அறிந்து கொள்ளுங்கள்

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர்

Published On 2024-03-26 12:38 GMT   |   Update On 2024-03-26 12:38 GMT
  • பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
  • மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலுரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பனோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.

முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி தவுலுரி சர்பேஸ் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை அடுத்து, தவுலுரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார். இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் தவுலுரி இணைந்துள்ளார்.

Tags:    

Similar News