தொழில்நுட்பம்

எல்.ஜி. WK9 எக்ஸ் பூம் ஸ்மார்ட் டிஸ்ப்ளே அறிமுகம்

Published On 2018-11-20 09:52 GMT   |   Update On 2018-11-20 09:52 GMT
எல்.ஜி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. #LG #SmartDisplay



எல்.ஜி. நிறுவனம் ஒருவழியாக தனது புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய சாதனம் எல்.ஜி. எக்ஸ் பூம் ஏ.ஐ. தின்க் WK9 என அழைக்கப்படுகிறது. எல்.ஜி.யின் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அதன்பின் மற்ற நாடுகளில் கிடைக்கும்.

முன்னதாக இந்த சாதனம் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் அசிஸ்டன்ட் வசதியுடன் மெரிடியன் ஆடியோ சவுன்ட் தரம் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு WK9 மாடலில் மெரிடியன் ஆடியோவுடன் கூடிய அதிக துல்லியமான ஆடியோ, குரல் அங்கீகாரம் மற்றும் சிறப்பான பேஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.



5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 20 வாட் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் எல்.ஜி. ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, எல்.ஜி தின்க் வசதி கொண்ட மற்ற சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் எல்.ஜி. WK9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே 1.51 கிலோ எடை கொண்டுள்ளது.

எல்.ஜி. WK9 எக்ஸ் பூம் ஸ்மார்ட் டிஸ்ப்ளே விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. 

கூகுள் மற்றும் மெரிடியன் ஆடியோவுடனான கூட்டணி மூலம் சிறப்பான ஹோம் என்டர்டெயின்மென்ட் அனுபவத்தை ஸ்மார்ட் வசதிகளுடன் வழங்க முடிகிறது. மற்ற ஏ.ஐ. ஸ்பீக்கர்களை போன்று இல்லாமல், WK9 மாடல் முதல் ஹை ஃபிடிலிட்டி ஆடியோ வசதி கொண்டதாக இருக்கிறது. என எல்.ஜி. ஹோம் என்டர்டெயின்மென்ட் கம்பெனி வியாபார பிரிவு தலைவர் யங்-ஜெ தெரிவித்தார்.
Tags:    

Similar News