அறிந்து கொள்ளுங்கள்

விரைவில் இந்தியா வரும் விவோவின் முதல் Foldable ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?

Published On 2024-05-23 09:11 GMT   |   Update On 2024-05-23 09:11 GMT
  • இந்தியாவில் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
  • ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X போல்டு 3 ப்ரோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஜூன் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வரவிருக்கிறது.

புதிய விவோ X போல்டு 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், செய்ஸ் பிராண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

 


இந்தியாவில் விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X போல்டு 3 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

சீனாவில் விவோ X போல்டு 3 ப்ரோ மாடலின் விலை CNY 9,999 இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் இந்திய விலை ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது விவோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News