அறிந்து கொள்ளுங்கள்

பயனர் விவரங்கள் திருடப்பட்டதா? ஷாக் கொடுத்த சாம்சங்!

Published On 2022-09-04 04:15 GMT   |   Update On 2022-09-04 04:15 GMT
  • சாம்சங் நிறுவன பயனர் விவரங்கள் களவாடப்பட்டதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  • இந்த விவகாரம் குறித்து சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பதில் அளித்து இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் பயனர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆன விவகாரத்தில் வெளிப்படையாக பதில் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அரங்கேறிய சைபர் செக்யுரிட்டி சம்பவத்தில் சாம்சங் பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட தகவல்களான பிறந்த, பிறந்த தேதி மற்றும் இதிர விவரங்கள் இணையத்தில் வெளியாகி விட்டன.

எனினும், இதை விட மிக முக்கிய தகவல்களான கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயனர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துவங்கி விட்டதாக சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த விவகாரம் பற்றி சாம்சங் நிறுவனம் பொது வெளியில் தகவல் வெளியிட்டு உள்ளது.


"சாம்சங்-ஐ பொருத்தவரை பாதுகாப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாங்கள் சமீபத்தில் சைபர் செக்யுரிட்டி சம்பவத்தை கண்டறிந்து இருக்கிறோம். இதில் பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 2022 மாத வாக்கில் சாம்சங் அமெரிக்க சிஸ்டம்களில் இருந்து தகவல்களை இயக்கி இருக்கின்றன. ஆகஸ்ட் 4, 2022 வாக்கில் சில பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம்," என சாம்சங் தனது வலைதள பதிவில் தெரிவித்து இருக்கிறது.

பாதிக்கப்பட்ட சிஸ்டம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் துவங்கி விட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சைபர்செக்யுரிட்டி நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சோஷியல் செக்யுரிட்டி நம்பர்கள், கிரெடிட், டெபிட் கார்டு நம்பர்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. எனினும், பெயர், தொடர்பு விவரம், பிறந்த தேதி, சாதனம் பதிவு விவரம் உள்ளிட்டவை வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News