அறிந்து கொள்ளுங்கள்

ஃபிளாக்‌ஷிப் தர அம்சங்களுடன் வெளியாகும் ஐகூ 11

Update: 2022-11-29 08:25 GMT
  • ஐகூ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் அம்சங்கள் டீசர்களில் தெரியவந்துள்ளது.
  • புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஐகூ 11 ஸ்மார்ட்போன் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் தனித்துவம் மிக்க அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.

அந்த வரிசையில் இன்று வெளியான டீசரில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் முற்றிலும் புதிய மெமரி மற்றும் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போனில் LPDDR5X ரக ரேம், UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த இரு அம்சங்கள் மிகவும் சில ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் அறிமுகமாவதும் உறுதியாகி இருக்கிறது. எனினும், இந்த வெர்ஷனில் சற்றஏ பழைய UFS 3.1 ரக ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

ஸ்கிரீனை பொருத்தவரை ஐகூ 11 மாடலில் சாம்சங் உற்பத்தி செய்த E6 AMOLED, QHD+ ரெசல்யூஷன், அதிகபட்சம் 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

Tags:    

Similar News