அறிந்து கொள்ளுங்கள்

மெசேஜ்களை இனி பொறுமையா அழிச்சுக்கலாம் - வாட்ஸ்அப்பில் வந்தாச்சு புதிய அம்சம்

Published On 2022-07-04 10:33 GMT   |   Update On 2022-07-04 10:33 GMT
  • தவறான மெசேஜ்களை 1 மணிநேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகளுக்குள் அழித்துக் கொள்ளலாம் என்கிற கால அளவு தற்போது உள்ளது.
  • விரைவில் வர உள்ள அப்டேட்டில் இந்த கால அளவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப்பில் எண்ணற்ற அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 2 புதிய அம்சங்களை அந்நிறுவனம் அதன் பயனர்களுக்கு விரைவில் வழங்க உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தவறாக அனுப்பிவிட்டாலோ, அல்லது அனுப்பப்பட்ட மெசேஜ்களில் எழுத்துப் பிழை இருந்தாலோ அதனை அழித்துவிடும் அம்சம் ஏற்கனவே உள்ளது.

முதலில் தவறான மெசேஜ்களை 8 நிமிடங்களுக்குள் அழிக்க வேண்டும் என நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இதன் கால அளவு 1 மணிநேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகள் என நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த கால அளவு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை 2 நாட்கள் 12 மணிநேரத்திற்குள் அழித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த காலக்கட்டத்திற்குள் ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட் என நீங்கள் அனுப்பிய தரவுகள் எதுவாக இருந்தாலும் அழித்துக் கொள்ள முடியும். இதுதவிர பயனர்கள் வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வெளியேறும் போது நீங்கள் வெளியேறியதற்கான மெசேஜ் குரூப் அட்மினுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும் என்றும், இதன்மூலம் சத்தமின்றி வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வெளியேற முடியும். இந்த இரு அம்சங்களும் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News