அறிந்து கொள்ளுங்கள்

ஐந்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சியோமி ஸ்மார்ட்போன் - எந்த மாடல் தெரியுமா?

Published On 2022-08-16 12:03 GMT   |   Update On 2022-08-16 12:03 GMT
  • சியோமி நிறுவனத்தின் மிக்ஸ் போல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது.
  • முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சியோமி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் ரெட்மி K50 எக்ஸ்டிரீம் எடிஷன், சியோமி மிக்ஸ் போல்டு 2 ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. பெயருக்கு ஏற்றார் போல் மிக்ஸ் போல்டு 2 அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சியோமி மிக்ஸ் போல்டு மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

இன்று மிக்ஸ் போல்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை சீனாவில் நடைபெற்றது. விற்பனை துவங்கிய ஐந்தே நிமிடங்களில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக சியோமி அறிவித்து இருக்கிறது. எனினும், இந்த விற்பனையில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.


அம்சங்களை பொருத்தவரை சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடலில் 8.02 இன்ச் சாம்சங் Eco² OLED 120Hz LTPO 2.0 மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற ஸ்கிரீன் 6.56 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED பேனல் ஆகும். இது டால்பி விஷன் மற்றும் HDR 10+ சப்போர்ட், வெளிப்புற ஸ்கிரீனுக்கு கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை விவரங்கள்:

சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடல் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 250 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 11 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 645 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Tags:    

Similar News