அறிந்து கொள்ளுங்கள்

காப்புரிமையை மீறியதாக புகார்... சட்ட சிக்கலில் சாம்சங் நிறுவனம்

Published On 2022-06-10 12:51 IST   |   Update On 2022-06-10 12:51:00 IST
  • ஜெர்மனியில் உள்ள டசல்டோர்ஃப் பிராந்திய நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
  • கே. மிஸ்ரா எல்எல்சி என்ற நிறுவனம்தான் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

காப்புரிமை மீறல் தொடர்பாக சாம்சங் நிறுவனம் தற்போது மற்றொரு சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மீதமுள்ள பேட்டரி அளவை கணிக்கும் அல்காரிதத்தைப் தவறாக பயன்படுத்தியதற்காக அந்நிறுவனத்தின் மீது காப்புரிமை மீறல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கே. மிஸ்ரா எல்எல்சி என்ற நிறுவனம்தான் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன் பேட்டரி தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமையை மீறியதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியில் உள்ள டசல்டோர்ஃப் பிராந்திய நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


கே.மிஸ்ராவின் குற்றச்சாட்டின்படி, ஸ்மார்ட்போனில் மீதமுள்ள பேட்டரி ஆயுளைக் கண்காணிப்பதாக கூறி பயனர்களின் இதர செயல்பாடுகளையும் சாம்சங் நிறுவனம் நோட்டம் விடுகிறது. அது மிகப்பெரிய காப்புரிமை மீறல் என தெரிவித்துள்ளது.

தற்போதைய சாம்சங் கேலக்ஸி சாதனங்களில் உள்ள ஆண்ட்ராய்டு அடிப்படையிலான அம்சம் காப்புரிமைகளை ஒத்து இருப்பதாகவும், முந்தைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைக் கொண்டுள்ள சாம்சங் போன்களில் மட்டும் காப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் கே.மிஸ்ரா தரப்பு தெரிவித்துள்ளது. காப்புரிமை சர்ச்சை எப்படிப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Tags:    

Similar News