தொழில்நுட்பம்

இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

Published On 2018-06-29 10:09 GMT   |   Update On 2018-06-29 10:09 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் புதிய விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.




இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. 

அறிமுகமான ஒரே மாதத்தில் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பட்டுள்ளது. ரூ.2,000 தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ6 இந்தியாவில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. புதிய விலை குறைப்பு இரண்டு மாடல்களுக்கும் பொருந்தும். 



சாம்சங் கேலக்ஸி ஏ6 சிறப்பம்சங்கள்:

- 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm பிராசஸர்
- மாலி T830 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சர்
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஹெச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ6 (32 ஜிபி) மாடல் பிளாக், புளு மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் விலை குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 64 ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News