அறிந்து கொள்ளுங்கள்

இரண்டு புது ஃபோல்டபில் போன்களை அறிமுகம் செய்யும் ஒப்போ

Published On 2022-11-23 07:13 GMT   |   Update On 2022-11-23 07:13 GMT
  • ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
  • ஒப்போ நிறுவனத்தின் இன்னோ டே 2022 சிறப்பு நிகழ்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

ஒப்போ நிறுவனம் "2022 இன்னோ டே" நிகழ்வை அடுத்த மாதம் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ஒப்போ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தெரிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி 2021 இன்னோ டே நிகவ்வு நடைபெற்றது. இதில் ஒப்போ நிறுவனம் ஏராளமான புது தொழில்நுட்பங்கள் - மரிசிலிகான் X NPU, ஒப்போ ஏர் கிலாஸ், ஒப்போ ஃபைண்ட் N மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை அறிவித்தது. கடந்த ஆண்டை போன்றே இந்த முறையும் ஒப்போ புதிய தொழில்நுட்பங்களை தனது 2022 இன்னோ டே நிகழ்வில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தனது வெய்போவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஒப்போ இன்னோ டே 2022 நிகழ்வு டிசம்பர் மாத மத்தியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ஏராளமான புது சாதனங்கள் அறிவிக்கப்படும். இதே நிகழ்வில் ஃபைண்ட் N2, ஃபைண்ட் N2 ஃப்ளிப் போன்ற மடிக்கக்கூடிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் 7.1 இன்ச் அளவில் உள்புறமாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 5.5 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4520 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 32MP செல்ஃபி கேமரா, உள்புறத்தில் 32MP கேமரா, 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஃபோல்டபில் ஸ்மார்ட்போனின் எடை 240 கிராம்களுக்கும் குறைவாக இருக்கும் என்றும் இது பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News