அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் ஸ்னாப்சாட் பிளஸ் சேவை அறிமுகம் - எதற்கு தெரியுமா?

Update: 2022-08-11 11:52 GMT
  • ஸ்னாப்சாட் நிறுவனம் ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.
  • இந்த சேவை பயனர்களுக்கு பிரத்யேக அம்சங்களை வழங்கி வருகிறது.

ஸ்னாப்சாட் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே இந்த சேவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஸ்னாப்சாட் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 49 ஆகும். இந்த சேவையை கொண்டு பயனர்கள் விசேஷ அம்சங்கள் மற்றும் ஸ்னாப்சாட் சோதனை செய்து வரும் புதிய அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.

ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை பயன்படுத்துவோர் ஆறு பிரத்யேக அம்சங்களை பெற முடியும். அந்த வகையில் பயனர்கள் ஆப் ஐகானை மாற்றிக் கொள்ளவும், எத்தனை பேர் ஸ்டோரிக்களை திரும்பி திரும்பி பார்க்கின்றனர் என்பதை டிராக் செய்ய முடியும்.

ஸ்னாப்சாட் பிளஸ் பயனர்கள் நண்பர்களில் ஒருவரை தங்களின் ப்ரோஃபைலில் பெஸ்ட் பிரெண்ட் ஆக வைத்து கொள்ள முடியும். முன்னதாக ஸ்னாப்சாட் பிளஸ் சேவை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் மற்ற நாடுகளில் ஸ்னாப்சாட் பிளஸ் சேவை கட்டணம் 3.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 317 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News