அறிந்து கொள்ளுங்கள்

வெளியீட்டுக்கு முன் லீக் ஆன ஒப்போ ஸ்மார்ட்போன் hands on வீடியோ!

Update: 2022-12-02 08:12 GMT
  • ஒப்போ நிறுவனத்தின் புதிய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • புதிய ஒப்போ போல்டபில் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒப்போ இன்னோ டே நிகழ்வில் தனது முதல் போல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்தது. ஒப்போ ஃபைண்ட் N பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனத்தின் மேம்பட்ட வெர்ஷன் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் என அழைக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் hands-on வீடியோ வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. அறிமுகம் செய்யப்படாத டெஸ்ட் சாதனங்களை போன்றே ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலிலும் பாதுகாப்பிற்கு கேஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் சிறிய இன்னர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர பன்ச் ஹோல் ரக கட்-அவுட், 32MP செல்ஃபி கேமரா, 6.8 இன்ச் ஃபோல்டிங் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன. இதன் வெளிப்புற டிஸ்ப்ளே மற்ற ஃப்ளிப் ரக போல்டபில் போனை விட பெரியதாக காட்சியளிக்கிறது. அதன்படி புது மாடலில் 3.26 இன்ச் அளவில் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

வெளிப்புற டிஸ்ப்ளே அருகில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸர், 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News