அறிந்து கொள்ளுங்கள்

சிட்டி போன்ற ரோபோட் அறிமுகம் செய்த சியோமி

Published On 2022-08-12 11:36 GMT   |   Update On 2022-08-12 11:36 GMT
  • சியோமி நிறுவனம் மிக்ஸ் போல்டு 2 அறிமுக நிகழ்வில் சைபர் ஒன் ரோபோட்-ஐ அறிமுகம் செய்தது.
  • இதன் மொத்த எடை 52 கிலோ, உயரம் 1.77 மீட்டர்கள் ஆகும்.

சியோமி நிறுவனம் நேரலை நிகழ்ச்சியில் தனது சைபர் ஒன் ரோபோட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது மனித உருவம் கொண்ட ரோபோட் ஆகும். மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ரோபோட் மணிக்கு 3.6 கிமீ வேகத்தில் செல்லும்.

சியோமி சைபர் குடும்பத்தில் இரண்டாவதாக அறிமுகமாகி இருக்கிறது சைபர் ஒன் ரோபோட். முன்னதாக கடந்த ஆண்டு நான்கு பயோனிக் கால்களை கொண்ட ரோபோட் டாக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோட் பற்றிய தகவல்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.


இந்த ரோபோட் மொத்த எடை 52 கிலோ, உயரம் 1.77 மீட்டர்கள் ஆகும். நடப்பது, ஓடுவது, பொருட்களை எடுப்பது உள்ளிட்டவைகளை இந்த ரோபோட் செய்யும். மேலும் மணிக்கு அதிகபட்சமாக 3.6 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைபர் டாக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சைபர் ஒன் ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோட் 45 வித்தியாசமான உணர்ச்சிகளை கண்டறிய முடியும். இதன் முகம் வளைந்த OLED பேனல் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் உள்ள இரு மைக்ரோபோன்கள் காதாகவும், இரண்டு கேமராக்கள் மூன்று கோணங்களில் பார்க்கவும் வழி செய்கிறது. 13 மணிக்கட்டுகள் மூலம் இந்த ரோபோட் 21 வித்தியாசமான டிகிரிக்களில் நடமாட முடியும். இதில் உள்ள மோட்டார்கள் 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

ஆரம்பக் கட்டத்தில் உள்ள சியோமி சைபர் ஒன் ரோபோட்-ஐ உருவாக்க சுமார் ஒரு லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 லட்சத்து 68 ஆயிரம் வரை செலவாகும் என சியோமி நிறுவன தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்தார். 

Tags:    

Similar News