தொழில்நுட்பம்

ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதியுடன் 32 இன்ச் அளவில் உலகின் முதல் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

Published On 2018-09-21 06:55 GMT   |   Update On 2018-09-21 06:55 GMT
ஐஃபால்கான் பிரான்டு 32 இன்ச் டி.வி. மாடலில் ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதியை உலகில் முதல் முறையாக வழங்கியுள்ளது. #smarttv



டி.சி.எல் நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. பிரான்டு ஆன ஐஃபால்கான் உலகில் முதல் முறையாக 32-இன்ச் (32F2A) ஹெச்.டி. ரெடி, கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி.யை ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது.

ஐஃபால்கான் 32F2A டி.வி.-யில் மைக்ரோ டிம்மிங் மற்றும் வைட் எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரையில் நிறங்கள் பிரகாசமாகவும், இயற்கை நிறங்களை மிகத்துல்லியமாக பிரதிபலிக்கும். ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் இன்-பில்ட் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பொழுதுபோக்கு மற்றும் இதர விவரங்களை தேடுவது எளிமையாவதோடு வீட்டில் உள்ள மற்ற கனெக்ட்டெட் சாதனங்களை குரல் மூலம் இயக்க முடியும். புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 32-இன்ச் 32F2 மாடலை போன்றே டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.



ஐஃபால்கான் 40F2A மற்றும் ஐஃபால்கான் 49F2A ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அக்டோபர் 2018-இல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுமட்டுமின்றி 32, 40 மற்றும் 49 இன்ச் தவிர, ஐஃபால்கான் நிறுவனம் 65 மற்றும் 75 இன்ச் டி.வி. மாடல்களை பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

75 இன்ச் டி.வி. மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆடியோ அனுபம் சிறப்பாக இருக்கும் என ஐஃபால்கான் தெரிவித்துள்ளது. புதிய ஃபால்கன் 32F2A ஸ்மார்ட் டி.வி. விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரயிருக்கும் நிலையில், இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
Tags:    

Similar News