அறிந்து கொள்ளுங்கள்

மிக குறைந்த விலையில் புது நத்திங் போன் - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்

Update: 2022-08-03 07:04 GMT
  • நத்திங் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சந்தையில் நத்திங் போன் (1) மாடல் மூலம் களமிறங்கியது.
  • இந்த நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் (1) சமீபத்தில் அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் போன் (1) லைட் எனும் பெயரில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்றே குறைவாக இருக்கும் என்றும் இதன் பின்புறத்தில் குளேயிங் பேக் மற்றும் 900 எல்இடி-க்கள் நீக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர் வழங்கப்படலாம். இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.


நத்திங் போன் (1) லைட் மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படலாம். நத்திங் போன் (1) மாடலின் 8 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நத்திங் போன் (1) மாடலில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

இத்துடன் டூயல் 50MP கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பிரைமரி லென்ஸ் சோனி IMX766 யூனிட் ஆகும். நத்திங் போன் (1) மாடலில் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படாது. சார்ஜரை பயனர்கள் ரூ. 1500 கொடுத்து தனியே வாங்க வேண்டும். இந்த விலைக்கு 45 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News