தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள்?

Published On 2018-11-01 08:52 GMT   |   Update On 2018-11-01 08:52 GMT
வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பது குறித்து அந்நிறுவன துணை தலைவர் க்ரிஸ் டேனிய்ல்ஸ் முக்கிய தகவலை வழங்கி இருக்கிறார். #whatsappstatus



வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேட்டஸ் பகுதிகளில் விளம்பரங்கள் வழங்கப்படலாம் என் தகவல் வெளியானது. தற்சமயம் வாட்ஸ்அப் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வணிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடத் துவங்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

வணிகமயமாக்கும் முயற்சிகளின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மக்களை வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும். வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியான நிலையில், இதன் செயல்பாட்டுக்கு வரும் காலம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை இதுவரை சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புகைப்படம், எழுத்துக்கள், வீடியோக்கள், அனிமேஷன் ஜிஃப் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக மறைந்து போகும். தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் ஃபேஸ்புக் விளம்பர அமைப்பின் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வாட்ஸ்அப் இணை நிறுவனரான ப்ரியான் ஆக்டன் பதவி விலகினார். மேலும் வாட்ஸ்அப் என்க்ரிப்ஷன் அம்சங்களை தளர்த்தி, செயலியில் இருந்து வருமானம் ஈட்டுவதில் மார்க் சூக்கர்பர்க் தீவிரமாக இருக்கிறார் என ப்ரியான் ஆக்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
Tags:    

Similar News