அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலையை சத்தமின்றி உயர்த்திய நத்திங்

Published On 2022-08-18 12:17 GMT   |   Update On 2022-08-18 12:17 GMT
  • நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன் விலையை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது.
  • முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறனை மேம்படுத்தும் அப்டேட் வெளியிடப்பட்டு இருந்தது.

நத்திங் போன் 1 மாடலின் விலை இந்தியாவில் ரூ. 1000 உயர்த்தப்பட்டது. விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். ரூபாய் மதிப்பில் மாற்றம் மற்றும் இதர காரணங்களால் விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது என நத்திங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் நத்திங் போன் 1 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரண்ட் பேக் பேனல், க்ளிஃப் இண்டர்பேஸ், 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்லாம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.


புதிய விலை விவரங்கள்:

நத்திங் போன் 1 (8 ஜிபி ரேம், 128 ஜிபி) ரூ. 33 ஆயிரத்து 999

நத்திங் போன் 1 (8 ஜிபி ரேம், 256 ஜிபி) ரூ. 36 ஆயிரத்து 999

நத்திங் போன் 1 (12 ஜிபி ரேம், 256 ஜிபி) ரூ. 39 ஆயிரத்து 999

புது அறிவிப்பின் படி நத்திங் போன் 1 மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அம்சங்கள்:

நத்திங் போன் 1 மாடலில் 6.55 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் OLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News