அறிந்து கொள்ளுங்கள்

இப்போவே தீபாவளி தான் - சியோமி ஸ்மார்ட்போனுக்கு ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி

Update: 2022-09-21 07:07 GMT
  • சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடலுக்கு சிறப்பு சலுகை விற்பனையில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி இந்த ஸ்மா்ட்போனிற்கு ரூ. 2 ஆயிரம் வரை விலை குறைப்பு வழங்கப்படுகிறது.

சியோமி நிறுவனத்தின் 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனிற்கு "தீபாவளி வித் Mi" சிறப்பு விற்பனையில் அதிரடி விலை குறைப்பு வழங்கப்படுகிறது. சியோமி 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் தற்போது ரூ. 34 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இத்துடன் வங்கி சலுகைகள் மற்றும் இதர ஆபர்களை சேரக்கும் போது இந்த ஸ்மார்ட்போனை ரூ. 28 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும்.

சியோமி 11T ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த விலை அமேசான் மற்றும் சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் சியோமி 11T ப்ரோ 5ஜி மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 36 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 38 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பிரத்யேக சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இவை ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 28 ஆயிரத்து 999 வரை குறைக்கிறது. முன்னதாக சியோமி 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி 11T ப்ரோ 5ஜி அம்சங்கள்:

6.67 இன்ச் AMOLED FHD+ 1080x2400 பிக்சல் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்

அட்ரினோ 660 GPU

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5

108MP பிரைமரி கேமரா

8MP அல்ட்ரா வைடு கேமரா

5MP டெலிமேக்ரோ கேமரா

16MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

5000 எம்ஏஹெச் பேட்டரி

120 வாட் ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

Tags:    

Similar News