தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் 6டி வெளியீடு மற்றும் சிறப்பம்சங்கள்

Published On 2018-09-22 04:36 GMT   |   Update On 2018-09-22 04:36 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. #OnePlus6T #smartphone



ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி மாடல் டீசர் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 6டி விளம்பர வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சிறப்பம்சங்களை அந்நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இத்துடன் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களும் தெரியவந்துள்ளது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அக்டோபர் 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. உதை உறுதி செய்யும் வகையில் டீசர் படம் ஒன்று இணையத்தில் லீக் ஆனது, இதில் ஸ்மார்ட்போனின் வெளியீடும் அதே தினத்தில் நடைபெறும் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.



புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் "ஸ்கிரீன் அன்லாக்" என அழைக்கிறது. 

“ஸ்கிரீன் அன்லாக் வசதி ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யும் வழிமுறையை வெகுவாக குறைக்கிறது. என்றாலும், டிஸ்ப்ளேவுடன் ஃபேஸ் அன்லாக் போன்ற வசதி இருந்தால், பயனர்களுக்கு வசதியான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள முடியும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.”

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு இருப்பதால் ஸ்மார்ட்போனில் புதிதாக அதிகளவு தொழில்நுட்பத்தை புகுத்த முடிந்தது என ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் தெரிவித்தார்.



ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6 மாடலில் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம். 

விலையை பொருத்த வரை புதிய ஒன்பிளஸ் 6டி மாடல் அமெரிக்காவில் 550 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.39,718 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. #OnePlus6T #smartphone
Tags:    

Similar News