அறிந்து கொள்ளுங்கள்

80 வாட் சார்ஜிங்குடன் புது ஐகூ ஸ்மார்ட்போன்? இணையத்தில் லீக் ஆன தகவல்

Published On 2022-08-12 07:47 GMT   |   Update On 2022-08-12 07:47 GMT
  • ஐகூ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • இது Z6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

ஐகூ நிறுவனம் முற்றிலும் புதிய Z6 மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரிஜினல் Z6 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மாடல் அதிவேக பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

CNMO வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி சீன நிறுவனமான ஐகூ தனது Z6 மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. இது முற்றிலும் புது மாடலாக இருக்குமா அல்லது பேஸ் Z6 ஸ்மார்ட்போனின் ரிப்ரெஷ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ Z6 மாடலில் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.


அந்த வகையில், புது Z6 மாடல் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் LCD பேனல் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம். இவை தவிர இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்படுகிறது.

புதிய ஐகூ Z6 மாடலின் ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. புது Z6 வேரியண்ட் பற்றி ஐகூ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம். 

Tags:    

Similar News