கிறது. பப்ஜி விளையாடுவதால் மாணவர் தங்கும் விடுதியின் சூழல் பாதிக்கப்படுவதால் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட வி.ஐ.டி. மாணவர் தங்கும் விடுதி தடை விதித்துள்ளது.

இத்தகவலை தங்கும் விடுதியின் காப்பாளர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக ரெடிட் தளத்தில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பப்ஜி விளையாடுவதை தவிர்த்து உடல் மற்றும் மன வலிமையை பரைசாற்றும் விளையாட்டுக்களில் கவனம் செலுத்தவும், மாணவர்கங்கள் தங்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விடுதியின் காப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.



புதிய விதிமுறையை மாணவர்கள் பின்பற்ற தவறும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதிக்கு மட்டும் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாணவிகள் தங்கும் விடுதியில் இதுபோன்ற தடை விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பொறியியல் கல்லூரியில் பப்ஜி விளையாட மாணவர்களுக்கு தடை விதிக்ககப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கேமிற்கான தடை இருபாலினத்தவருக்கும் பொருந்தாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சுகாதார மையம் கேமிங்கை ஆரோக்கிய சீர்கேடாக அறிவித்தது. இத்துடன் மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் அறிவியல் துறைக்கான தேசிய ஆணையம் பப்ஜி கேம் பலரை அடிமையாக்கி இருப்பதாக தெரிவித்திருந்தது.
Tags:    

Similar News