தொழில்நுட்பம்
கோப்பு படம்

வாட்ஸ்அப் மெசேஜ்களை இப்படியெல்லாம் ஹேக் செய்யலாமாம் - ஆராய்ச்சியாளர்களின் பகீர் தகவல்

Published On 2018-08-10 07:59 GMT   |   Update On 2018-08-10 07:59 GMT
வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை ஹேக் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். #WhatsApp #Hacking


வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது. 

எனினும் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதன்படி செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என தெரியவந்துள்ளது.

செக் பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பிழை, செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும் என்பது கூடுதல் தகவல். 


கோப்பு படம்

இவ்வறு செய்வதால் ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டியபடி தகவல்களை மாற்றியமைப்பதோடு, போலி தகவல்களை பரப்பும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு தீர்வுகள் சார்ந்த நிறுவனமான செக் பாயின்ட் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என வலைதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

- ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரிவிக்காத தகவல்களை, தெரிவித்ததாக மாற்றியமைக்க முடியும்.

- க்ரூப்-இல் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.

- தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் காண்பிக்க செய்ய முடியும். 

புதிய பிழை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என செக் பாயின்ட் தெரிவித்துள்ளது. #WhatsApp #Hacking
Tags:    

Similar News