அறிந்து கொள்ளுங்கள்

49 ரூபாய்க்கு புது சலுகையை அறிமுகம் செய்தது வோடபோன் ஐடியா நிறுவனம்

Published On 2022-06-29 09:56 GMT   |   Update On 2022-06-29 09:56 GMT
  • வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வி செயலியில் 20 மொழி பாடல்கள் உள்ளன.
  • காலர் டியூன் சந்தாதாரர்கள் வி ஆப் மியூசிக்கை எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் சந்தாதாரர்கள் போன் செய்யும் போது வழக்கமாக வரும் 'ட்ரிங் ட்ரிங்' ஒலிக்கு மாற்றாக தாங்கள் விரும்பும் பாடல்களை தேர்வு செய்து, அவற்றை இன்கமிங் அழைப்புகளுக்கு செட் செய்யும் வசதியை பெற்று உள்ளனர். இதன்மூலம் பயனர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம்.

வி செயலியில் விளம்பர தொந்தரவு இன்றி சமீபத்திய ஹிட் பாடல்களில் துவங்கி ஏராளமான பாடல்கள் ஹெச்.டி. தரத்தில் வழங்கப்படுகிறது. இதில் 20 மொழி பாடல்கள் உள்ளன. பத்து பிரிவுகளில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த பாடல்களை பயனர்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


காலர் டியூன் சந்தாதாரர்கள் வி ஆப் மியூசிக்கை எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய பாடல்களை காலர் டியூனாக வைக்க பயனர்கள் மாதாந்திர அடிப்படையில் சந்தா கட்டி பயன்படுத்தலாம்.

அப்படி காலர் டியூனுக்கான மாதாந்திர சந்தா விலை ரூ. 49-இல் இருந்து துவங்குகிறது. இது மூன்று மாதத்திற்கு ரூ. 99, ஒரு வருடத்துக்கு ரூ. 249 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. காலர் டியூன் சேவையில், இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News