தொழில்நுட்பம்

ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு ஆப் புதிய பேமென்ட் ஆப்ஷன்

Published On 2018-08-17 07:40 GMT   |   Update On 2018-08-17 07:40 GMT
ஐ.ஆர்.சி.டி.சி.-யின் ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் கட்டணம் செலுத்த புதிய பேமென்ட் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. #PhonePe #IRCTC
 

இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. உடன் இணைவதை போன்பெ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் பணம் செலுத்த இனி போன்பெ பயன்படுத்தலாம்.

இதனால் போன்பெ செயலியை பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி பயனர்கள் யு.பி.ஐ., கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் போன்பெ வாலெட் பயன்படுத்தி தங்களது வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

"இந்தியாவில் பயணங்களை மேற்கொள்ள முன்பதிவுகளுக்கு நம்பத்தகுந்த தளமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணியின் மூலம் இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமென்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்த முடியும்," என போன்பெ நிறுவனததின் கார்திக் ரகுபதி தெரிவித்தார்.

"இந்த கூட்டணி மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்கள் சிறப்பான முன்பதிவு அனுபவம் பெறுவதோடு டிஜிட்டல் பேமென்ட் நன்மைகளை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்கும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இ-வாலெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தட்கல் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலிய மூலம் முன்பதிவு செய்ய முடியும். வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நோக்கில் இ-வாலெட் சேவையில் பயனர்கள் முன்கூட்டியே பணத்தை சேர்த்து வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மொபைல் வாலெட் போன்றே இந்த பணம் கொண்டு டிக்கெட் முன்பபதிவின் போது பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News