அறிந்து கொள்ளுங்கள்

சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைப்பு

Published On 2022-06-30 09:51 GMT   |   Update On 2022-06-30 09:51 GMT
  • சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் வருகிறது.
  • 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு உள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M32 மாடல் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் வருகிறது.

அறிமுகமானபோது இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.


இந்நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12 ஆயிரத்து 999-க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 14 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், குவாட் கேமரா செட் அப், 20MP செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News