அறிந்து கொள்ளுங்கள்

புதிய சிம் கார்டு வாங்க நீங்களே KYC செய்துகொள்ளலாம் - வி அதிரடி அறிவிப்பு!

Published On 2023-03-22 09:13 GMT   |   Update On 2023-03-22 09:13 GMT
  • பயனர்கள் புதிய சிம் கார்டு வாங்கும் போது தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதி 2021-இல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
  • சுயமாக KYC செய்து கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக வி இருக்கிறது.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் 2021 பயனர்கள் தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதியை அறிவித்து இருந்தது. தற்போது இதனை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை வி பெற்றுள்ளது.

வி நிறுவனத்தின் Self-KYC வழிமுறை முதற்கட்டமாக கொல்கத்தா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. வி Self KYC பயனர்கள் புதிய சிம் கார்டு ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து, தாங்கள் விரும்பும் சலுகையை தேர்வு செய்து தங்களின் வீட்டில் இருந்தபடி KYC வழிமுறையை நிறைவு செய்து கொள்ளலாம்.

 

இந்த வழிமுறையின் மூலம் பயனர்கள் நேரடியாக ரிடெயில் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது. புதிய சேவை மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டு இருக்கும் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாக வி நிறுவனம் தெரிவித்துள்ளது. படிப்படியாக இந்த சேவை நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும்.

வி நிறுவனத்தின் Self KYC வழிமுறையை மேற்கொள்வது எப்படி?

வி வலைத்தளம் சென்று விரும்பிய சலுகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்த சலுகையை உறுதிப்படுத்தி ஆர்டர் செய்யவும். இதற்கு மற்றொரு மொபைல் நம்பர் மூலம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும்.

இனி Self KYC மேற்கொள்ள UIDAI வலைத்தளத்தில் ஆதார் சமர்பித்தல் வழிமுறையை நிறைவு செய்ய வேண்டும்.

அடுத்து குறைந்தபட்சம் பத்து நொடிகளுக்கு லைவ் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

ஆர்டர் செய்தபின் டிஜிட்டல் வெரிஃபிகேஷனை முடித்ததும், வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு அவர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டுவிடும். 

Tags:    

Similar News